துணிவு - விமர்சனம் (Cinema Tamil Movie 'Thunivu ' Review)
ஹச். வினோத் இயக்கத்தில், வழமைபோல் துப்பாக்கியுடன்
அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர்
படத்தினை போனி கபூர் 'பேவியூ ப்ராஜெக்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க,
ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் மஞ்சுவாரியர், தர்சன், மீரா ஜாஸ்மின், மகாநதி சங்கர், பகவதி பெருமாள், சிஎம் சுந்தரம், மோகன சுந்தரம், பிரேம்,யோகிபாபு ஜிபி முத்து, அமிர் ,பவானி ரெட்டி, புவனா சந்திரன், ஜான் விஜய், அஜய், ராமச்சந்திரன் துரைராஜா, சிராக் ஜானி, சமுத்திரக்கனி,மமதி சாரி, நயனா சாய், பால சரவணன் எனப்
பலர் நடித்துள்ளனர்.
ஒரு தனியார் வங்கியில் 500 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க ஒரு டீம்
களமிறங்குகிறது. உள்ளே சென்ற கும்பலைத் தாக்கி, தானும் இங்கே
கொள்ளையடிக்கவே வந்திருப்பதாக அறிமுகமாகிறார் நாயகன் அஜித். எதற்காக இந்தக் கொள்ளை, இன்னும் எத்தனை கொள்ளைக்
கும்பல்கள் உள்ளே இருக்கின்றன, அவர்களின் நோக்கம் என்ன என்பதற்கெல்லாம் விடை
கூறுகிறது திரைக்கதை.
கதையில் தடுமாற்றம் ,பாத்திரங்களின் விளக்கமின்மை எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது.[2.5/5]
🙊🙉🙈 🙊🙉🙈
வாரிசு-விமர்சனம் (Cinema Tamil Movie
'varisu' Review)
வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
அதிரடி & குடும்பத்
திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் விஜய்
திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும்.
தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன்
ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை
கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால்
முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின்
மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால்
(பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும்
சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி
விஜய்க்கு வந்ததா,
இல்லையா? என்பது கதை.
கதையோ, பொருளோ புதிதாக
இல்லை. கதை சொல்லப்பட்ட விதமும் விறுவிறுப்பாக இல்லை.[2.5/5]
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment