"மண்ணில் வந்த
நிலவே, மரகதமே!
கண்ணில் கவர்ந்த என்னிடம் வந்தாயோ?
விண்ணில் மேகம் உன்னை மறைத்ததோ?
வண்ண அழகை இருட்டி மூடியதோ?"
செண்பகமே, என் மனம்
கவர்ந்தவளே!
கண்டதும் காதல் நெஞ்சை வருத்த
பெண்மை சொல்லும் உந்தன் வனப்பு
சுண்டி என்னை இழுப்பது எனோ?
ஆண்மை வளர்ந்து முழுமை பெற
எண்ணிய எண்ணம் விரிந்து மலர
மண்டி இட்டு உன்னிடம் கேட்கிறேன்
கண்மணியே அருகில் வராதது எதோ?
பண்பு போற்றும் மரபுத் தமிழிச்சியே!
வெண்மை உள்ளம் கொண்ட மகளே!
கண்ணியம் தவறா இவன் கேட்கிறான்
கண்ணீர் மல்கா விடை தராயோ?
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment