நவீன உலகில் நம்மை நெருங்கும் புதுமைகள்

                                    👈அறிவியல்=விஞ்ஞானம்👉


நோய்க்குரிய கிருமியை, விரைவில் காட்டிக் கொடுக்கும் லேசர்

ஒரு திரவத்தில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அது, திரவத்திலுள்ள கிருமிகளை ஆய்வகத்தில் வளரச் செய்வதுதான். இதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், லேசர் கதிரை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய முறையில், சில நிமிடங்களில், திரவத்திலிருப்பது என்ன பாக்டீரியா உள்ளது என்பதை அறியலாம்.

 

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள லேசர் தொழில்நுட் பத்தில், சில முன்னேற்பாடுகள் தேவை. திரவத்தில் உள்ள பாக்டீரியா, லேசர் ஒளியை பிரதிபலிக்கும். அந்த பிரதிபலிப்பு, பாக்டீரியாவின் ரகத்துக்கு ரகம் மாறும்.

 

ஆனால், பாக்டீரியாவுடன் பிற நுண் பொருட் களும் லேசரை பிரதிபலித்து, சமிக்ஞையை குளறு படியாக்கிவிடும். எனவே, திரவத்தில் தங்க நுண் துகள்களைக் கலந்து, ஒரு கண்ணாடி தகட்டில், மிகச் சிறிய துளிகளாக வைத்து லேசர் ஒளியை செலுத் தினால், தங்கத் துகளோடு ஒட்டிய பாக்டீரியாக்கள் சற்று பிரகாசமாக ஒளிரும்.

 

இதன் மூலம் அது என்ன வகை பாக்டீரியா என்பதை ஆய்வகத்தினரால் உடனே கண்டறிய முடியும். இது நடைமுறைக்கு வந்தால் விரைவில் நோயறிய முடியும்.

 💫 💫 💫 💫 💫 💫 

சூரிய மின் பலகைகள்


நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால்
, அதன் கீழே ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிலைமை. அதை மாற்ற வருகிறது, பகுதி ஒளியை கீழே அனுப்பும் சூரிய மின் பலகைகள்.

 

அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் பசுமைக் குடிலில், சூரிய ஒளியை பாதி எடுத்துக் கொண்டு மீதியை கீழே உள்ள செடிகளுக்கு அனுப்புகிறது. இதன் மூலம், செடிகள் முன்பை விட அதிக செழிப்பாக வளர்கின்றன என்பது தான் இதில் மிகவும் ஆச்சரி யப்படத்தக்க தகவல்.

 

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரியப் பல கைகளை கரிமப் பொருட்களால் தயாரித்தனர். வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட, அவை பாதியளவு வெளிச்சத்தை வெளியேற்றும். இதை பசுமைக் குடிலில் பயன்படுத்தியபோது, கணிசமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தது. அதைவிட, கீழே குடிலில் இருந்த செடிகள் அடர்த்தியாக வளர்ந்தன. செடிகளுக்கு அத்தனை சூரிய ஒளி தேவைப்படுவதில்லை என்பதோடு, கெடுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்த நுட்பத்தை வர்த்தகமயமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

  💫 💫 💫 💫 💫 💫 

பாதிப்பில்லா சாயங்கள்...


சுவரில் பூசும் வண்ணங்கள் முழுவதும் வேதிப் பொருட்களால் ஆனவை
, அதில் கணிசமானவை நச்சுப் பொருட்கள் வேறு. சுவர் வண்ணங்கள் தயாரிக்கப்படும்போதே, கார்பன் உமிழ்ந்து காற்றைக் கெடுக்கின்றன. மேலும், தொழிற்சாலை, மேலும் தொழிற்சாலை அலுவலகம் வீடு என்று எங்கு பூசினாலும் ஆண்டு கணக்கில் உள்ளிருக்கும் காற்றினை வேதிப்பொருள் கசிவால் நஞ்சு ஆக்குகின்றன.

 இந்த நிலையில் பிரான்சைச்  சேர்ந்த 'ஈகோர்ட்' என்ற உயிரித்  தொழில்நுட்ப நிறுவனம், அதே பெயரில் உயிரிமுறையில் சேகரிக்கப்பட்ட பயோபாலிமர்களைக் கொண்டு வண்ணங்களையும், அவற்றை பிணைக்கும் பசைப்  பொருட்களையும் உருவாக்கியுள்ளது. இரும்பு அலுமினிய பலகைகள், சிமெண்ட் சுவர்கள் என்று பூசுவதற்கான பலவகை பெயிண்டுகளை உருவாக்கியுள்ளது. வீடுகளில் வீடுகளின் சுவர்களில் இவற்றை பூசினால், சுவாசக் கோளாறு, பிற  ஒவ்வாமைகள் எதுவும் வராது என ஈகோர்டின்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  💫 💫 💫 💫 💫 💫 

கிருமிகள் தரும் புரதம்


சுவையை விட உண்பதால் கிடைக்கும் அடர்த்தியான புரதத்திற்காகத்தான்  இறைச்சியை பலரும் நாடுகின்றனர். அந்த புரதங்களை நுண்ணுயிர்கள் மூலம் உற்பத்தி செய்து உணவுப் பொருளாக மாற்ற முடிந்தால்
, ஆடு மாடு கோழிப்  பண்ணைகளுக்கு குட் பை சொல்லிவிடலாம். சிங்கப்பூரில் உள்ள 'புல்லுலோ' என்ற புத்திளம்  நிறுவனம், நல்ல கிருமிகள் மூலம் மிகுந்த சத்துள்ள, சாப்பிடத்தக்க, செலவில் குறைந்த புரதங்களை உற்பத்தி செய்து காட்டியுள்ளது.

 

புல்லுலோவின் புரதங்கள், வறுவல், அவியல், சூப், சாஸ் என்று பல உணவு வடிவங்களில் உட்கொள்ளும் வகையில் உள்ளது. நுண்ணுயிர்களையும் வீணாகும் பழங்கள் காய்கறிகளையும் வைத்தே, புதிய உணவுப் புரதங்களை,  புல்லுலோவின் விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர்.

எனவே பெருமளவில் உற்பத்தி செய்யவும் இந்த புரதம் உகந்தது.

  💫 💫 💫 💫 💫 💫 

ஆற்றல்(சக்தி)  தரும் அலோகக் கட்டி!...


சூரிய மின்சாரத்தை பகலில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரத்தை காற்று வீசும் காலத்தில்தான் தயாரிக்கலாம். இவற்றினை பிற சமயங்களில் பயன்படுத்த வேண்டும் எனில் ஆற்றலை
சேமிப்பது தான் ஒரே ஒரு வழி.

 அந்த தத்துவத்தின் அடிப்படையில் ஆற்றலை வெப்பமாக மாற்றி சேமித்து வைத்து பின்னர் தேவையானபோது, மின்சாரமாகவோ, நீராவி ஆற்றலாகவோ மாற்றிக் கொள்ளலாம் என்கின்றனர் ஆஸ்திரேலியாவில் உள்ள எம் ஜி ஏ தெர்மல்  நிறுவனத்தின் விஞ்ஞானிகள்.

 ஆற்றலை வெப்பமாக மாட்டி எம் ஜி ஏ என்ற வகை அலோகத்தால் ஆன கட்டிகளில் சேமிக்க முடியும் என்று சோதனைகளின் மூலம் எம்.ஜி.ஏ தெர்மல் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

 சில வகை அழுகத் துகள்களின் கலவையால் உருவாக்கப்பட்ட அலுவலக கட்டியில் அதிக வெப்பம் சேரும் போது,  சில அலோகத் துகள்கள் உருகி திரவமாகி கொதி நிலைக்கு அருகே  வருகின்றன.  ஆனால் உருகாத அலோகத் துகள்கள் அந்தக் கட்டியை கெட்டியான நிலையில் வைத்திருக்கின்றன.

 

 வெப்பத்தை கட்டியிலிருந்து சக்தியை எடுத்து, ஆற்றலாக மாற்றி பயன்படுத்தலாம் அப்போது கட்டி குளிர்ந்து, திரவமான அலோகம்   மீண்டும் திடமாக மாறிவிடும் இதனை வீடுகளுக்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

பதிவு:செமனுவேந்தன்

 

No comments:

Post a Comment