சிரிக்க… சிலநிமிடம்

நகைச்சுவை


01.

டொக்டர்: 37 ம் நம்பர் படுக்கையில் உள்ள நோயாளி எப்பிடி இருக்கிறார்?

நேர்ஸ்:அவருக்கு மேல்மூச்சு ,கீழ் மூச்சு வாங்குது டொக்டர்.

 டொக்டர்:ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?

நேர்ஸ்: என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடியதால் வந்த களைப்பு.

<><><><><> 

02.

ராமன்:ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று இப்பதான் நான் புரிஞ்சுக்கிட்டேன்.

சோமன்:எப்படி?

ராமன்:என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

<><><><><> 

03.

ஆசிரியர்:ஷாஜகான் என்ன கட்டினார்.

மாணவன்:லுங்கி கட்டினார்.

ஆசிரியர்:!!!!!!

<><><><><> 

04.

பார்வையாளன்:நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம்தான் பார்க்கிற மாதிரி இருந்ததுங்க.

ஓவியர்:ரொம்ப ரொம்ப நன்றியுங்க.

பார்வையாளன்: ஆமா... மற்ற ஓவியங்களைச் சுற்றி ஒரே கூட்டம்.அதனால அவற்றைப் பார்க்கவே முடியலை.

<><><><><> 

05

நம்பியார்: நன்றி டொக்டர், உங்க வைத்தியத்தால் எனக்குப் பெரிய நன்மை.

டொக்டர்: உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?

ஒருவர்:என் மாமாவிற்குப் பார்த்தியள். அதன் பலனாய் அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.

<><><><><> 

06.

சரளா:வெண்ணெய் தோசை, முட்டை தோசை, கறி தோசை தெரியும்.அதென்ன கூட்டணி த் தோசை எண்டு போர்டு வைச்சிருக்கீங்க.

சாப்பாட்டுக்  கடை சிப்பந்தி: ஓ,அதுவா? பழைய மாவு, புளிச்ச மாவு மீந்துபோன வடை முதலிய  பல கலந்து சுட்ட தோசைதான்.

<><><><><> 

07.

மாணவன்1: நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சிட்டாங்களாமே?

மாணவன்2: யார் இங்கே தமிழாசிரியர் என்று கேட்டதிற்கு  இவர் அடியேன்,அடியேன் என்று கூறினாராம்.

<><><><><> 

08

பார்த்திபன்: சார்! மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப் போன என் மனைவி இன்னும் வீடு திரும்பி வரலை.

போலீஸ்: கவலைப்படாதீங்க! எல்லாப் புடவைக் கடையிலும் தேடிப் பார்க்கச் சொல்லுறன்.

<><><><><> 

09.

குற்றவாளி: யுவர் ஆனர்... 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப் படாதுன்னு சட்டம் சொல்லுது.

நீதிபதி: ஆமா....

குற்றவாளி: அப்பிடீன்னா ,அந்த 1000 பேரில ஒருத்தனா நானும் இருந்துட்டுப் போறனையா!!!

<><><><><> 

10.

டொக்டர்: தம்பி! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது.எதோ குணப்படுத்தியாயிற்று. இந்தாங்க ''பில்''.

நோயாளி: பரம்பரையாய் வந்ததா? அப்படியாயின் இந்த பில்லை எங்க அப்பாவுக்கு,இல்லைன்னா எங்க தாத்தாவுக்கோ ,கொள்ளுத்தாத்தாவுக்கோ அனுப்புங்க.

<><><><><> 

11.

மேடையில் கட்சி உறுப்பினர் : எதிர்க்கட்சிக்காரர் ,குழந்தைகளுக்கு இலவச துணியினை மட்டும் கொடுத்துவிட்டு உங்களிடம் ஒட்டுக் கேட்கிறார். ஆனால் எங்கள் தலைவரோ எத்தனையோ பெண்களுக்கு இலவசமாகக் குழந்தைகளையே கொடுத்திருக்கிறார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

<><><><><> 

12.

சேது: நம்ம கட்சித்தலைவர் K.P.கரிகரன் அநியாயமாய் ஒரு பெரியாணிப் பிரியராய் இருக்காரே..!

தில்லை: மாற்றுக் கட்சிக்காரர் வைச்ச பிரியாணி விருந்தில ,மாறுவேஷத்தில போய் சாப்பிட்டு வந்திருக்கிறாரே...!

<><><><><> 

13.

பிரமுகர்: எனக்கு 65 வயதாகிறது.இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூடக் கிடையாது.

நிருபர்: அட.. ஆச்சரியமாயிருக்கே.. ஐயா சொல்லுங்க... எப்படி இதை உங்களால  சாதிக்க முடிஞ்சுது.

பிரமுகர்: பசங்களை அனுப்பி போட்டுத்தள்ளியிட்டா அலுவல் முடிஞ்சுது.

<><><><><> 

14.

செக்கிங் மாஸ்டர்: டிக்கற் கொடுங்க.

பயணி:இந்தாங்க

செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்.

பயணி: இந்த ரெயில் மட்டும் என்ன  புதுசா?

செக்கிங் மாஸ்டர்: .....???

<><><><><> 

15.

ஒருவர்:நம்ம மனேஜர் அரை மணிநேரத்துக்கு முன்பு எல்லோரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாரே.இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுறார்.

மற்றவர்:10 நிமிஷத்திற்கு முன்புதான் அவரோட மனைவி போனில பேசினார். அதில இருந்து ஆள் ஒரு வெறி பிடிச்சவர் போல் ஆகிவிட்டார்.

<><><><><> 

16.

டொக்டர்:ஏன் சார்... எதுக்கு நேர்ஸ் கையைத் தடவிப் பார்த்தீங்களாம்.

நோயாளி: நீங்கதானே சொன்னீங்க டொக்டர்.... ஊசி போட்ட கையைத் தடவிக்   கொடுக்கணும் எண்டு.

<><><><><> 

17.

மருமகள்: ஐயா,எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு.

போலீஸ்:யாரிடமிருந்து

மருமகள்: மாமியாரிடமிருந்து! உடனே கிளம்பி என் வீட்டுக்கு வாரங்களாம்.

<><><><><> 

18.

மனைவி:ஏங்க மருந்துப் போத்திலைத் தடவிக்கொண்டு இருக்கிறீங்க!

கணவன்: டொக்டர் தான் சொன்னார்,..கை வலிச்சால் இதைத் தடவுங்கள் என்று.

<><><><><> 

19.

அம்மா:அடே ,நீ காதலிக்கிற பொண்ணு சாந்திக்கு உன்னைவிட ஒரு வயசு அதிகமடா!

விவேக்: அப்பிடியாம்மா . கவலைப்படாத நான் ஒரு வருஷம் பொறுத்துக் கொள்ளுறன்!

<><><><><> 

 

20.

அப்பா: உன் பின்னாலேயே ஒருத்தன் சுத்துறான் என்று சொன்னியே... ஒரு பையன்.... அவன் இனிமே உன்கிட்ட வரமாட்டான்.

மகள்: ஐயோ அப்பா அவனை என்ன பண்ணினீங்க?

அப்பா: பதறாத ,பதறாத .1000 ரூபா கடன் கேட்டான். கெதியா திருப்பி தந்திடு என்று சொல்லிக் கடனாய்த்தான் குடுத்தன்.

<>தொகுப்பு:செ.மனுவேந்தன் <>

No comments:

Post a Comment