சர்தாஜி
ஜோக்ஸ்
😁ஸ்மைல் பிளீஸ்
மரண வீட்டிற்கு, இறந்தவரை படம்
பிடிக்க வந்த ஒரு புகைப்படப் பிடிப்பாளரான
சர்தாஜியை அங்கு பலரும் அடித்துக்கொண்டிருந்தார்கள். அங்கு வந்த ஒருவர் மற்றவரிடம்
''எதற்காக அவரைப் போட்டு அடிக்கிறாங்கள்''
மற்றவர்: ''பின்ன என்னங்க!
இறந்தவரை படம்பிடிக்க கமராவை வைச்சுக்கொண்டு ஸ்மைல் பிளீஸ், ஸ்மைல் பிளீஸ் [smile please] என்று கேட்டால், செத்தவீட்ல அடிக்காமலா விடுவாங்கள்''
👹கொலஸ்ரோல்
இலவசம்
உயர்தர நல்லெண்ணெய் போத்தில் வாங்க ஒருமுறை
சூப்பர் மார்க்கெட் சென்ற சர்தாஜி, போத்தலை எடுத்து வந்து காசாளரிடம் பணத்தைக்
கொடுத்துவிட்டு, 'கொலஸ்ரோல்
கொடுங்க' என்றார்.
''சொறி,கொலஸ்ரோல் எல்லாம் விற்பதில்லை.'' என்று கூறிய
கடைக்காரர்மேல் சர்தாஜிக்கு கோவம் பொத்தென வந்தது.
''நான் என்ன இழிச்ச வாயனா? என்னை ஏமாற்ற
முடியாது. இப்ப கொலஸ்ரோலை கொடுக்கிறாயா இல்லையா? என்று சத்தம்
போடா ஆரம்பித்துவிட்டார் சர்தாஜி.
கடைக்காரர் ரொம்ப
பொறுமையாக ''இந்தா பாருங்க, இங்க மட்டுமல்ல
நீங்க எங்க போனாலும் கொலஸ்ரோலை வாங்க முடியாது'' என்று கூறியதற்கு
உடனே சர்தாஜி சொன்னார், ''அப்ப ஏனய்யா இந்த போத்திலிலை -கொலஸ்ரோல் fபிரீ(free)- எண்டு
எழுதியிருக்கு.''
👿வைத்தியசாலை
நண்பர்
கடுமையாக நோய்வாய்ப்பட்ட
தன் நண்பரைப் பார்க்க வைத்தியசாலைக்கு சென்றார் சர்தாஜி.
நண்பரின் அருகில்
அவர் நின்றுகொண்டிருக்கையில் ,நண்பரின் நிலைமை திடீரென மோசமாக
தொடங்கியது.அந்த நிலையில் பேசமுடியாத நண்பர் தன் கை அசைவால் ஒரு பேனையும்
பேப்பரும் வேண்டுமெனக் கேட்டார். உடனே சர்தாஜி தன் சட்டைப்பையிலிருந்து அவற்றினைக்
கொடுத்துதவினார்.
அவசரமாக எழுதிய
அவரின் துண்டுப் பேப்பர் அவர் தன் குடும்பத்திற்கு எதோ தகவல் சொல்ல விரும்புகிறார்
,அதனைத் தான்
படிப்பது சரியில்லை என்று எண்ணிய சர்தாஜி தன் சட்டைப் பைக்குள் கவனமாக
வைத்துக்கொண்டார்.
சடங்குகள்
எல்லாம் முடிந்த மறுநாள் சர்தார் தன் நண்பரின் வீட்டுக்குப் போய்,அவர் எழுதிய
துண்டுப் பேப்பர் விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லிப் படிக்கக் கொடுத்தார்.
பிரித்துப்
பார்த்த நண்பரின் மனைவி மயங்கி விழுந்துவிட்டார்.அப்போதுதான் சர்தாஜி அந்தப்
பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார்.
அதில்,'' நீ என் ஒக்சிசன்
குழாய் மீது நின்று கொண்டிருக்கிறாய்' என்று எழுதியிருந்தது.
😃இவருக்கு
என்ன வந்தது?
ஒரு சர்தாஜியும்
அவரது நண்பரும் ஒரு கட்டிடத்தின் 30 ஆவது மாடிக்கு வெளியே சாரமிட்டு வர்ணம்
பூசிக்கொண்டிருந்தார்கள்.மத்திய உணவு வேளையின்போது சாப்பாட்டுப் பாத்திரத்தை
திறந்த நண்பர் ''இண்டைக்கும்
தயிர் சாதமா? நாளைக்கும் தயிர்
சாதமாக இருந்தால் நான் இங்கிருந்து கீழே வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.
சர்தாஜியும் தனது சாப்பாட்டினை பார்த்துவிட்டு, நண்பர் கூறியதையே
கூறினார்.
மறுநாள் வந்தது.
நண்பர் தனது மத்திய உணவை பிரித்துப் பார்த்தவர் அது தயிர் சாதமாக இருக்கவே, அவர் கூறியபடி
கீழே விழுந்து இறந்தார். சர்தாஜியும் தன் உணவைப் பார்த்துவிட்டுக் கீழே வீழ்ந்து
இறந்தார்.
இருவரின் இறுதிச்
சடங்கில் நண்பரின் மனைவி அழுதுகொண்டே 'இப்படிச் செய்வார் என்றால் நான் வேறு வகையான
உணவைப் பாத்திரத்தில் கொடுத்து விட்டிருப்பேனே'என்றார்.
சர்தாஜியின் மனைவி அழுகைக்கு நடுவே புலம்பினார் ''இவருக்கு என்ன
வந்தது? இவர்தான் தன்
உணவைச் சமைத்து, எடுத்துக் கொண்டுபோனாரே!!’’
😱அவளுடைய
அம்மாவும்
அலுவகத்தில் வேலை
நேரத்தில் சர்தாஜி அழுதுகொண்டிருந்தார்.பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர் 'என்ன நடந்தது ' என்று கேட்டார்.
''டொக்டர் போன்
பண்ணினார் அம்மா இறந்துவிட்டாராம்'' என்று கூறியவாறு
அழுகையைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு போன்
அவருக்கு வந்தது.கதைத்துவிட்டு விழுந்து,விழுந்து கதறி
அழுதார்.
நண்பர் கேட்டார் ''இனி என்ன
நடந்தது''
''என் சகோதரி போன்
பண்ணினாள். அவளுடைய அம்மாவும் இறந்துவிட்டாவாம்.''என்று கூறியபடி புரண்டு குழற தொடங்கினார்.
தொகுப்பு :செ .மனுவேந்தன்
No comments:
Post a Comment