சர்தாஜி ஜோக்ஸ்
கொசு கடிக்காதா...?
லொறி ஓட்டும் சர்தாருக்கு, அவன் மகன்தான் கிளீனர்.
ஒரு இரவில் லொறி நடுக்காட்டில் பழுதுபட்டு நின்றுவிட்டது. காலையில்
பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் படுத்துக் கொண்டனர்.
ஆனால் கொசுக்கள் அவர்களைத் தூங்க விடவில்லை.அப்பொழுது..
அப்பா:ரொம்ப கொசுக்களாயிருக்கு. போர்வையை
இழுத்துப் போர்த்திக்கோப்பா...
மகன்:போர்த்திக்கிட்டா கொசு கடிக்காதா அப்பா?
அப்பா:ஆமாம்..போர்வைக்குள்ள இருட்டாய் இருக்கும்...கொசுவுக்கு கண்
தெரியாது....!
அப்பா தூங்கிவிட்டார்...புதிய அனுபவம், மகனுக்குத்
தூக்கம் வரவில்லை..சற்றுநேரத்தில் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்தன.. தூக்கத்திலிருந்த
அப்பாவை, மகன் எழுப்பிச் சொன்னான்,
மகன்:''அப்பா...என்னமோ
சொன்னியே .... இருட்டில நுளம்புக்குக்
கண்ணு தெரியாதெண்டு... இப்ப பார்த்தியா ... எல்லாக் கொசுவும் டோர்ச் லைற் எடுத்துப்
பிடிச்சுக்கொண்டு வருகுது.....!''
சுவற்றில் ஆணி
ஒரு சர்தார் வீடு கட்டிக்
கொண்டிருந்தார். அவரே தச்சு வேலையையும்
செய்தார். ஒரு ஜன்னலை பொருத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு
செய்யும்போது சில ஆணிகளை அடிப்பார், சிலவற்றை தூக்கி வீசி விடுவார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு நண்பர் சர்தார்,
அவரிடம் கேட்டார்.
''இந்த ஆணி எல்லாம்
நல்லா தானே இருக்கு. ஏன் தூக்கி வீசுறீங்கள்.''
''முட்டாள்...
நல்லாய் பாரு... கூர்முனை என் பக்கம்
இருக்கிற அணியா இருந்தால் எப்படி அடிக்க முடியும். கொண்டைப்பக்கம் என்னை நோக்கி
இருந்தால்தானே அடிக்க முடியும். அதுதான்
என் பக்கம் கூர் இருக்கிற ஆணியை வீசுகிறேன் என்றார்.
அப்பொழுது நண்பர் கூறினார் ‘’இதுக்கு தாண்டா நம்மளை எல்லாரும் ஏளனம் பண்றாங்க.
அறிவு கெட்டவனே, கூர்முனை நம்ம பக்கம் இருந்தால், அது எல்லாம்
சுவருக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி என்று விளங்கிக் கொள். அதை வீட்டுக்கு
உட்பக்கம் கொண்டு போய் அடிக்க வேண்டியது தானே! ஏன் தூக்கி போடுறே..!!’’ என்றாரே பார்க்கலாம்.
சிறுநீர்
கொண்டு வா
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றபோது,
அவரது சிறுநீரை பரிசோதித்த டாக்டர் சில மருந்துகளை கொடுத்து
''இதை சாப்பிட்டு வாங்க, உங்களுக்குக் கொஞ்சம் சர்க்கரை இருக்கு எதுக்கும் மூன்று
மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டு வாங்க பரிசோதித்து பார்ப்போம்'' என்றார்.
மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கலன்களை
தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கி வந்து டாக்டர் முன் வைத்தார் சர்தார்.''
டாக்டர்: ''என்ன இவை?''
சர்தார்: ''நீங்க தானே
மூன்று மாதம் சிறுநீர் கழித்துக் கொண்டு
வரச் சொன்னீர்கள்''
பழைய சாதம் சாப்பிடு
சர்தாஜியும்.... தமிழ்நாட்டுக் கிழவர் ஒருவரும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள்.
கிழவர் காற்று வேண்டும் என விரும்பி, யன்னலைத் திறக்க முயற்சிக்கின்றார்.....முடியவில்லை.
சர்தாஜி எழுந்து... ''சலோ,சலோ'' என்று சொல்லி
கண்ணாடியை இழுத்து திறந்து விடுகிறார். பின்னர்
''கோதுமை
சாப்பிடுங்க, உடல்
வலுவாகிவிடும்'' என
பெரியவரைப் பார்த்துச் சொல்லுகிறார்.
பெரியவர் அமைதியாக இருக்கிறார்.
அடுத்து பாத்ரூம் கதவை திறக்க கிழவர்
முயற்சிக்கிறார்..... முடியவில்லை. உடனே சர்தார் ஓடிவந்து ''சலோ சலோ'' என கூறித்
திறந்துவிடுகிறார்.
மறுபடியும் பெரியவரை பார்த்துக் ''கோதுமை சாப்பிடு
உடல் வலுவாகிவிடும்''
என்று கூறுகிறார்.
பெரியவர் மீண்டும் அமைதியாகவே
இருக்கிறார்.
இவனுக்கு பாடம் கற்பிக்க
நினைக்கிறார்.
இரயிலின் அபாயச்சங்கிலியை இழுப்பதுபோல் பாவனை செய்கிறார்.
உடனே சர்தாஜியும் வந்து ''சலோ, சலோ என செயினைப் பிடித்து இழுக்க, ரெயில்வண்டி நிறுத்தப்பட, டி.டி.ஆர் வந்து
சர்தாஜியிடம் வந்து அபராதம் வசூலித்து செல்கின்றனர்.
அப்போது அந்தப் பெரியவர் சர்தாஜியைப் பார்த்துச் சொல்கிறார்.
''உடல் வலிமையானால்
மட்டும் போதாது தம்பி. மூளையும் வளரனும். பழைய சாதம் சாப்பிடு'' என்கிறார்
சிரித்துக் கொண்டே.
என் வீட்டுக்கு வா
சர்தார்:(தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க
மாட்டார்கள்.
(நண்பி அவ்வாறே
சர்தார் வீட்டுக்கு இரவு சென்றார்.
உண்மையில் அவர் கூறியபடி யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
தொகுப்பு:செ,மனுவேந்தன்/S.Manuventhan
No comments:
Post a Comment