சந்தேகம் & சிந்தி


சந்தேகம் கொள்ளல் ஆகுமா?

 "அக்கம் பக்கம் யாரும் இல்லை

அக்கினி போல் நெஞ்சு எரியுது!

அச்சம் வெட்கம் உனக்கு வேண்டாம்

அருகில் வந்து காதல் பொழியாயோ?

அடர்ந்த கூந்தல் காற்றில் ஆடுது

அணிகலன் ஓசை காதில் விழுகுது!

அழகு உடல் கண்ணை கவருது

அம்புலி ஒளியில் இன்பம் தாராயோ?

அன்றும் இன்றும் என்றும் நானே

அன்பே சந்தேகம் கொள்ளல் ஆகுமா?"

 

 

கூற்றுவன் கூட….சிந்திப்பான்!

 

"தன்னையே  கொல்லும் விலங்கு மனிதா?

கொல்வதும் சாவதும் கவலை தருகிறது!

கொலையை வெறுத்த புத்தன் எங்கே?

கொலையில் வாழும் பக்தன் எங்கே?

பொய்கள் கூறும் அரசியல் வாதிகளே!

வரலாற்றை  சரியாக படித்துப் பாருங்கள்!

பெரும்பான்மை சிறுபான்மை எண் மட்டுமே!

தமிழர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே!

கொல்லாத அறத்தை கையாண்டு பார்

கூற்றுவன் கூட கொஞ்சம் சிந்திப்பான்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment