"பேராசை" [சிறு கதை]



[பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டுவிட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும்எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுதுதான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.]

 

நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்கசொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தைநடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்துவிட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும்நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!

 

காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில்படுதோல்வி அடைந்துபாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்குநூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விடபாடசாலை முதல்வரை விடஎன்னுடன் படித்துசிறந்த சித்தி பெற்றுஇப்ப மருத்துவம்பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விடஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக்கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாகபெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!

 

 "தெருவோர   மதகில்  இருந்து

ஒருவெட்டி   வேதாந்தம் பேசி

உருப்படியாய் ஒன்றும்   செய்யா

கருங்காலி   தறுதலை  நான்"

 

"கருமம்      புடிச்ச     பொறுக்கியென

வருவோரும் போவோரும் திட்ட

குருவும்     குனிந்து    விலக

எருமை     மாடு       நான்"

 

இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோஎப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள்பாவம் அவர்கள் !!

 

நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையைவெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றைஎன் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!

 

 "வருடம்    உருண்டு    போக

வருமாணம் உயர்ந்து    ஓங்க

கருணை   கடலில்     மூழ்க

மிருக-மனித அவதாரம்  நான்"

 

"தருணம்   சரியாய்      வர

இருவர்   இரண்டாயிரம் ஆக

ஒருவர்   முன்         மொழிய 

தரும-தெய்வ அவதாரம்   நான்" 

 

என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக்கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளிபெரும் சாமிகூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்னவென்றால்எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோஅதன் ஐம்பதாவது ஆண்டுவிழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம் அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லைஅடித்து துரத்தப்பட்டவனுக்கு கம்பளி வரவேற்பு!

 

"ஊருக்கு    கடவுள்     நான்

பாருக்கு    வழிகாட்டி  நான்

பேருக்கு    புகழ்       நான்

பெருமதிப்பு கொலையாளி  நான்"

 

"குருவிற்கு  குரு       நான்

குருடருக்கு கண்      நான்

திருடருக்கு பங்காளி   நான்

கருவிழியார் மன்மதன்  நான்"

 

என் பேராசை இத்துடன் நின்றபாடில்லைபாவம் புண்ணியம் இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை! 

 

"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து

கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு

குடை பிடித்து பதவி உயர்ந்து

குபேரன் வாழ்வை கனவு கண்டான்!"

 

கள்ள வழிகளில் கனவு நியமாவதும்பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லைஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லுமுல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டிபோட தொடங்கிவிட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன்எங்கோ ஒரு மாளிகையில்மஞ்சத்துக்கு போய்விட்டான்! இதைத்தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்துவிட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!   

 

"ஒவ்வொரு இதயத்தையும்ஒவ்வொரு மனதையும்

ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது

ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி

ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"

 

மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களேஏமாற்றி பிழைத்தவர்களேஅடித்த கொள்ளையை தந்துவிட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன்யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச்சோடி போய்விட்டது!

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி நான்

நீதியற்ற வழியில் நித்தம் சென்று

நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து

நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"

 

பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லதுகெட்டதுஎது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன் . நான் இப்பஇன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாகபணத்துடன் செல்வத்துடன் போய்க்கொண்டு இருக்கிறேன். மனைவிகூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:

 

[ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால்அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்லபிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால்அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள்முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்குமுகம் தெரியாதவர்களுக்குசாமானியர்களுக்குஉழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டிஅவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களேநானே பேராசை பிடித்தவன்]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடியாழ்ப்பாணம்]


 

 


No comments:

Post a Comment