தமிழ்
திரையுலகில், மனோபாலா (8
திசம்பர் 1953 – 3
மே 2023) நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளரும் யூடியூப்பரும் ஆவார். தென்னிந்திய திரைப்பட உலகின் சிறந்த
நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்தார்.
நடிகர்
மனோபாலா நாகர்கோவில் - மருங்கூர் பகுதியில் கடந்த 1953ம்
ஆண்டு பிறந்தார்.
தமிழ்
சினிமாவின் அடித்தளமாக இருக்கும் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக 1970களின்
முற்பகுதியில் தன்னை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தியவர் தான் மனோபாலா
இவர்
கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜாவுடன் 1979-ல்
"புதிய வார்ப்புகள்" திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதனை
தொடர்ந்து தன்னை சினிமாவிற்குள்ளும் அறிமுகப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற
எண்ணத்தில் பாக்யராஜை ஹீரோவாக வைத்து “பாரதிராஜா” இயக்கிய “புதிய வார்ப்புகள்”
திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் என்றி கொடுத்தார்.
நடிகனாக
இருந்து கொண்டு கடந்த 1982ல்
நடிகர் கார்த்திக், சுஹாசினி
இருவரையும் வைத்து “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம்
மனோபாலாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதனால்
அடுத்தடுத்து நான் உங்கள் ரசிகன், பிள்ளை
நிலா, சிறை பறவை,
தூரத்துப் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள்
இயக்கினார். அதிலும் பார்க்க இவர் நடிகர் ரஜினி காந்தை வைத்து இயக்கிய ஊர்க்காவலன்
திரைப்படம் ரஜினியை ஒரு மாஸ் கதாநாயகனாக மக்களுக்கு கொண்டு சேர்த்தது.
இது
போல் பிரபு, சத்யராஜ்,
விஜயகாந் 90
களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அத்தனை நடிகர்களையும் வைத்து படம்
இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் கதை எழுதுவதிலும் வித்தகராக இருந்தார்.
இதனால்
இவர் சினிமா, சீரியல்
என எல்லா பக்கத்திலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
மனோபாலா
40 திரைப்படங்களையும்,
16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3
தொலைக்காட்சித் திரைப்படங்களையும்
இயக்கியுள்ளார். ஜூலை
2009 வரை 175
திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகரும்
இயக்குநருமான மனோபாலா தன்னுடைய 69 ஆவது
வயதில் காலமானார்.
மறைந்த
மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவி, ஹரீஷ் என்ற மகன் உள்ளனர்.
கலைஞர்கள் உடல் மறைந்தாலும் அவர்கள் புகழ் என்றும்
மறைவதில்லை.
:செமனுவேந்தன் / s.manuventhan
0 comments:
Post a Comment