சிரிக்க...சில நிமிடம்

 நகைச்சுவை /ஜோக்ஸ்/ jokes 


😁01.

ஆசிரியர்: பிள்ளைகளே, சுத்தம் சோறு போடும்.

மாணவன்:சார், அப்படியென்றால் எது சார் குழம்பு ஊத்தும்?

😁02.

ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்க முதல், தன்னுடைய சட்டைப் பையில நூறு ரூபாய் வைக்கிறாரு. காலையில பாக்கிறபோது 100 ரூபாய் அப்படியே இருக்குது.இதில இருந்து என்ன தெரியுது?

மாணவன்: எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.

😁03.

நோயாளி:டாக்டர்..., நீங்கள் சொந்தமாய் வீடு கட்டிக்கிட்டு இருந்தீங்களே... அந்த வேலை முடிஞ்சுதா?

 டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க அதை ஏன் தினம் தினம் கேட்க்கிறீங்க?

நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்க என்று தெரிஞ்சுக்கத்தான்.

😁04.

நோயாளி: என்னால வாய் திறக்க முடியலை டொக்டர்.

டொக்டர்: சரி!சரி! உங்க மனைவியை கொஞ்ச நேரம் வெளியில வெயிட் பண்ணச் சொல்லுறேன்.

😁05.

டொக்டர்: உங்க மனைவியின் உடம்புக்கு என்ன வியாதி?

கணவன்: அது தான் தெரியலை டொக்டர். இரண்டு நாளாய் என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்பப் பெருமையாய்ப் பேசுறா ... எனக்கு ரொம்பப் பயமாய் இருக்கு டொக்டர்.

😁06.

ராணி:டொக்டர்.... என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது டொக்டர்....

டொக்டர்: எப்பிடி,எதை வைச்சுச் சொல்லுறீங்க?

ராணி: சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டொக்டர்.

😁07.

வேணி: குடும்பத்திற்கு விளக்கேற்றி வைக்க பொண்ணு வேணும்னு சொல்லி என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாய் போச்சு...

ராணி:என்ன நடந்தது?

வேணி: என் மருமகள் விளக்கு ஏத்திறதை தவிர வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா...

😁08.

காவலாளி: இந்த குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

பெண்: அதை ஆடை அவிழ்ப்பதற்கு முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா?

காவலாளி: ஆடை அவிழ்ப்பதை தடுக்க இங்க எந்தச் சட்டமும் இங்கு இல்லையே!

😁09.

பெண்:என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுடைய எல்லாத் துக்கத்திலும் நான் பங்கெடுத்துக்கொள்வேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்குத்தான் ஒரு பிரச்சனையோ,துக்கமோ  இப்ப இல்லையே!

பெண்:அதுக்கு நீங்க என்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!!

😁10.

ராணி:சென்சார் போர்டிலை வேலை செய்யிறவரை கலயாணம் செய்துக்கிட்டது தப்பாய் போச்சுது.

வேணி:ஏன்? என்ன நடந்தது?

ராணி:படுக்கை அறை இல்லாத வீடு கட்டி வைச்சிருக்கிறாரு!

😁11.

திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையாய் எடு பேர்ஸை.

போலீஸ்: டேய், நான் போலீஸ்க்காரன்... மரியாதையாய் எடு மாமூலை. 

😁12.

நேர்ஸ்1: ஏன் எல்லாப் நோயாளிகளும் ரொம்ப சந்தோசமாய் இருக்காங்க.?

நேர்ஸ்2: டொக்டர்கள் எல்லோரும் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம்.அதுதான்...

😁13.

வடிவேல் தன்னுடைய இரண்டு நண்பர்களையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தார். ற்றவிக் போலீஸ் கையை நீட்டி ,நிறுத்தச் சைகையை செய்தார்.அப்போது வண்டியை நிறுத்திய 

வடிவேல்: கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏற்கனவே மூன்று பேர் இருக்கோமெல்லே. நாலாவதா நீங்க எங்க உட்காருவீங்க? 

😁14.

சோமு: டொக்டர் செலவு மட்டும் எனக்கு  500 ரூபாய் ஆகுமுங்க!

ராமு: டொக்டருடைய இறுதிச் செலவைப்போய் நீங்க ஏன் பண்ணுறீங்க? அதுக்குமுதல் அவர் உங்களுக்கு வச்சிடுவாங்களே!

😁15.

சரளா: 22 ம் நம்பர் பஸ் எங்க வருமுங்க?

விவேக்: றோட்டிலதான்!

😁16.

வடிவேலு: சார்.. ஆறு வருசத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகுமென்று சொன்னீங்களே... என்ன ஆச்சு?

பார்த்திபன்: ஆமா.. டபுள் ஆகுமேன்னு தானே சொன்னோம்... அதைத் திருப்பித் தர்றதாய் சொல்லலையே!!

😁17.

வாணி: இன்னும் முப்பது வருஷம் இளமையாக இருக்க ஏதாவது வழி இருக்கா?

ராணி:எதுக்கு?

வாணி:ஒரு மெகா சீரியல்ல கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு..அதுதான்.

😁18.

பஸ்ஸில்வடிவேல் ,பார்த்திபனின்  தோளைத் தட்டி,

வடிவேல்: இது இராயப்போட்டையா?

பார்த்திபன்:இல்லை,இது தோள்பட்டை.

😁19.

கோபு: டேய் பாபு,எனக்கு என் வாழ்வில பிடிப்பில்லாம போச்சுது.தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதடா.

பாபு: அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ.அது போதும்.

😁20.

ஆசிரியர்; பூமி தன்னைத்த்தானே சுற்றி சூரியனைச் சுற்றுமா? இல்லை சூரியன் தன்னைத் தானே சுற்றிப் பூமியைச் சுற்றுமா?

மாணவன்: எனக்கு இப்ப தலையைச் சுற்றுது சார்.

...............................தொகுப்பு: செ.மனுவேந்தன் 


No comments:

Post a Comment