பறகலம்
(Drone) வந்தாச்சு! புறப்படத் தயாராச்சு!
மனிதன் ஓடி, ஓடிக் களைத்துப்
போனான்; இனி ஓடவும் தேவை
இல்லை, சுமக்கும்
அவசியமும் இல்லை. இனிமேல் பறகலம் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும், மனிதன் இருந்த இடத்திலேயே
இருந்து வேலை வாங்கலாம்.
பறகலம் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமானது. பல முக்கிய தொழில்
நுட்ப முன்னேற்றங்களால் விதம், விதமான பயன்பாடுகளை பெறக்கூடியதாக இருக்கும்.
இப்பறக்கலங்கள் :
1. அதிகரித்த சுய
கட்டுப்பாடு, மேம்பட்ட
வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் மனித இயக்குனர் இல்லாமல் பறக்கும் திறன் கொண்டவை.
2. மேம்படுத்தப்பட்ட
மின் கல தொழில்நுட்பம் மூலம் நீண்ட தூர
பறப்புகள், சிறிய, இலகுவான தூர பறப்புகள் என்று அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாறும்.
3. அதிகரித்த
சுமைகளைக் காவும் திறன் கொண்டதாய்
அமையும்.
4. வான்வழி
புகைப்படம் எடுத்தல் மற்றும் ஆய்வுகள் வரை பரந்த அளவிலான பணிகளைச் செய்ய உதவும்.
5. 5G தகவல் தொடர்புகளை
ஒருங்கிணைத்து செயல்திறனை மேம்படுத்தும்.
6. பரந்த அளவிலான,
விவசாயம், கட்டுமானம் மற்றும் அவசர சேவைகள் போன்ற
தொழில்களில் அதிகரித்த, துரிதமான பங்களிப்பை வழங்கும்.
7. விமானப்
போக்குவரத்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தி இவற்றின் பங்களிப்பு திறமையான மேலாண்மை
கொண்டதாக இருக்கும்.
8. வீட்டில் இருந்த
படியே அன்றாட வாங்கல், விற்றல், பண்ட மாற்றல்கள், உணவு பரிமாற்றங்கள்
எல்லாம் நம்பிக்கையுடன் நடக்கும்.
9. மேலாக, ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும்
என்ற கவலையே இல்லாத நுட்பத்தைக் கொண்டிருக்கும்.
10. வானிலும்
தரையிலும் பறகலங்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டு, மிகவும் அதி உயர்
சேவையினைக் குறுகிய நேரத்தில் வழங்கிவிடும்.
பறகலங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியானது, வான்வெளியில் இவற்றின் எண்ணிக்கை பெருகிவிட, புதிதாக 'வீதி விதி முறைகள்' என்று புதிதாய்
செயப்படுத்த வேண்டிவரும்.
ஆகவே, சுமைதாங்கி என்ற
இந்த ஒன்றினால்,
ஒளிமயமான எதிர்காலம், என்னுள்ளத்தில் தெரிகின்றது!
[அடுத்த பகுதியினை வாசிக்க ,அழுத்துக Theebam.com: ஒளிமயமான எதிர்காலம் -5]
தகவல்:செ.சந்திரகாசன்/s.santhiragasan
0 comments:
Post a Comment