"ஆத்து மேட்டிலே
காத்திருக்கேன் மச்சான்
யாரும் இல்லை சீக்கிரம் வாயா!
மேகம் கருக்குது சாரால் அடிக்குது
மார்பும் நனையுது துடைக்க வாயா!"
"வட்டவட்டப்
பாறையிலே குந்தி இருக்கிறேன்
தொட்டதொட்ட நினைவிலே நெஞ்சு குளிருது!
எட்ட நின்றது காணும் ஐயா
கிட்ட வாடா முத்தம் தாடா!"
"ஒத்தையிலே
இருக்கிறேன் ஒருத்தரும் இல்லை
காக்க வைக்காமல் ஓடி வாயா!
ஆறாத ஆசைகள் காமமாய் வழியுது
ஆழமாய் நேசிக்கிறேன் ஆசை மச்சான்!"
"ஆத்து
மேட்டிலே காத்திருக்கேன் மச்சான் "
"ஆத்து மேட்டிலே
காத்திருக்கேன் மச்சான்
மல்லிகைப் பூவும் மணக்காதாம் மச்சான்!
மான்கள் இரண்டு காதல் புரியுது
மனமோ உன்னைத் தேடி அலையுது!"
"ரோசா சுற்றி
வண்டு பறக்குது
தேனை உறுஞ்சி இன்பம் காணுது!
காமம் நெஞ்சில் தேங்கி இருக்குது
காலம் கடத்தாமல் பறந்து வாடா!""
"குருவி இரண்டு
கொஞ்சி குலாவுது
ஆற்று நீரில் குளித்து எழும்புது!
திட்டில் இருக்க கனவு வருகுது
ஒட்டி உரச ஆசை மலருது!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment