அறிவியல்=விஞ்ஞானம்
நோயறியும் ரோபோ
விரல்
நோயாளியின் உடலை வருடி, தடவி, உள் உறுப்புக்களின் நலனை அறியலாம் என்று
காட்டியிருக்கிறார்கள் சில ரோபோவியலாளர்கள். ஆம், சீனாவின், வூயி பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ரோபோ விரல்தான் அந்த விந்தையை செய்கிறது.
பயோனிக் விரல் என்று அழக்கப்படும் அந்த விரலை, தோலுக்கு மேல் வை்த்து
திருப்பித் திருப்பி அழுத்தினால் போதும், தோலுக்குக் கீழே உள்ள ரத்த நாளங்கள், திசுக்கள், எலும்புகள் போன்றவற்றை 'படித்து கணினி அல்லது மொபைல் திரையில் முப்பரிமாணத்தில்
காட்டிவிடுகிறது.
அந்தக் கால நாட்டு மருத்துவர்கள், தங்கள் விரல்களால் நாடி பிடிப்பது முதல், நோயாளியை தொட்டுப்
பார்த்தே நோயை அறிவர்.
அதேபோல, சீன விஞ்ஞானிகள்
உருவாக்கியிருக்கும் பயோனிக் விரல், கார்பன் இழைகளால் ஆன முனையை திரும்பத் திரும்ப, உடலில் வைத்து
அழுத்தும்போது, கார்பன் இழை
அழுந்தும் அளவு மற்றும் உடலின் பகுதி அழுந்தும்
விதம் போன்றவற்றை வைத்து, அக் கருவி தோலின் கீழே என்ன இருக்கிறது என்பதை திரையில் படமாகக்
காட்டுகிறது. இன்னும் சில மெருகூட்டல்களைச் செய்தால், எக்ஸ்ரே, சோனோகிராம்
போன்றவற்றுக்குப் போ ன்றவற்றுக்குப்
போட்டியாக, இந்த சீனத்து
பயோனிக் மருத்துவ விரல் வந்துவிடக்கூடும்.
துருவை விரட்டும்
பூச்சு.
உலோகங்கள் துருப் பிடிப்பதை தடுக்க புதிய வகை பூச்சு ஒன்றை சுவிட்சர்லாந்து
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பாலி பினைலின் மெதிலின் -பி.பி.எம்., என்ற இந்த பாலிமரைப்
பூசினால், துருப்
பிடிப்பதிலிருந்து கட்டடங்கள், வாகனங்கள் தப்பிப்பதோடு, விரிசல்கள் வந்தால் இந்த
பாலிமர் பூச்சு உடனே காட்டிக் கொடுத்து விடுகிறது.
அதுமட்டுமல்ல,
அந்த விரிசலை, பாலிமர் பூச்சு மெல்ல மூடிக்கொள்ளவும்
செய்கிறது. இதனால்,
விரிசலின் வழியே மீண்டும் துருக்கள் உருவாகாமல் தடுக்க
முடியும். புதுமையான பி.பி.எம்., பாலிமரை, ஸ்பிரே செய்து உலோக தகடுகள், துாண்கள் மீது பூசிவிட
முடியும். மிகச் சிறிய பலமாகப் பூசினாலே போதும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எல்.சி.டி.,
திரைக்கு டாட்டா!
முன்பு குண்டு பல்பு 'டிவி' பெட்டியைத் துரத்திவிட்டு 'எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., டிவி'க்கள் வந்தன. கால் நுாற்றாண்டைக் கடந்த பின், அவற்றையும் துரத்த நேரம்
வந்துவிட்டது என்கின்றனர், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
குறிப்பாக, எல்.சி.டி., தொலைக்காட்சிகள் திரவப்
படிகத்தைத் திரையாகக் கொண்டவை. இவற்றுக்கு
ஒளியூட்ட, திரைக்கு
பின்னால் விளக்குகள் எரியவேண்டும். எனவே தான், இதைவிடத் துல்லியமான, எடை குறைவான, மெல்லிய திரையை உருவாக்கி
உள்ளனர்.
பிரிட்டனின் நாட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் தேசிய
பல்கலைக்கழகம் மற்றும் நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், மின்சாரத்தைக் கடத்தும், கண்ணாடி போன்ற ஆக்சைடு, சிலிக்கன் தகடின்
மேற்பரப்பில் வண்ண மாற்றங்களை நிகழ்த்துகிறது.
இந்தத் திரை, எல்.சி.டி., திரையைவிட 100 மடங்கு லேசானது. எடையும்
குறைவு. மின்சாரத் தேவையும் கம்மி. ஆனால், பல மடங்கு துல்லியம்
கொண்டது. எல்லாவற்றையும் விட, எல்.சி.டி., தயாரிக்கும் அதே ஆலையில், சிலிக்கன் ஆக்சைடு திரை
கொண்ட 'டிவி'யை தயாரிக்க முடியும் என
இரு நாட்டு விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளன ர்.
பசுமைக் கண்ணாடி
வீடு.
கூரை மேல் மட்டுமா வெயில் படுகிறது? பக்கவாட்டுச் சுவர்களின் மேலும்தான் படுகிறது.
எனவே, சூரிய ஒளி மின் கருவியை, சுவர் கட்டுமானப் பொருளாகவே மாற்றினால் என்ன
என்று சிந்தித்தனர்,
பிரிட்டனிலுள்ள 'பில்ட் சோலா' 'ரின் ஆராய்ச்சியாளர்கள்.
அதன் விளைவாக உருவானதுதான் 'சோலார் ஸ்கொயர்டு' என்ற, முழுக்க முழுக்க கண்ணாடி யால் ஆன சதுர செங்கற்கல்.
இந்தக் கற்களால் வீட்டுச் சுவர்களை அமைத்தால், வீட்டுக்குள்
வெளிச்சத்திற்குப் பஞ்சமிருக்காது. குளிர் பிரதேசத்தில் கதகதப்பையும் வீட்டுக்குள்
இது கொண்டு வரும்.
ஆனால், அதைவிட
முக்கியமாக, சோலார் ஸ்கொயர்டு
கண்ணாடிக் கற்களுக்குள், சூரிய ஒளியை மின்சாரமாக்கும் கருவிகளும் பதிக்கப்பட்டுள்ளன.
எனவே, விளக்குகள், வெப்ப சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதோடு, மின்சாரத்தையும் இந்தப் புதுமைக் கண்ணா டிச் சுவர்கள் உற்பத்தி செய்யும். வெறும் கண்ணாடி போல மட்டுமல்லாமல், சில வண்ணங்களிலும் சோலார் ஸ்கொயர்டு கற்கள் கிடைக்கவுள்ளன.
தொகுப்பு:செமனுவேந்தன்
0 comments:
Post a Comment