கடைசியாக வந்த திரைப்படங்கள்

சுருக்கமான விமர்சனம்

 


👉''சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்''

திரைப்பட விமர்சனம் [Tamil movie ''Single-Shankarum-Smartphone-Simranum '' Review]

 விக்னேஷ் ஷா இயக்கத்தில் ஷிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மா கா பா ஆனந்த் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம்.  குமார்.கே தயாரிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

திருமணம் ஆகாத விஞ்ஞானி தனது ஆய்வகத்தில் கம்ப்யூட்டர் மூலமாக ஒரு பெண்ணை உருவாக் குகிறார். இந்த செல்போன் தவறுதலாக   ஷங்கரின் (சிவா ) கையில் கிடைக்கிறது.  

செல் போனில் உள்ள கம்ப்யூட்டர் பெண்ணான சிம்ரன் ஷங்கரை காதலிக்கிறார். ஷங்கரோ மாடலான துளசியை (அன்ஜூ  குரியன் ) காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் சிம்ரன் பல்வேறு குழப்பங்களை ஷங்கரின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறார். இறுதியில் ஸ்மார்ட் போன் காதல் ஜெயித்ததா? அல்லது நிஜக் காதல் ஜெயித்ததா என்பதே கதை.

போன் புதிது கதை பழசு (ரஜனியின் எந்திரன் படத்தில் ரோபோ கதை)[2.5/5]

📽...📽...📽

 

👉''குற்றம் புரிந்தால்'' -திரைப்பட விமர்சனம் [Tamil movie ''Kuttram-Purinthal '' Review]

 டிஸ்னி இயக்கத்தில் ஆதிக் பாபு, அர்ச்சனா முத்தையா, எம் எஸ் பாஸ்கர் என பலர் நடித்திருக்கும்  இப்படத்தினைஆத்தூர் பி ஆறுமுகம் தயாரிக்க,  கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார்.

மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்து, மாமன் மகள்  அர்ச்சனாவை காதலித்த ஆதிக் பாபுவையும், மாமன்  எம்.எஸ்.பாஸ்கரையும் குற்றுயிராக அடித்து போட்டு விட்டு அர்ச்சனாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுகிறார்கள்.  போலீஸ் அதிகாரியும், அரசு மருத்துவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை அறிகிறார். கொலையாளிகளை பழிதீர்க்க என்ன செய்கிறார் என்பதை படம் கூறுகிறது.

குற்றம் புரிந்தால்’ ஒரு முறை பார்க்கலாம்தான்..![2.75/5]

📽...📽...📽


👉''வாத்தி''திரைப்பட விமர்சனம் [Tamil movie ''vaathi'' Review]

 வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ்,சமுத்திரக்கனி, சம்யுக்த மேனன், சாய் குமார் எனப் பலர் நடித்திருக்கும்  நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்க,  ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கல்வியை வியாபாரமாக பார்க்கும் முதலாளிக்கும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல்தான் `வாத்தி` திரைப்படத்தின் மையக்கரு. பள்ளிக்கல்வியில் நடைபெறும் சில மோசடிகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது.

ஒரு சமூக அக்கறை கொண்ட திரைப்படம்.[3/5]

📽...📽...📽


👉 ''பகாசூரன்'' திரைப்பட விமர்சனம் [Tamil movie ''Bakasuran'' Review]

 மோகன் ஜி இயக்கத்தில் நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  இப்படத்தினை  மோகன் ஜி 'ஜி எம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பகாசூரன் படத்தினை தயாரிக்க,  சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 தன்னுடைய அண்ணன் மகளின்  தற்கொலையை தொடர்ந்து அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அந்த காரணத்தைக் கண்டு மிரண்டு போன நட்டி இதே போன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் பாதிக்கப்பட்ட தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குவதே கதை.

பாதி சூரன் என்றே கூறலாம் [2.5/5]


📽...📽...📽

தொகுப்பு:செ.மனுவேந்தன்

📽...📽...📽


No comments:

Post a Comment