ஒளிமயமான எதிர்காலம் -5

மின்சாரத்திற்கு ஒரு கும்புடு!!

மனிதன் மின்சாரம் என்னும் ஒரு சக்தியைக் கண்டுபிடித்து, 100 வருடங்களாக அதையே இன்னும் இலகுவான முறையில் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறான்.

 

இந்தப் பரந்த அண்டத்தில் கண்டது கைமண்ணளவு காணாமல் இருப்பது கடல் அளவாக இருக்கலாம் அல்லவா?

 

அது ஏன் தொடர்ந்து மின்சாரமாக இருக்க வேண்டும்? அது ஏன் மின்னோட்டமாகவே இருக்க வேண்டும்? இந்த எல்லையே அற்ற வெளியில், பாரிய அளவிலான மிகவும் சக்தி வாய்ந்த சில கதிர்கள், அலைகள், வீச்சுகள் அதிர்வுகள், தூண்டல்கள் என்று புதிய வடிவிலான ஓர் உந்து சக்தி வழங்கக் கூடிய ஏதாவது ஒன்று இருக்க்கலாம் அல்லவா?

 

எதிர்கால சக்திக்கான ஆதாரங்கள் என்னவாக இருக்கும் அல்லது நடைமுறை பயன்பாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பதை கணிப்பது கடினம், புதிய தொழில்நுட்பம் தொடர்ந்து உருவாகி, வளர்ந்து கொண்டு வருவதால் புதிய சக்தி ஆற்றல் மூலங்கள் நிச்சயமாகக் கண்டு பிடிக்கப்படலாம். தற்போதைய நமது மட்டுப் படுத்தப்பட்ட அறிவை வைத்துக் கொண்டு இன்னும் 50 வருடங்களில் என்ன மாற்றம் நிகழ் இருக்கிறதென்பதை நாம் யூகிக்க முடியாது.

 

புத்திக் கூர்மையுடைய வெளியுலக மனிதரைத் தாங்கிய கலம் ஒன்று பூமிக்கு வருமேயானால், அதன் செயற்பாட்டை வைத்து ஒரு புது வடிவ சக்தி உருவாக்கல் முறைதனைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் அப்படி ஒருவரும் வருவதற்கான அறிகுறிகள் இல்லையே!

 

 

வரவிருக்கும் தசாப்தங்களில் உலகின் சக்தி ஆற்றல் கலவையில் மின்சாரம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும், மாசற்ற காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறும்.

 

 

சூரிய ஒளியினை விண் வெளியில் நிலை கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குவது என்பது விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி (Space Based Solar Power - SBSP) எனப்படும் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோலார் தகடுகள் அல்லது கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி விண்வெளியில் சூரிய சக்தியைச் சேகரித்து, பின்னர் மைக்ரோவேவ் அல்லது லேசர்களைப் பயன்படுத்தி அந்த ஆற்றலை பூமிக்கு அனுப்புவதே இந்த அணுகுமுறை ஆகும். இந்த முறை, நில மட்டத்தில் உருவாக்கக் கூடிய மின்சார அளவிலும் பார்க்க விட பல மடங்கு சாத்தியமான நன்மைகளைக் கொண்டுள்ளது, இதில், சூரியனின் கதிர் முழு 24 நேரமும் பட்டுக்கொண்டிருப்பதால். பூமியில் இருக்கும் சூரியப் பண்ணைகளை விட அதிக அளவு சூரிய ஒளியை உள் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

இருப்பினும், இந்த முறையில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சவால்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவது மற்றும் ஆற்றலைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான தரை அடிப்படையிலான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். கூடுதலாக, பூமியின் வளிமண்டலத்தில் அதிக ஆற்றல் கொண்ட நுண்ணலைகள் அல்லது லேசர்களை ஒளிரச் செய்வதோடு தொடர்புடைய பாதுகாப்புக் கவலைகள் உள்ளன.

 

இந்த சவால்கள் இருந்தபோதிலும், SBSP பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது, சில வல்லுநர்கள் இது இறுதியில் சுத்தமான, மலிவான, ஆற்றல் மிகு மின்சக்தி ஆக்கத்திற்கு முக்கியமானதாக மாறும் என்று நம்புகின்றனர். இருப்பினும், இது இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

 

'மின்சாரம்' என்பதற்கு மாற்றாக வேறு ஒரு 'நன்சாரம்' கண்டு பிடிக்கும் வரை, வெகு விரைவில் இலகுவான, மலிவான மின்சாரம் நமக்கு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

ஒளிமயமான எதிர்காலம், என் உள்ளத்தில் தெரிகிறது!

-:செ.சந்திரகாசன்

No comments:

Post a Comment