மெய்ப்பட செய் -விமர்சனம் (Cinema Tamil Movie 'Meippada sey ' Review)
வேலன் இயக்கத்தில் ஆதவ் பாலாஜி, மதுனிகா, ஜெயபாலன், ராஜ் கபூர், ஓ ஏ கே சுந்தர்,சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன் எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பரணி இசையமைத்துள்ளார்.
சென்னையில் வாழ வழி தேடி வந்த நாயகனும் அவன் மனைவியும்,அவனது 4 நண்பர்களும், அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலை வெறியாட்டத்தைக் காண நேரிடுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல் துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தக் கும்பலைத் தனி மனிதர்களாக இளைஞர்கள் போராடி, சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளைத் தோலுரித்து காட்டுவதே கதை.
சமூக அக்கறையுடன் கூடியபடம்.
பிகினிங் - -விமர்சனம் (Cinema Tamil Movie 'Biginning' Review)
ஜெகன் விஜயா இயக்கத்தில் வினோத் கிஷான், கௌரி ஜி கிஷான் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தினைலிங்குசாமி தன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, கிருஷ்ணமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.
ஆசியாவிலேயே முதன் முதல் தயாரிக்கப்படட ஒரே திரையில் இரட்டைக் காட்சிகள் கொண்ட தமிழ் திரைப்படம்.இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
புதுமையாய் ஒரு முறை ரசிக்கலாம்.
பதான்-விமர்சனம் (Cinema Tamil Movie 'Pathaan' Review)
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக வெளியானது.
இந்தியாவில் முன்னாள் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் இந்தியாவுக்கு எதிராக திரும்ப அவனது மிஷனை தடுத்து நிறுத்த கொண்டு வரப்படும் இன்னொரு அராஜகமான ஏஜென்ட் தான் பதான் ஷாருக்கான். ஆனால், அந்த ஏஜென்ட்டை திசை திருப்ப தீபிகா படுகோன் செம ஹாட்டாக வருவதும் அவரது அழகில் மயங்கி பதான் வந்த வேலையை பார்க்காமல் விழுந்து கிடப்பதும் இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து துவம்சம் செய்து நாட்டுக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்யக் கூடிய போர் வீரன் நான் என சொல்வதும் தான் இந்த பதான் படத்தின் கதை.
வன்முறை மற்றும் ஆபாச ஜோக்குகள்
நிறைந்து , தமிழிலும் வந்த ஹிந்திப் படம்.
வல்லவனுக்கும் வல்லவன்-விமர்சனம் (Cinema Tamil Movie 'Vallavanukkum Vallavan' Review)
விஜய் தேசிங்கு இயக்கத்தில், பாபி சிம்ஹா, பூஜா தேவரியா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்த்ராஜ், அப்பு குட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் அதிரடி
நகைச்சுவைத் திரைப்படம். பாபி சிம்ஹா
தயாரித்துள்ளார். ரகு தீட்சித் இசையமைத்துள்ளார்.
இருவர் - வெவ்வேறு ஆளுமைகளை கருதி தமிழகம் முழுவதும் இடம் விட்டு இடம் பயணம் செய்கிறார்கள். முதல் நிகழ்வில், பாபி ஒரு தெய்வீக மனிதனாக வருவதைப் பார்க்கிறோம் (நித்யானந்தாவாகத் தெரிகிறது) மேலும் அவன் அழகியுடன் (ஷிவாதா நாயர்) உறங்குவதை அவள் உண்மையான ஆத்ம துணையாகப் பார்க்கிறான். பாபியும் கருணாகரனும் அந்த ஊரில் இருந்து மறைந்து அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறார்கள், அவர்கள் இந்த கான்செட்டைத் தொடரும்போது, அழகி உட்பட அவர்கள் ஏமாற்றிய அனைவரும் அவர்களை துரத்தத் தொடங்குகிறார்கள். ஆனால் அவர் வழியில் ராபின் ஹூட்டாகவும் நடிக்கிறார். அவர்கள் பிடிபடுகிறார்களா? அழகிக்கு என்ன நடக்கும்? என்பதே கதை
அது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை.
தொகுப்பு: செ .மனுவேந்தன்
No comments:
Post a Comment