"நம்பிக்கை துளிர்க்கட்டும்"
"நம்பிக்கை
துளிர்க்கட்டும் வெற்றி முழங்கட்டும்
நடந்தவை
போகட்டும் நடப்பதை கவனிப்போம்
நடுக்கம்
வேண்டாம் ஒன்று சேருவோம்
நய வஞ்சகர் வலையை
அறுத்தெறிவோம்
நரகம் இன்றுடன்
ஒழிந்து போகட்டும்!"
"உண்மை என்றும்
மடிந்தது அல்ல
உயர்வு தாழ்வு
வேறுபாடு வேண்டாம்
உரிமை உண்டு
உனக்கும் எனக்கும்
உறக்கம் துறந்து
போராட வாருங்கள்!!"
"ஓய்வு அறியா விவசாயி"
"மங்கல் ஒளியில்
தினம் எழுந்து
மண்ணை உழுது
வேர்வை கொட்டி
மனம் சோராது
விதையும் விதைத்து
மனிதர்கள் வாழ
சாப்பாடு தந்து
மகிழ்ச்சி பொங்க
உலகை வைப்பவனே!"
"நோய் என்று
பாயில் படுக்காமல்
பெய்த மழையை
குளத்தில் சேர்த்து
செய்யும் தொழிலே
தெய்வம் என்று
காய்களும்
கனிகளும் உணவாகத் தரும்
ஓய்வு அறியா
விவசாயி இவனே!"
No comments:
Post a Comment