01.கடன்
கந்தசாமி: சார்...என் பெயர்
கந்தசாமி....சொந்த ஊரு பழனி.....
முனுசாமி: அதுக்கென்ன இப்போ...?
கந்தசாமி: ஆயிரம் ரூபாய் கடன் வேணும்.
ஊர் ,பேர்
தெரியாதவனுக்கெல்லாம் கடன் கொடுக்க முடியாதேன்னு சொன்னீங்களே...அதான்
அறிமுகப்படுத்திவிட்டேன்.
02.திருநெல்வேலி அல்வா
ஒருவர்: திருநெல்வேலி வரன் ஒன்று உங்க
பொண்ணுக்கு வந்ததே..அப்புறம் என்ன ஆச்சு ?
மற்றவர்:கடைசி நேரத்தில அல்வா
கொடுத்திடாங்க.
03.சொந்தக்காரர் எங்கே?
ஒருவர்: அந்த டாக்டருக்கு
சொந்தக்காரர் என்று சொல்ல யாருமே கிடையாது.
மற்றோருவர்:என்?
ஒருவர்:எல்லாருக்கும் அவர்தான்
ஆப்பரேஷன் செய்து அனுப்பினாரு.
04.வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஆசிரியர்:எங்கே ஆங்கில எழுத்துக்களை
வரிசையாகச் சொல்லு.
மாணவன்:பி.சி,டி,எப்,......
ஆசிரியர்:டேய்! ஏன்டா முதல் எழுத்து ''எ'' அய் விட்டுச் சொல்லுறாய்?
மாணவன்:அது வயது வந்தவர்களுக்கு
மட்டும் சார்!
05.காட்டில சிங்கம்
குப்பு:டேய்! நான் இன்னைக்கு காட்டில
சிங்கத்தைப் பார்த்தேன். அது மேல எச்சி துப்பினேன்.அது பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு:அட நானும் இன்னைக்கு காட்டில
சிங்கத்தைப் பார்த்தேன்.அதோட முதுகில ஏறி சவாரி செயதபோது முதுகு ரொம்ப ஈரமாய்
இருந்தது. அது நீ செஞ்ச வேலைதானா?
06.ஊசி போட
டொக்டர்:நாய் கடிச்சா தொப்புளைச்
சுற்றி 14 ஊசி
போடணும்.
நோயாளி: முடியாது டொக்டர். நாய்
அப்பவே ஓடிப் போயிடுச்சு.
07.சாப்பாட்டுக் கடையில்
ராமு: சர்வர்,நீங்க சாப்பிட்டாச்சா?
சர்வர்: ஏன் அக்கறையாய் கேட்கிறீங்க?
ராமு:ஓடர் பண்ணுற எல்லாமே பாதி பாதியாய் வருது.அதுதான்...
08.வாங்குவது யாரு?
நோயாளி: டொக்டர் ,எனக்கு சொந்தமெண்டு சொல்லிக்க யாருமே இல்லை டொக்டர்.
டொக்டர்:அட..கடவுளே..அப்போ ஒப்பரேஷன்
முடிஞ்சதும் பொடியை யார் வந்து எடுத்துக்கொள்வாங்கள்.
09. நீதிமன்றில்…
நீதிபதி: ரெண்டு காலும் நொண்டியாய்
இருக்கும்போதே, இவ்வளவு திருட்டு
வேலை செய்திருக்கிறாயே! கை, காலெல்லாம் நல்லா இருந்தால் இன்னும் என்னவெல்லாம்
செய்திருப்பாய்.
திருடன்: இப்படி அனாவசியமா
போலீசுகிட்ட மாட்டியிருக்க மாட்டேனுங்க.
10. தொலைச்சுடுவன்
தொலைச்சு
வக்கீல்: மை லார்ட்.... என்
கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர். நேர்மையானவர். யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை
அவர் வெறுப்பவர். எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.
கட்சிக்காரர்: (சத்தமாக) யோவ்
வக்கீல்... விளையாடுறியா? என்னை பற்றிச் சொல்லுற என்றுதானே
சுளையாய்க் காசு வாங்கினனி.... இங்க வேற
யாரையோ பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே..... தொலைச்சுடுவான்... தொலைச்சு.
11. சொத்தை
நீதிபதி: வீட்டுக்கு 'ரெய்ட்' பண்ண வந்தவங்க கிட்ட ''ஈ'' ன்னு உங்க பல்லைக் காட்டினீங்களாமே?
குற்றவாளி: வந்தவங்க என்
சொத்தையெல்லாம் காட்டச் சொன்னாங்க...அதான்.
12. சீட்டு
ஒருவர்:உங்களுடன் சீட்டுக்குச் சேரும்
பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையில முறிச்சுக்கொண்டு,ஊர் மாறிக்
கால்வாரி விடப்போறான்.கவனம்.
மற்றவர்:நல்ல கதை.நானே முதல்
சீட்டை சேர்த்துக்கொண்டு நாடு மாறுவதற்கு
எல்லா ஆயத்தங்களும் செய்துவிட்டேன்.நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக்கொண்டு...
ஒருவர்:....!!!
13. பையனை காணோம்
சிவாஜி : ரெண்டு நாளா என் பையனை
காணோம்.
நம்பியார்: அப்படி எல்லாம் சந்தேகமா என்னை
பார்க்காதீர்கள் சார்! என் பொண்ணு வீட்டுல தான் இருக்கா.
14. கமிஷன்
தொண்டர்: தலைவா! உங்கள் பெயரில்
விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க..
தலைவர்: ''கமிஷனா'',.... வெரிகுட்! கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?
15. கார் குண்டு
கோபு: பையன் பட்டாசு கேட்டா அதுக்கு
ஏன் அவனை இப்படிப் போட்டு அடிக்கிறீங்க?
பாபு: கார் குண்டு தான் வேணும்னு அடம்
பிடிக்கிறான் ராஸ்கல்.
16. மேலே படிக்க
மகள்: அப்பா நான் மேலே படிக்க ஆசைப்படுறன்.
தந்தை: அப்படியா!.... மேஸ்திரி கிட்ட சொல்லி
மாடியில ரூம் கட்டி தரச் சொல்லுறன்.
17. யோகம் அடிக்கப் போகுது
செந்தில் : நம்ம ஜோசியர், யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியா போச்சு அண்ணே.
கவுண்டர்: ஏண்டா...லாட்டரி ஏதாவது
விழுந்ததா?
செந்தில்: நீங்கள் வேற அண்ணே வயித்தெரிச்சலைக்
கிளப்பிக்கிட்டு. நேத்து என் பொண்டாட்டி யோகத்திற்கும் எனக்கும் சரியான சண்டை. கடைசியில் என்ர கன்னம்
வீங்கி போச்சு அண்ணை.
18. எடுத்ததை எடுத்த இடத்தில
கோபு: கிணற்றில் விழுந்த குழந்தையை
கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ எதுக்குடா மறுபடியும் கிணத்திலேயே போட்டே?
பாபு: எடுத்ததை எடுத்த இடத்தில
வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது
நினைவுக்கு வந்துடுச்சே..
19. நேரத்தை வீணாக்காதீங்க
பார்த்திபன்:சார், உங்ககிட்ட ஒரு மணிநேரம் தனிப்பட ரீதியில பேசணும்.வீட்டுக்கு
வரலாமா?
வடிவேல்: ஐயையோ, வீட்டுக்கு வந்து என் நேரத்தை வீணாக்காதீங்க. ஆபிசுக்கே
வந்துடுங்க.ஒரு மணிநேரம் என்ன , இரண்டு மணிநேரம்கூட பேசலாம்.
20.maami.com
கோவை சரளா:எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப் போயிடுச்சுதெண்ணு சொன்னீங்க. அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு.
மனோரமா:இதுக்கு மேல விவரங்கள் வேணும்ணா, கூகிள்ள போய் மாமி.காம் ஓபன் பண்ணி பாத்துக்கடியம்மா.
👈👈👈👉👉👉
தொகுப்பு:செ.மனுவேந்தன்/s.manuventhan
0 comments:
Post a Comment