பகுதி:04
[ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]
சைவ நாயன்மார்களில் / சித்தர்களில்
திருமூலர் ஒரு முக்கியமானவர். இவர் இயற்றிய திருமந்திரம் 3027 பாடல்களைக் கொண்டுள்ளது. இதுவே சைவ சைவ சித்தாந்த
தத்துவத்தின்
அடிப்படையாகும்."ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்று இவர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார்.
"ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே"
[திருமந்திரம் 2104]
படைக்கப் பட்ட அனைத்து உயிர்களும் ஒரே
தன்மையை உடையன என்றும் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம்
காணுகிறார். இது சைவ சித்தாந்தத்தின்
மையக் கருத்தாக அமைகின்றது. அது
மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்
உல குக்குயி ராவது" என்று
கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை
அறிந்தீர். அந்த ஆண்டவன் உலகத்தை உயிர்
போன்று இருந்து இயக்குவதையும் அறிந்தீர்
என்கிறது. வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா? இதனால் சைவம் எந்த வேறு பாடும் காட்டாமல் மக்களை
இணைத்தது. இதை, இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும் /
பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான். மேலும் அன்பே கடவுள்
என
திருமந்திரம் போதிக்கிறது. “ஏழையின்
சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo
Tolstoy) என அழைக்கப்படும் லெவ்
நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் (Lev Nikolayevich
Tolstoy) பிரபலமான வாசகம். நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம்
நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின்
முகத்தில் சிரிப்பு தெரியும். அந்த
வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது. அந்த அன்பின்
மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர்
அறிவிலார் அன்பே சிவமாவதொரு
மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறுகிறார். அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே
இல்லாதவர்கள் என்றும் அன்பும், சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும், அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர். ஆகவே
"அன்பே சிவம்",
அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு, சைவ சமயத்தின் மையக் கருவாக உள்ளது. அது மட்டும் அல்ல, 'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான
அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.
அத்துடன் உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே
[அநாதியாகவே, ஆதி அற்று] இருப்பவை என்றும் சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது. மேலும்
சுவாமி தாயுமானவர்
"கங்குல்பக லற்றதிருக்
காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே",
அதாவது மறப்பும் நினைப்புமாகிய
கங்குல் பகலற்று எல்லா இடத்திலும் நின்திருவடிக் காட்சியே கண்டு கொண்டிருப்பர்; அத்தகையோர் யாவருங் கண்ட நன்னெறி யொன்றேயாம் என்றும், சுவாமி சுந்தரர் "அப்பாலும் அடிச்சார்ந்தார்
அடியார்க்கும் அடியேன்" என்றும், சுவாமி மாணிக்கவாசகர் "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி" என்றும் கூறியதையும் நோக்குக. சைவ
சமயம் உண்மை ஒன்று என்றும், பாதைகள் பல என்றும் ஏற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு மதத்தின்
உள்நோக்கமும் மனிதனை மீண்டும் கடவுளுடன் இணைப்பது
என்பதால், ஒரு உண்மையான சைவன் எவரினதும் நம்பிக்கையிலோ அல்லது மத நடை
முறையிலோ தலையிடுவதில்லை. கடவுளை அடைய எந்த ஒரு பிரத்தியேக வழிமுறையும்
இல்லை என அது நம்புகிறது. எல்லா
மக்களும் ஆறுதல், சமாதானம் மற்றும் விடுதலை காணும் முழுமுதற் பொருள் ஒன்றே என்கிறது. எனவே சைவன்
எல்லா மத மரபுகளையும்
எல்லா மதத்தவரையும் மதிக்கிறான். அது
எல்லா சைவனுடனும் எல்லா அந்நியனுடனும் இணங்குகிறது. ஒவ்வொருவரும் அவர் அவர்
வழியில் கடவுளை உணரலாம் என்பதால், எம்
வழியே ஒரே வழி என்றோ அதுவே சிறந்த வழி
என்றோ அது ஆலோசனை கூறவில்லை. ஆகவே கட்டாய மத மாற்றத்தை அது எதிர்க்கிறது.
போர்துக்கேயர் இலங்கை இந்தியாவில்
செய்த கட்டாய மத மாற்றம் அல்லது இன்னும் சில குழுவினர் இன்றும் செய்யும் இப்படியான செயல்கள் போன்றவற்றை அது கடைப்பிடிக்க வில்லை. அப்படி செய்யுமாறு ஆலோசனையும் கூறவில்லை.
பரவலாக உலகம் முழுவதும் கிட்டத் தட்ட 250 மில்லியன் மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகிறார்கள்
என்றாலும், இதன் பாரம்பரிய தளங்கள் இந்தியாவிலேயே, குறிப்பாக தென்
இந்தியாவிலேயே உள்ளன. வரலாற்று சான்றுகள் சிவா அல்லது சிவலிங்க வழிபாடு கி
மு 2500 ஆண்டு
நாகரிகமான சிந்து சம வெளியில் அல்லது அதற்கு முற் பட்ட காலத்தில் இருந்து
தொடர்வதாக சாட்சி பகிர்கின்றன. அண்மைக் காலங்களில், சுமேரிய இலக்கியங்களில், ஆழமான மொழியியல் ஆராய்ச்சி செய்த, மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Malaysian professor, Dr. K.
Loganathan], சுமேரு மொழி பழந் தமிழ்
என்றும், சுமேரியன்
ஆலயங்களில் சைவ ஆகம மரபு சார்ந்த காட்சிகள் அல்லது நிகழ்வுகள் நடப்பில் இருந்துள்ளன என்றும் பல சான்றுகளுடன் எடுத்துக்
காட்டியுள்ளார். எனவே, இந்த சான்றுகள் அல்லது கண்டு பிடிப்புகள், எம் சைவ-தமிழ் [திராவிட] பாரம்பரியத்தை, பாபிலோனிய மற்றும்
பண்டைய மத்திய கிழக்கு பண்பாட்டுடன் சமகாலத்துக்குரியதாக அல்லது அதற்கு
முன்னோடியாக எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, எம் பண்டைய பாரம்பரியத்தையிட்டு
நாம் பெருமை படுவதுடன், உலகம் முழுவதும் பரந்து வாழும் அறிஞர்களுக்கு, குறிப்பாக இலங்கை அல்லது தென் இந்தியா திராவிட
அறிஞர்களுக்கு, இவ்வாறான ஆய்வில் மேலும்
ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது
வருங்கால சைவ சந்ததிக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும். உலக வரலாற்றில் எம்முடைய
சரியான பங்கை அல்லது அந்தஸ்த்தை நிலை நாட்ட, சுமேரு - திராவிட ஆய்வு முக்கியமாகும். மேலும் புனிதமான, பெருமைக்குரிய எம் தாய் மொழியில் நாம் பிரார்த்தனை அல்லது
வழிபாடு செய்தல் எமது பிறப்புரிமையும் ஆகும். இந்த அறப்போர் பிராமணருக்கு எதிரானது
அல்ல, ஆனால்
பிராமணியத்துக்கு மட்டுமே எதிரானது என்பதை தெளிவாக்குவோம் - பிரித்தானிய
[பிரிட்டிஷ்]
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மகாத்மா
காந்தி போராடி வெற்றி கொண்டவாறு, மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அமைப்பிற்கு எதிராக
நெல்சன் மண்டேலா போராடி வெற்றி கொண்டவாறு, சமஸ்கிருதம், அந்நிய பண்பாடு மற்றும் பிராமணியம் திணித்த சாதி, நிற வேறுபாடுகளுக்கும் எதிராக 1500
- 1300 ஆண்டுகளுக்கு முன் எமது
நாயன்மார்கள் அப்பரும் சுந்தரரும் மற்றும் எமது
மற்ற சைவ நாயன்மார்களும் தமது அறப்போரை ஆரம்பித்தார்கள். அது இன்னும், இன்றும் தொடர்கிறது.
நீண்டகால பக்தி மரபும், உலகளாவிய சைவ
கோட்பாடான ஒன்றே குலம் என்ற மனித சமத்துவத்தையும், அன்பே கடவுள் என்ற சைவ வாழ்வையும் நாம் இன்னும் தொடர்ந்து
பாதுகாத்து வருவதும், வரலாற்றில் மிகவும் எம்முடன் சம்பந்தப்பட்டவை ஆகும். இது இயற்கைக்கு எதிராக
எதையும் செயலாற்ற எமக்கு ஆலோசனை கூறவில்லை. சில மதம், சிறுவர்களை துறவிகள் ஆக்க வலியுறுத்தி மக்களை கட்டாயப்
படுத்துகிறது. வேறு சில இசை, பாட்டு, நடனம் மற்றும் பிற நுண்கலைகளை, சரீர அல்லது உடல் இன்பத்தை அவை தூண்டுகிறது என்று
தடுக்கிறது. அதே போல, இன்னும் சில, காட்டுக்கு போதல், குகையில் வாழ்தல், நிர்வாணமாய் இருத்தல், சொந்த பந்தங்களை வெறுத்து ஒதுக்குதல் போன்றவைகளை பெரிய உன்னத தவம் என்கிறது. ஆனால் சைவம் அப்படியான எதையும்
ஆதரித்து பரிந்துரைக்கவில்லை. இது மிகவும் பரந்த கொள்கையடையது, எளிமையானது மற்றும் இது எந்த உலக
இயற்கைக்கும் எதிரானதும் அல்ல.
எனினும், நாம் தமிழரின் வரலாற்றை, அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற
தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் முழுமையாக, விரிவாக அறியலாம் என கருதுகிறேன். ஆகவே அதை முதற்கண்
சுருக்கமாக அடுத்த பகுதியில் தருகிறேன்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 05 தொடரும்
An analysis of history of Tamil religion – PART04
Among the Tamil saints / Saiva mystic (சித்தர்siddhars- "perfected ones"] Thirumoolar a great Saivite saint,
Thirumoolar's treatise, Thirumanthiram is a collection of 3027 hymns. This is
the Basic for the Saiva
Siddhanta Philosophy. Thirumoolar has written in his thirumanthiram
2104- "ஒன்றே குலம் ஒருவனே தேவன்
/ There is only one Human Sect and there is only one
God" ie "one caste and one God only" or
oneness of God and oneness of all creeds in the whole world and again in
thirumanthiram 2962- "ஒன்றுகண்
டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது / One
the God for worlds all, One is He, the life of worlds all " & by this he united all Tamilians without
caste discrimination. Any rationalist will accept it without any hesitation.
Further, The concept of the Divine as Love or Love as God is clearly
stated, In the following thirumanthiram: Here, Thirumular states that:
"only the ignorant will think that love and Sivan are two different
things;
only few really understand that Sivan is nothing but love;
once everyone understands that Sivan is nothing but love,
everyone will become saintly."
Hence, "அன்பே சிவம்" “Anbe
Sivam” - “Love itself is God Siva” is the central theme of Saivism as
elaborated in Thirumular’s THIRUMANTHIRAM. Further St. Thayumanavar says: The path proclaimed by
all saints who have had the true vision,
is the same everywhere "கங்குல்பக
லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே." and
St. Sundarar says: I am the servant of those devotees even of other lands, who
have reached the feet of God. "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" and St. MANIVACAKAR says: "By means of the creator’s grace,
one sees the Lord and is freed from sorrow. "அவன் அருளாலே அவன் தாழ்
வணங்கி". Saivites wholeheartedly respect and encourage
all who believe in god. They honour the fact that truth is one, paths are many.
Since the inner intent of all religions is to bind man back to god, Shaivite
seek not to interfere with anyone's faith or practice. They believe that there
is no exclusive path, no one way for all. Shaivites profoundly know that god
Shiva is the same supreme being in whole people of all faiths, who find solace,
peace, and liberation. Shaivites respect all religious traditions and the
people within them. It says 'Let is have concord with our own people and
concord with people who are strangers to us.'
It believe that every one of us can realize god in their own way, then
we also have to accept that our way to god can not be the only way or the best
way. Hence, It is not right to force one beliefs on another. It did not
encourage or support any activities of forced conversion like, portuguese in
India & Srilanka or some religious group still doing.
Saivism is a living and popular faith followed by more than 250 million
people around the world today but its traditional bases are in India,
particularly in South India. But historical fact shows that Siva & linga
worship goes back to the period of Indus civilization 2500 B.C and even beyond.
Dr. K. Loganathan more recently, through careful linguistic research of
Sumerian literature has noted a close affinity so that not only Sumerian the
proto - Tamil language but also the repertoire of Saiva Agamic traditions then
in vogue in the Sumerian Temples. This important discovery makes our Saiva -
Tamil [Dravidian] heritage almost contemporaneous
or forerunners to the Babylonian and other ancient cultures in ancient
Middle East, considered the cradle of human civilization. Let us all be proud
of our ancient heritage and we appeal to scholars everywhere, particularly the
Srilankan tamils and South Indians to continue their research into these areas
which will be a source of encouragement to Saiva posterity, the world over. To
recover our rightful place in world history Sumero - Dravidian studies is a
must. Our freedom to pray in our sacred mother tongue is our birthright. Let us
make it crystal clear that our crusade is not against our Brahmin friends but
it is against Brahmanism - just as our Saints Appar and Sambanthar fought
against the imposition of Sanskrit and the caste system; just as Mahatma Gandhi
fought and won against British Imperialism and just as Nelson Mandela fought
and won against the Apartheid system in South Africa. Our Saiva Saints
initiated the1500 -1300 year old crusade against Sanskrit and foreign culture
as well as against the degrading system of caste, colour and creed imposed by
Brahminism, a crusade that is still going on even today in 2023. What is
historically relevant is that the long standing Tamil Bhakti tradition, and
maintaining our Saiva universal concepts of human equality
(onre kulam) and God is love. It does not advise us to practice anything
against nature. Some religions insisted and compelled people to become monks,
even from the childhood. Some others, decried music, dance and other fine arts
as well, saying that would tend to induce and stimulate carnal or physical
pleasure and sexual passions. Going to forest, living in caves, keeping nude,
hating and avoiding one’s near and dear relatives etc, were taught to be great
noble austerities by some other religions and philosophies. But Saiva religion
does not advocate such crude modes of self modifications. We cannot find any
such teachings in Saiva religion and philosophy. It is very liberal, simple and
does not go against nature.
However, If we know the origin of Tamils or where they come from?, Then,
We can also know the origin, and development of Siddhanta Philosophy or the origin & history of
Tamil religion. Hence we are giving
brief analysis of history of Tamils in next chapter.
[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 04 Will follow
No comments:
Post a Comment