அறிவியல்=விஞ்ஞானம்
வாகனங்களுக்கான புதிய உணரி
வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள் அடர்ந்த கூட்டமாக பறக்கும் போது ஒன்றோடு
ஒன்று மூடாமல் பறப்பது எப்படி?
அதற்கென பூச்சிகளின் மூளையில் ஒரு
நரம்பு அமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா
மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூச்சிகளின் இந்த நரம்பு அமைப்பின் உந்துதலில், ஒரு உணரியை ['ஆப்டோ எலக்ட்ரானிக் சென்சார்'] உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே வாகனங்களுக்காக
உருவாக்கப்பட்ட இந்த மோதல் தவிர்ப்பு உணரியை
விட, அளவில் மிக
நுண்ணியதாகவும், குறைந்த மின்சாரத்தை
இந்த உணரி நுகர்கிறது. இந்த உணரி இரவில் வாகனங்களுக்கு எதிரில் வரும்
வாகனங்களின் ஒளியை வைத்து இரு வாகனங்களுக்கிடையிலான இடைவெளியை
கணித்து மோதலை தவிர்க்க உதவும்.
தீவனமாகும் வீண் உணவு...
மீதமாகும் உணவுப் பொருட்கள் குப்பைமூட்டுக்கு போவது பெரும் பொருளாதார இழப்பு
மட்டுமல்ல காட்டில் மீத்தேன் மாசு
கலப்பதற்கும் அது வழி வகுக்குறது.
அத்தோடு பயனுள்ள சத்துக்களும் அதை
சமைக்க பயன்படும் எரிபொருளும் வீணாகிறது .
இப்படி வீணாகு ம் உணவுப் பொருட்களை மட்டும், கோழி தீவனமாக மாற்ற
முடியும் என்று, அதற்குரிய ஒரு
கருவியை உருவாக்கியுள்ளார்கள் ''மில் இன்டஸ்ட்ரீஸ்'' நிறுவனத்தின் விஞ்ஞானிகள்.
பார்க்கக் குப்பைத் தொட்டி போல இருக்கும் அந்த கருவியில்
வீணாகும் உணவு, கெட்டுப்போன
உணவுகளை கொட்டி விட வேண்டும். பிறகு அந்த கருவி இரவு முழுவதும் அதை உலர்த்தி, சுண்ட வைத்து
துர்நாற்றத்தைப் போக்கி துகள்களாக மாற்றிவிடுகிறது.
கருவி நிரம்பியதும் ''மில் இண்டஸ்ட்ரீஸ்''காரரை
அழைத்தால்,
அவர்கள் வந்து வாங்கிச் சென்று அதை கோழி தீவனமாக மாற்றி
விடுவர். இதை சந்தா அடிப்படையில் அமெரிக்காவில் சில நகரங்களில் மில்க்
இண்டஸ்ட்ரீஸ் காரர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஒலி படைக்கும் 'ஹோலோகிராம்!'...
திரை இல்லாமல் முப்பரிமான உருவங்களை
காட்டுவது தான் ஹோலோகிராம். இது ஒளி இயற்பியலால் செய்யப்படும் வித்தை. ஆனால் இதே
போன்ற ஹோலோகிராம் உருவங்களை ஒலியாலும் உருவாக்க முடியும் என்று காட்டியுள்ளனர்
ஜெர்மனியை சேர்ந்த ஹெய்டெல்பெர்க்...
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அது எப்படி 'அல்ட்ராசவுண்ட்' எனப்படும் மீ ஒலியை
ஏழுப்பும் தகடுகளை,
நாலாபுறமும் வைத்து, நடுவே ஒரு திரவத்தில் மிதக்கும் கண்ணாடிக்
குளிகைகள் ''ஹைட்ரோஜெல்'' போன்றவற்றை விஞ்ஞானிகள்
வைத்தனர். இப்போது தேவையான உருவத்தை வார்த்தெடுக்க, தகடுகளில் இருந்து
ஒளியைக் கட்டுப்படுத்தி அனுப்பினர்.
இந்த ஒலிப்புலம் கண்ணாடி குளிகை போன்றவற்றை நகர்த்தி, வேண்டிய உருவத்தை கொண்டு
வரும் வகையில், ஒரு வார்ப்பு
போலச் செயல்பட்டது.
இந்த நுட்பத்தின் மூலம் ஒரு புறா '8'வடிவம் போன்ற உருவங்களை
உருவாக்கினர். ஒலிமூலம் ஹோலோகிராம் படைக்க முடிந்தது ஆச்சரியம் என்றால், அதே நுட்பத்தின் மூலம்
உயிருள்ள செல்களை வைத்து, உடல் உறுப்புகளை கூட முப்பரிமாணத்தில் அச்சிட முடியும் என
ஹெய்டெல்பெர்க் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக்கை உண்ணும் 'பேக்டீரியா'...
வீணாக கடலில் கலந்து மிதக்கும் பிளாஸ்டிக்குகளை சேகரித்து மறுசுழற்சி செய்வது
ஒரு பக்கம் நடக்கிறது இருந்தாலும், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் மூலம்
பிளாஸ்டிக்கை அழித்தொழிக்கவும்
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
அதில் ஒரு வெற்றி கதையாக, ராயல் நெதர்லாந்து
கடலாராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள்,'ரோடோகோகஸ் ரூபர்' என்ற நுண்ணுயிருக்கு
பிளாஸ்டிக்கை தின்னக் கொடுத்தனர்.
நீருக்குள் இருக்கும் அந்த பக்டீரியாக்கள் போடப்பட்ட பிளாஸ்டிக்கின் சிறிதளவு
பகுதியை உண்டு சேரித்துள்ளன. இது அந்த மூடப்பட்ட நீர் தொட்டியின் மேற்பகுதியில் 'கார்பன் டைஆக்சைடு' வாயு அதிகம் இருந்ததை வைத்து ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment