தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ்
மருத்துவத்தின் வரலாறு பெரிதாகப் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சமஸ்கிருத மொழி
பேசும், கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி
நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படும் சுசுருதர் (Sushruta), வரலாற்று
சாட்சியங்கள் கூடிய,
இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவர்களில் முன்னோடியாக
கருதப்படுகிறார். இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய
நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என அறியப்படுகிறது. இவர் நீரிழிவு (நீீர்+அழிவு)
நோயைப் பற்றியும் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே நீரிழிவு
ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயும் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது
இருந்துதான் வந்து இருக்கிறது என்பது கிரேக்கத்திலும் இந்தியாவிலும் கிடைத்த
வரலாற்று குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
உதாரணமாக, எகிப்திலேயுள்ள
பழைய சுவடுகளில் இந்நோயைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அச்சுவடியில்
நீரிழிவு நோய் பற்றியும் அதற்கான மருந்துகளும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்
தக்கது. அந்த சுவடு ஒன்றில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தியர்கள் [ancient Egyptians] ஒரு நோயை பற்றி
குறிப்பிடும் பொழுது அது அடிக்கடி அல்லது மேலதிகமாக சிறுநீர் கழித்தல், தாகம் [நீர்வேட்கை]
மற்றும் எடை இழப்பு / உடல் இளைத்தல் [excessive urination, thirst, and weight loss] கொண்ட, ஈற்றில் கொல்லும்
விநோதமான நோய் என பதியப் பட்டுள்ளது [உதாரணமாக, கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா [Hesy-Ra, an Egyptian physician] எனும் எகிப்திய
மருத்துவர், நீரிழிவைப்
பற்றிப் பேசியிருக்கிறார்]. எனவே இது அதிகமாக முதலாம் வகை நீரிழிவு [type 1 diabetes] ஆக இருக்கலாம் என
நாம் இன்று ஊகிக்கலாம். இதற்கு முழு தானியங்களின் உணவு [diet of whole grains] நல்ல தீர்வு
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. இது இலங்கையில் சீனி வியாதி
அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
பண்டைய இந்தியாவில் கிடைத்த குறிப்புகளின் படி, ஒருவருக்கு நீரிழிவு
இருக்கா இல்லையா என்பதை அறிய, ஒரு விசித்திரமான முறை ஒன்றை கையாண்டார்கள்.
சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்த்தால், கட்டாயம் அந்த சிறுநீரில்
இனிப்பு கலந்து இருக்கவேண்டும் என முடிவு எடுத்தனர். இந்த இனிப்பு அதிகமாக
காணப்படும் நிலையை [high sugar levels] அவர்கள் மதுமேக [madhumeha / honey urine] அல்லது தேன்
சிறுநீர் என அழைத்தனர். என்றாலும்
கிரேக்கத்தில் கி.பி. 150 ஆண்டளவில், இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் [Hippocrates] என்பவரின்
மாணவரான "அரிடாயஸ்” அல்லது அரேஷியஸ் [Aretaeus] என்பவரே இந்நோய்க்கு
“டயாபடீஸ்” எனப்பெயரிட்டார். இவர்
இதை ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக்
கரைந்து வெளியேறும் நோய்’ ["the melting down of flesh and limbs into urine."] என்று அன்று
விளக்கமும் கொடுத்தார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த
நோய்க்கு ஏற்பட்டது. என்றாலும் கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அபோலோனிஸ் மெம்பிஸ் [Apollonius of Memphis] தான் முதன்
முதலில் “டயாபடீஸ்” [diabetes] என்ற வார்த்தையை
குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகிறது. எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த
நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய
சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற் கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி
இருந்தனராம். அவர்களுக்கு நீர் சுவைப்பவர்கள் [‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ / "water tasters"] என்று பெயருண்டு.
அதாவது சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப்
பார்த்து, அப்புறம் நாவில்
சுவைத்துப் பார்த்து, நோயைக் கணித்துச் அன்று சொல்லியிருக்கின்றனர்.
காலப்போக்கில், கிரேக்க மருத்துவர்கள்
[Greek
physicians] டயாபடீஸ் மெல்லிடஸ் [நீரிழிவு நோய்] மற்றும் டயாபடீஸ் இன்சிபிடஸ் [diabetes mellitus and diabetes
insipidus] ஆகியவற்றின் வித்தியாசத்தை கண்டறிந்தனர். இங்கு
மெல்லிடஸ் என்றால் மது (தேன்) என்று
பெயர். இங்கு டயாபடீஸ் இன்சிபிடஸ் என்பது
கூடுதல் சிறுநீர்க் கழிப்பு நோய் அல்லது வெல்லமில்லாத நீரிழிவு அல்லது
நீர்நீரிழிவு; கழிநீரிழிவு
என்று கூறலாம். டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் வாசோபிரசின் அல்லது வாசோபிரெசின் என்ற
ஒரு ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது. இதை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கிறது [Diabetes insipidus results from a
problem with a hormone called vasopressin that the pituitary gland produces]. இந்த
வாசோபிரெசின் (Vasopressin)
இயக்குநீர், ஆண்டிடையூரிடிக் இயக்குநீர் என்றும்
அழைக்கப்படுகிறது [also
called antidiuretic hormone (ADH), arginine vasopressin (AVP) or argipressin]. இந்நோய்
கண்டவர்கள், அதிக அளவில்
சிறுநீர் வெளியேற்றுவார்கள் (பாலியூரியா / polyuria). இதனைத் தொடர்ந்து அதிக
அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா / polydipsia). இது நீரிழிவு
நோயுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயின் சில அறிகுறிகளை [signs and symptoms] அப்படியே
கொண்டுள்ளன.
கலென் (Galen)
என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது
குளோடியசு கலெனசு என்பவர் ரோமன் குடியுரிமை கொண்ட ஒரு பண்டைய கிரேக்க மருத்துவர்
ஆவார். இவரும் டயாபடீஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், தான் ஆக இரண்டு பேரையே
அந்த நோயுடன் பார்த்ததாக ஆச்சிரியப் படுகிறார்! இவர் கி மு 129 இல் இருந்து கி மு 216 வரை வாழ்ந்தவராவார். இது
எமக்கு எடுத்துக்காட்டுவது இந்த நோய் அந்த நாட்களில் ஒப்பீட்டளவில் அரிதானது
என்பதே ஆகும். கி பி ஐந்தாம் நூற்றாண்டளவில், இந்திய மற்றும் சீனா மருத்துவர்கள் முதலாம் வகை
நீரிழிவு (Diabetes
mellitus type 1) மற்றும்
இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு
அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவுக்கு (Diabetes mellitus type 2) இடையில் உள்ள வேறுபாட்டை
கண்டறிந்தார்கள். அது மட்டும் அல்ல, இரண்டாவது வகை நீரிழிவு பருமனான, பணக்கார மக்களிடம்
பொதுவாக காணப்படுவதாகவும் [more common in heavy, wealthy people], இதற்கு முக்கிய
காரணம் அவர்கள் சாதாரண மக்களை விட கூடுதலாக சாப்பிடுவதுடன் குறைந்த அளவு வேலை செய்வதுமே
என்றும் பதிந்து உள்ளார்கள். இன்றும் உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்], உணவுமுறை மற்றும்
உடற்பயிற்சி இல்லாமை [obesity, diet, and a lack of exercise]
ஒரு குறைபாடாகவே இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்கு கருதப்
படுகிறது. இன்று உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை
அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த
முடியும். ஆனால், இவ்வித
முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத
பட்சத்தில் மெட்ஃபார்மின் [Metformin] , இன்சுலின் [Insulin] போன்ற மருந்துகள்
தேவைப்படலாம். இங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவே மெட்ஃபார்மின்
மாத்திரை கொடுக்கப்படுகிறது. அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரை
எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும். ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை
பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும்.
நோயாளி உடல் தாங்கிக்கொள்ளும் வகையில் மாத்திரையின் அளவை மருத்துவர்கள் பிரித்துக்
கொடுப்பார்கள்.
இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன. இரத்தத்தில்
சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது. சர்க்கரை நோய் என்பது
இரத்தத்தில் சர்க்கரையின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க இயலாமை தான். சர்க்கரை
நோயின் பொதுவான ஒரு அறிகுறி என்னவென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக
இருப்பது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு
வகிக்கும் ஹார்மோனான இன்சுலின் சரியான அளவு உடலில் சுரக்காதது தான். நம் உடலில்
உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் ஆற்றலுக்கு சர்க்கரை தேவை. ஆனால், இரத்தத்தில் இருக்கும்
சர்க்கரையால் உடலின் செல்களுக்கு தானாக செல்ல முடியாது. பொதுவாக நாம் உணவைச்
சாப்பிட்ட பிறகு, நம் இரத்தத்தில்
சர்க்கரை அளவு உயரும். உடனே கணையத்தில் உள்ள செல்கள் (பீட்டா செல்கள்) இன்சுலினை
உருவாக்கி சுரக்கும். இந்த இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச
சொல்லி செல்களுக்கு அறிவுறுத்தும். இப்படி தான் செல்கள் நாம் உண்ணும்
கார்போஹைட்ரேட்டில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை பெறுகிறது. எனவே டயாபடீஸ்
மேலும் ஒரு எல்லையை தாண்டும் பொழுது, இன்சுலினை நேரடியாக செலுத்தி வைத்தியம்
செய்யலாம் என்பதை முதன் முதல் ஜனவரி 11,1922- இல்
மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டு பிடித்த இன்சுலினை செலுத்தி மருத்துவம் செய்ய
தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
[Insulin
is a hormone created by your pancreas that controls the amount of glucose in
your bloodstream at any given moment.]
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 03 தொடரும்
No comments:
Post a Comment