குடை மிளகாய் அறுவடை செய்யும் 'ரோபோ'
ஜப்பானில் ரோபோ நிறுவனமான 'அக்ரிஸ்ட்'டின் விஞ்ஞானிகள், குடைமிளகாயை அறுவடை செய்யும் ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
மூடப்பட்ட பண்ணைகளில் விளையும் குடை மிளகாய் செடிகள் வரிசையாக வைக்கப்பட்டு தொட்டிலில் வளர்கின்றன. அக்ரிஸ்ட் உருவாக்கியுள்ள 'எல்'என்ற ரோபோ மேலே இரும்பு படத்தில் தொங்கியபடி, செடி வரிசைகளின் இடைவெளியில் பயணித்து குடை மிளகாய் செடிகளை பார்வையிடுகிறது.
அறுவடைக்கு தயாரான காய்களை அடையாளம் காண சில கேமராக்கள் மற்றும் உணரிகளும் 'எல்'ரோபோவின் இருக்கின்றன
மேலும் இலைகளால் மறைந்திருக்கும் குடை மிளகாயையும் இந்த ரோபோ கண்டு லாவகமாக பறிக்க .ரோபோ கரம் ஒன்று இருக்கிறது. இது மிளகாய் காம்பு பகுதியை துல்லியமாக பிடித்து , செடிக்குப் பாதிப்பில்லாமல் துண்டித்து, ஒரு கூடையில் பத்திரமாக கொட்டிவிடுகிறது.
இந்த ரோபோவால் குடைமிளகாய் 20% அதிக மகசூல் கிடைக்கும் எனவேதான் ரோபோவைஅறுவடையில் பங்கு பெறும் திட்டத்தை ரோபோ நிறுவனம் முன்வைத்துள்ளது.
ரேடியோ அலைகளிலிருந்தும் மின்சாரம்.
காற்று அலைகளோடு விரவிக்கிடக்கும் ரேடியோ மின்காந்த அலை ஆற்றலை மின்சாரமாக மாற்றும் ஆராய்ச்சி சூடு பிடித்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இத்தகைய ஆற்றலை பயன்படுத்தும் ஒரு உத்தியை கண்டுபிடித்து, காப்புரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
பரவலாக இயங்கும் கம்பியில்லா கருவிகள், கணிசமான ரேடியோ மின்காந்த அலைகளை வீணாக வெளியேற்றுகின்றன.
அப்படி வீணாகும் அலைகளைத்தான் புளோரிடா விஞ்ஞானிகளின் உத்தி பயன்படுத்துகிறது. 'பீஸோஎலெக்ட்ரிக்' வகை பொருட்கள் சில, ரேடியோ அலைகளை பயன்படுத்தும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இதை 'இன்டர்நெட் ஆஃ திங்ஸ்' எனப்படும் இணையம் சார்ந்த சிறிய மற்றும் நுண்கருவிகளுக்கு மின்சாரம் கொடுக்கப் பயன்படுத்த முடியும்.
ரேடியோ அலைகளைத் தேட உணரிகளோ, மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், சேமிக்கவும் மின்கலனோ தேவையில்லை.
எனவே இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சூழலை கெடுக்காத சிமென்ட்.
கட்டிட மூலப் பொருளான சிமெண்ட் உற்பத்திக்கு 1,500 டிகிரி செல்ஸியல் வெப்பமேற்றலின்போது ஏகப்படட மாசு காற்றில் கலக்கிறது.
சிமெண்டுக்கான சுண்ணாம்புக்கல்லுக்குப் பதிலாக, கால்சியம் சிலிகேற் பாறைகளை சுரங்கங்களிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம் என்று 'பிரைம்ஸ்டோன்' என்ற அமெரிக்க நிறுவனம். இதன் மூலம் கார்பன் மாசு காற்றில் கலப்பது தவிர்க்கப்படுகிறது.
இது தற்போது வழமையில் பாவிக்கப்படும் சிமெண்ட் போலவே உறுதியானது என்றும், சற்று செலவும் குறைவானது என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
டிராக்டரை இயக்கும் சாண எரிவாயு!
டிராக்டர்- உழவு இயந்திரங்களை தயாரிக்கும் நியூ ஹாலண்ட் நிறுவனம் அண்மையில் திரவமாக்கப்பட்ட சாண எரிவாயுவில் ஓடும் உலகின் முதல் உழவு இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறது.
''டி7 மீத்தேன் பவர் எல்.என்.ஜி' என்ற அந்த பசுமை இயந்திரத்திற்கான எரிபொருளை விவசாயியே தயாரித்துக் கொள்ள முடியும்.
மாடுகளின் சாணத்தை தொட்டியில் கொட்டி, மீத்தேன் வாயுவை எடுத்து, அதைத் திரவமாகிச் சேமித்து வைத்தா, இலவசமாகவே உழுதல், விதைத்தல், அறுவடை, விற்பனை என்று சகலத்தையும் நியூ ஹாலண்ட் டிரக்டர் செய்துகொடுக்கும் என்கிறது அந்த நிறுவனம்'
உலகமெங்கும் பல லட்சம் உழவு இயந்திரங்கள் டீசல் புகை கக்குகின்றன.அவற்றுக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கை வைக்காமலேயே, கைபேசியில்...
காதில் அணியும் ஒலிக்கருவியில் இன்னுமொரு புதுமை வருகிறது.
'வைஸ்இயர்போன்' என்ற இந்தக் கருவி, உங்கள் முக அசைவுகளைப் பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனை இயக்க உதவுகிறது.
அது எப்படி? உங்கள் முகத் தசை அசைவுகள், கண் அசைவுகள் மற்றும் மூளை ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் உயிரிமின் சமிக்ஞைகளை பெரிதாக்கி தரும் அமைப்பு வைஸ்இயர்போனில் உள்ளது. அப்படி பெரிதுபடுத்திய சமிக்ஞைகளை பெரிதாக்கி தரும் அமைப்பு வைஸ்இயர்போனில் உள்ளது.
அப்படி பெரிதுபடுத்திய சமிக்ஞைகளை ஒரு மொபைல் செயலிஅலசி, அவற்றை உத்தரவுகளாக மாற்றுகிறது. இதன் மூலம், மொபைலை இயக்க முடியும். கை வைக்காமலேயே, மொபைலில் அழைப்புகளை எடுக்கவும், ஒலியை கூட்டவும் முடியும்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment