
தற்கொலை வேண்டாமே!
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள்
முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!”
பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்?
தற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாள முடியாது, நிரந்தரமான
தீர்வை நாடுகிறார்கள்.
::கதை::
கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம்
தாங்க முடியாது, தன் உயிரைத் தானே
போக்கிக்கொண்டான்.
தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக்...