"உச்சிவெயில் அடிக்கையிலே"& ''வெக்கப்பட்டு ஓடும்புள்ள" [கவிதைகள்]

"உச்சிவெயில் அடிக்கையிலே"

 

"உச்சி வெயில் அடிக்கை யிலே

விற கொடிக்கப் போற பெண்ணே!

வேகும் வெயிலுக் குள்ளே போறியே

கால் உனக்குப் பொசுக்க லையோ?"

 

"வெற்றிலை பாக்குப் போட்டு கிட்டுச்

வளை குலுங்கப் போற பொண்ணே!

திருட்டுத் தனம் பண்ணா தேடி

ஒருத் தரையும் வையா தேடி?"

 

"குறுங் கழுத்து தளுக்குக் காரி

கோள் குண்டணி சொல்லா தேடி?

இடுப்புச் சிறுத்த அழகு மயிலே

இறுமாப்பு நீ பேசா தேடி?"

 

"பச்சை மரங்கள் பழுத்துப் போச்சு

இலைகள் எல்லாம் உதிர்ந்து போச்சு!

சுள்ளித் தடிகள் விழுந்து கிடக்குது

பொறுக்கி எடுத்து தலையில் வைக்கவா?"

 

"சிவத்த பாவாடை  சித்தம் கலக்குதடி

வெள்ளைச் சூரியன் கண்ணை குத்துதடி!

அனல் வெயில் உடலை வாட்டுதடி

அருகில் வந்தால் உள்ளம் குளிருமடி?"

 

🧱🧱🧱🧱🧱🧱

 

வெள்ளாமக் காட்டுக்குள்ள வெக்கப்பட்டு ஓடும்புள்ள"

 

"வெள்ளாமக் காட்டுக்குள்ள வெக்கப்பட்டு ஓடும்புள்ள

காலு பொசுக்கலையோ கற்றாழை குத்தலையோ?

வெருவல் தவ்விட மச்சான் வந்தாலென்ன

காதோரம் உன்னிடம் காதல் சொன்னாலென்ன?

வெள்ளிவீதியார் பாடல் ஞாபகம் இல்லையோ?"

 

"விரிச்சநெற்றிக் காரியே வீறாப்பு பேசாதேடி

வெந்த புண்ணிலே  எண்ணெய் ஊற்றாதேயடி?

வளைகுலுங்கப் என் நெஞ்சும் குலுங்குதடி

இடுப்புச் சிறுத்தவளே இறுக்கி அணைக்கவாடி?

மச்சான் மடியிலே அலுப்பு போக்கவாடி?" 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

சிரிக்க... சில நிமிடம்...

 சர்தார்ஜி ஜோக்ஸ் நகைச்சுவை 


👳நான் சாகப் போவதில்லை.... 

ஒரு சாரதாஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு  வந்தது. எல்லா பயணிகளும் பதறி அடித்துப்  பயத்தோடு, அவரவர் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

 

 சாரதாஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல், ஜாலியாகப்  புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியை பார்த்து, ''என்னங்க எல்லாரும் சாகப் போகிறோமே..... உங்களுக்கு உயிர் மேல் பயமே இல்லையா?'' என்று கேட்டார்.

 

 ''நான் சாகப் போவதில்லை....  நம்ம பல்வீர் சிங் தான் சாகப் போகிறார்'' என்றார் சாரதாஜி.

 

 பக்கத்து சீட்றுக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. ''எப்படி?... என்ன சொல்லுறீங்க நீங்கள்'' என்று கேட்டார்.

 

 ''உண்மையிலேயே இது பல்வீர் சிங்கினது டிக்கெட். அதில் நான் பயணம் செய்கிறேன் அவ்வளவுதான்! என்று சிரித்துக் கொண்டார்  சர்தார்ஜி.

 ⇒⇒⇒⇒⇒

👳வாஷ் பேசின்

ஒரு சர்தார்ஜி ஹோட்டலுக்கு சாப்பிட போனார்.

 

 சாப்பிட்டு முடிந்ததும் கை கழுவுற இடத்துக்கு போனார். அங்கே கையை கழுவாமல் வோஷ் பேசினை  கழுவ ஆரம்பித்துவிட்டார்

 

 ஹோட்டல் முதலாளி ஓடி வந்து ''சர்தார்ஜி, சர்தார்ஜி, எதுக்குங்க வோஷ்  பேசினை கழுவிக்கொண்டு  இருக்கீங்க'' என்று கேட்டாரார்.

 அதற்கு சர்தார்ஜி பதில் சொன்னாரார். ''என்னை என்ன கேணையன் எண்டு நினைச்சியா?...  நீதானெய்யா இந்த இடத்திலே -வோஷ் பேசின்- எழுதிப்  போர்டும் மாட்டி வைச்சிருக்கிறாய்!!’’ அப்படிச்  சொன்னார்.

  ⇒⇒⇒⇒⇒

👳யூரின் ரெஸ்ட் [urine test]

இரண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனை கூடத்து வாசலில் வாசலில் உட்கார்ந்து இருந்தார்களாம்.

அதிலே ஒரு சர்தார்ஜி அழுதுகொண்டு இருந்தாராம்.

இரண்டாவது சர்தார்ஜி அதைப்பார்த்து

 ''ஏம்பா அழுவுறே'' என்று கேட்டாராம்.

 

 அதற்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம், ''நான் பிளட்-டெஸ்ட்டு(blood-test) க்கு வந்தேன். அவர்கள்  விரல் நுனியை கீறி ரத்தம் எடுத்தார்கள். அதுதான் பயங்கரமாக வலிக்குது. அதுதான் அழகுறேன்'' என்று கூறினாராம்.

 

இதைக் கேட்டு இரண்டாவது சர்தார்ஜி ஓவென்று  சத்தம் போட்டு அலறி அழ ஆரம்பிச்சிட்டாராம்.

 

 முதலாமவர் கேட்டாராம்,''நீ ஏனப்பா ,இப்பிடி அழுகிறாய்?''

 

 அதற்கு இரண்டாவது சர்தார்ஜி சொன்னாராம். ''நீயாச்சும் பிளட் டெஸ்ட் தான் எடுக்க வந்தாய். நான் யூரின் டெஸ்ட் எடுக்க வந்தேன். அதுதான் நினைக்க நடுக்கமாய் இருக்கு'' என்றாராம்.

  ⇒⇒⇒⇒⇒

👳தற்கொலை

ஒரு சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்துப் போய் ,தற்கொலை செய்யும் எண்ணத்தில் ஆற்றில் குதிக்கப் போனாராம்.

 

ஆற்றில் இறங்கிய அவர், ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த மீனைப் பார்த்து ''நான்தான் சாகப்போகிறேன் ,நீயாவது பிழைத்துக்கொள்'' என்று கூறியவாறு, மீனைத் தூக்கிவந்து ஆற்றுக்கு வெளியில் போட்டாராம்.

  ⇒⇒⇒⇒⇒

வெய்ட்டான (weight)படிப்பு

சர்தார்(கவலையுடன்): வெய்ட்டான படிப்புப் படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே....!

நண்பர்:அப்படி என்ன படிப்புப் படிச்சீங்க?

சர்தார்:LKG(Lகிலோ),UKG(Uகிலோ), SKG(Sகிலோ) எல்லாம் படிச்சு இருக்கோமல்லா...

  ⇒⇒⇒⇒⇒

👳சரியா தூங்க முடியவில்லை

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத் தூங்க முடியவில்லை.

நண்பர்:ஏன்?

சர்தார்: மேல் பர்த் (UPPER BERTH) தான் கிடைத்தது.

நண்பர்: கீழ் உள்ளவருடன் பேசி,இடத்தை  மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்:செஞ்சிருக்கலாம்தான். ஆனால் கீழே யாரும் இல்லையே!!

  ⇒⇒⇒⇒⇒

👳தொகுப்பு: செ.மனுவேந்தன்/S.Manuventhan

"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[பகுதி:02]/ஒரு அலசல்

(An analysis of history of Tamil religion - PART 02[In Tamil and English)

மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய் வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பப் பட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டுபிடிக்கப் பட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப் பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப் போக்கில் - அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப - விட்டுக் கொடுப்புகளுடன் விரிவு படுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப் பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில்அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்க வேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறு பட்டவையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள்,சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். இதனால் இவை இலகுவில் விட்டுக் கொடுப்புடன் மாற்றக் கூடியவை அல்ல.

ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. இது, மதங்களுக்கு இடையேயானமோதலையும் சிலவேளை உள் -  மத உட்பூசல்களையும் ஏற்படுத்தின.


உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து, எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். 

இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும்- அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெற வில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.

 


எது எப்படியிருப்பினும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை [செழிப்பை] அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே அவர்கள் தமது கவனத்தை பெரிய பெண் தெய்வம் ஒன்றை வழிபடுவதில் முதலில் கவனம் செலுத்தினர். பின்னர் கருவுறுதலில் ஆணின் பங்கை உணர்ந்தது ஆண் தெய்வங்களும் தோன்ற வழிசமைத்தது. இந்த ஆண் தெய்வங்களுக்கு, பின்னர் மத குருமார்களால் படிப்படியாக அதிகரித்த முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இந்த நவீன் உலகத்தில் சமயம் பெரும்பாலும் மனித பயத்திற்கும், இந்த பாதுகாப்பற்ற உலகில் இயற்கையின் அனர்த்தங்களால் அல்லது மனித வெறுப்புகளால் அல்லது சகிப்புத் தன்மை இன்மையால் எந்த நேரமும் ஏற்படும் காயங்கள், உயிர் பலிகள், கொலைகள் போன்ற பாதுகாப்பு அற்ற மனிதனுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தவும் இன்னும் சமயம் ஒரு பதிலாகவே இருக்கிறது.

அதில் ஒரு மாற்றமும் இல்லை!


உணவை தேடி சேகரிப்பதை விட, எப்படி உணவு உற்பத்தியை தாமே செய்யலாம் என்பதை மனிதன் அறிந்தது, அதாவது, விவசாயம் அறிமுகமாகியது, மனித வரலாற்றில் ஒரு பெரிய திருப்பம் என பரவலாக கருதப்படுகிறது. இந்த மாற்றம் உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் நடை பெற்றது. எப்படியாயினும், அதி நவீன மேம்பட்ட விவசாய தொழில் நுட்பம் கொண்ட இன்றும், அப்படியான எந்த வசதியும் அற்ற 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றும், நல்ல அறுவடையை கொடுக்க, பிரகாசித்த சூரியனும் மழை வீழ்ச்சியும் எமக்கு தேவைப்படுகிறது. ஆகவே, பண்டைய மனிதன் தமக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு உறவை ஏற்படுத்தியது புதுமையல்ல. எனவே அவன் இயற்கை கடவுளை மழை, வெயில் வேண்டி கெஞ்சினான் அல்லது பிராத்தனை செய்தான். என்றாலும் காலம் செல்ல, வேலை நாட்களை தவிர்த்து, அதற்கென கிழமையில் ஒரு நாளை பிரத்தியேகமாக ஒதுக்கினான். அப்படி ஒரு வழிபாடு செய்ய தனிப்பட்ட இடமும், அந்த வழிபாட்டை நிர்வாகம் செய்ய, திறமை வாய்ந்த தனி நபரும் தேவைப் பட்டனர். இந்த வகையில் தான், பெரும்பாலும் வழிபாடு செய்ய சிறப்பு தினம் அல்லது புனித நாளும் [ஓய்வு நாள்], அந்த வழிபாடு செய்ய ஒரு தனிப்பட்ட இடம் அல்லது ஆலயமும், அந்த வழிபாட்டை முன்னின்று நடத்த ஒரு பூசாரி அல்லது மத குருவும் தோன்றியிருக்கலாம்? இவற்றிற்கான பல பண்டைய கால தடையங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வரலாற்றுக்கு முற்பட்ட, மேற் பழைய கற்காலக் குகை ஓவியம் அல்லது பாறை ஓவியத்தை, உதாரணமாக, 27,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரான்ஸ் கர்காஸ் குகைகள் [Gargas caves] போன்றவற்றை நாம் காண்கிறோம். இந்த ஓவியங்களுக்கு மதத்தின் தாக்கம் இருப்பதை காண்கிறோம். இப்படியான, இந்த குகைகளே மனித இனத்தின் முதல் ஆலயமாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. இது மதத்தின் வரலாற்றை 30,000 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது.


மேலும், பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, இந்தோனேஷியா [South Africa, zimbabwe, France and Indonesia] ஆகிய நாடுகளில் இருப்பதைப் போன்ற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரத்த சிவப்பு நிறத்தில் வரையப் பட்ட இந்த ஓவியங்களில், ஒரு ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மிக முக்கியமானது. சூலம் என்பது சைவ வழிபாடு தொடர்பான சின்னமாகும். இவ்வகை சூல ஓவியங்கள் மேலும் இரத்த சிவப்பு நிறத்தில் உள்ளன. தற்போதுவரை ஊரின் எல்லையில் சூலக்கல் நடும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. இந்த ஓவியம் பழங்குடி மக்களின் பாதுகாப்பு சடங்கை குறிப்பிடுவதற்காக வரையப் பட்டுள்ளது போல் தெரிகிறது. இன்னொரு ஓவியத்தில் ஒரு மனிதன் வலது கையில் ஒரு கைக்கோடாரியை ஏந்திய நிலையில் உள்ளான். இந்த மனிதனின் காலடியில் ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைப் போல ஓவியம் வரையப் பட்டுள்ளது. மற்றொரு ஓவியம் ஒரு மனிதனின் கை ஓவியமாகும். இது, செங்காவி குழம்பில் கையைத் தோய்த்து அதை பாறையில் அச்சு பதிக்கும் விதமாக அழுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கை ஓவியங்களை தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணலாம். அது மட்டும் அல்ல, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்பட்ட பண்டைய கல்லறைகளில் இருந்து, 50,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமது இறந்த உறவினரை அடக்கம் செய்த முதல் மனித இனம் நியண்டர்தால் மனிதன் என அறிகிறோம். சில கல்லறைகளில் இறந்தவரின் உடலுடன் மாமிச விலங்குகளின் எலும்புகளும் சேர்ந்து காணப்படுகின்றன. வேறு சில கல்லறைகளில், மலர்களும், சிலவேளை, மனிதனுக்கு பயன்படும் கருவிகளும் காணப்படுகின்றன. இது சில நியண்டர்தால் [Neanderthals] மனித குழுவிடம் ஒரு வித மறுமையில் நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. இது அவர்கள், இன்று உள்ள பல மத குழுக்கள் போல், இறப்பு மனிதனின் முடிவு அல்ல, அடுத்த பிறப்பின் ஆரம்பம் என நம்பியதை எடுத்து காட்டுகிறது. ஆகவே, நியண்டர்தால் மனிதன் கடவுள், மதம், மறுமை போன்றவற்றை அறிந்திருந்தான் என நாம் இலகுவாக

ஊகிக்கலாம்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 03 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக /Click to read from the beginning

*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART,  Theebam.com: "தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:03

 👲👲👲👲👲👲

An analysis of history of Tamil religion - PART 02[In English


The first religious belief system which was formed as an oral tradition during the Upper Palaeolithic Revolution, was disseminated among the members of the tribe and was taught to each new generation. Much later,

after writing was developed, the beliefs were generally recorded in written form. A major loss of flexibility resulted. Oral traditions can evolve over time; written documents tend to be more permanent. Unfortunately,  because these belief systems were based on hunches, the various religions that developed in different areas of the world were, and remain, all different. Their teachings were in conflict with each other. Because the  followers of most religions considered their beliefs to be derived directly from God, they cannot be easily changed. Thus, inter - religious compromise is difficult or impossible. Also, because religious texts are often  ambiguous, divisions developed within religions. Different denominations, schools, or traditions have derived different meanings from the same religious texts. Thus were laid the foundations for millennia of inter -

religious and intra - religious conflict.

 

 

For example, During the  Portuguese rule in Jaffna, The villagers asked to assemble and then a missionary ask them to reject their "God Shiva" ["false" gods as per Catholic priest] and accept "one true God" [Jesus]. "It was not a request; It was almost a command backed by the authority of the Portuguese government" - Begin by Bible, if unsuccessful then use the Sword -". Fear of a fine or corporal punishment with cane and stock ensured their regular attendance at church on Sundays and feast days. This is the way Tamils were converted to Christianity during the Portuguese rule, not by willingness or one's own consent or Comparing shaivism vs Christianity, But by means of money or power.

 

However, The first organized religions appear to have been based on fertility. They were focused on the worship of the great Earth Goddess. Religion evolved to include male Gods who were gradually given increased

importance by the priests. This development may have been caused by developing knowledge of the male's involvement in the process of reproduction. Some observers believe that modern - day religions remain

largely a response to human fear. Their main function is to provide their followers with a feeling of security while living in a dangerous environment in which a person can be injured, killed or murdered at any time due to natural causes, accidents or human hatred and intolerance.

 

The introduction of farming, when people learned how to produce rather than acquire their food, is widely regarded as one of the biggest changes in human history. This change happened at various times in several

different places around the world. However, at the end of the each day both with the advanced farming technology we have today and as far back as 10,000 years ago we still need the sun to shine and rain to fall to

produce a good harvest. And throughout the world today many farmers pray for a good harvest. It's not difficult to see that ancient man may too have carried out this practice, and a relationship developed between man  and nature, man and God, a sort of unwritten agreement, a contract, where man pleads with God or prays to God for sunshine and rain. And as time moved forward it came to pass that this contract required a special

day of the week, separate from work days, when prayer could take place. Also required was a special place where the contract could be honoured along with skilled people who would administer the carrying out of the

contract. From this idea probably we can see where the apparatus of organised  religion, Such as special or Holy day for worship or prayer [Sabbath], the temple, and the priest, may have stemmed from.

 

Throughout the world we find Palaeolithic Cave Art and in many of these caves, such as the Gargas caves in France, there appears to be a religious influence behind the art. Some of these caves could be regarded as mankind's first temples. So there appears to be evidence of religion stretching back to almost 30,000 years ago. Further, A team of Indian archaeologists also discovered ancient rock paintings in a dilapidated cave near a Paliyar tribal habitation at Kombaikadu village situated 1,000 metres above sea level on Palani - Kodaikanal Road, Tamil Nadu, India in mid 2015. In one of the paintings, A holy lance was drawn on the cave wall, The picture of holy lance showed prevalence of shaivite culture in ancient times, Another picture depicts a person holding an axe in his hand with a dead body lying near his feet and Hand symbol was also painted on these

rock. This type of hand symbol was present in many rock paintings throughout the world, such as South Africa, zimbabwe, France and Indonesia. Also the ancient artists used red colour to draw these paintings. All these paintings are at least 4000 years old. Not only that, Graves from Europe and western Asia give a strong indication that the Neanderthals were the first hominoids to bury their dead perhaps as long as 50,000 years ago. In some cases the buried bodies were accompanied with meaty animal bones. Other times with flowers, and in some cases useful objects such as tools suggesting that some Neanderthal groups may have had a belief in some kind of an afterlife. They, like so many religions of today saw death as not the end, but merely the beginning of a new cycle of existence. So, we can easily assume that, the Neanderthals the first hominoids,

Also may be aware of God, religion and an afterlife.

:- [Kandiah  Thillaivinayagalingam,Athiady, Jaffna]

Part 03 Will follow