சுருக்கமான பார்வை
வாத்தி'' விமர்சனம் [Tamil movie ''Vaathi'' Review]
வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்த மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், தனிகெல்லா பரணி எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்தினை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
குருகுலம் கல்விக்கு பிறகு, கல்வியை வியாபாரம் செய்வதற்கு சமுத்திரக்கனி
மற்றும் அவரது குழு முயற்சித்து வருகிறது. அதற்கு அரசு பள்ளியில் தரம் இல்லாத
ஆசிரியர்கள் வேண்டும் என தனுஷை தேர்ந்தேடுத்து அரசு பள்ளிக்கு ஆசிரியராக
நியமிக்கின்றனர். ஆசிரியராக சென்ற இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தனுஷ்
செய்யும் புரட்சிதான் இந்த படத்தின் கதை.
பார்த்து ரசிக்கலாம்.[3/5]
💃💃💃
''கொடை'' விமர்சனம்
[Tamil
movie ''கொடை'' Review]
ராஜ செல்வம் இயக்கத்தில் கார்த்திக் சின்கா, அனயா எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சுபாஷ் இசையமைத்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக்
கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே
சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம்.
‘கொடை’ அத்தனை சிலிர்ப்பாக இல்லை.[1.5/5]
💃💃💃
''வசந்த
முல்லை''
விமர்சனம் [Tamil movie ''Vasantha
Mullai'' Review]
ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா, காஷ்மீரா, சரத்பாபு, ரமா பிரபா, கொச்சு பிரேமன் எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
மென்பொருள் துறையில் பணியாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா), பணிச்சுமை தரும் பெரும் மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று ஒரு பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.
படத்தின் வெற்றியும், தன்மையும் இடம் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.[2.75/5]
💃💃💃
''வர்ணாஸ்ரமம்'' விமர்சனம் [Tamil movie ''varnasramam'' Review]
சுகுமார் அழகர் சாமி இயக்கத்தில் சிந்தியா லவ்ர்டே முன்னணிப் பாத்திரத்தில் நடிக்க, தீபன் சக்கரவர்த்தி இசையில் வெளியான படம்.
வெளிநாட்டு பெண் ஒருவர் தமிழ்நாட்டில்
நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கும்பொழுது நான்கு காதலர்களை
பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.அந்த நான்கு
ஜோடி காதலர்கள் , பெற்றோராலோ , அல்லது குறிப்பிட்ட
ஜாதியினாலோ பிரிக்கப்படுகிறார்கள், பிறகு கொலை செய்ய படுகிறார்கள் , அப்படி இந்த நான்கு
ஜோடிகளின் காதலைப்பற்றியும் , அந்த காதலால் அவர்கள் அனுபவிக்கும் வேதனைப்பற்றிய
திரைப்படமே இந்த வர்ணாஸ்ரமம்.
சுற்றி வளைக்கும் திரைக்கதை[2.5/5]
💃💃💃
''டாடா'' விமர்சனம்
[Tamil
movie ''Dada '' Review]
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணாதாஸ், பாக்யராஜ் எனப்பலர் நடிப்பில், ஜென் மார்ட்டின் இசையமைப்பில் வெளியான படம்.
மணி (கவின்), சிந்து (அபர்ணா
தாஸ்) இருவரும் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே தாய்மை அடையும் சிந்து, கருவைக் கலைக்க
மறுக்கிறார். இதனால் இருவரும் பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்கின்றனர். வறுமை
காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் இருவருக்கும் மனஸ்தாபம் முற்றுகிறது. குழந்தையைப்
பெற்றதும் சிந்து பெற்றோருடன் செல்ல, குழந்தையைத் வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறான்
மணி. பிறகு என்ன ஆகிறது? மணியும் சிந்துவும் இணைந்தார்களா? என்பது போன்ற
கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.
பார்க்கக் கூடிய படம் [3/5]
தொகுப்பு:செ.மனுவேந்தன் /manuventhan
0 comments:
Post a Comment