
அறிமுகம் தொடர்கிறது / [ஆங்கிலத்திலும் தமிழிலும்]
பண்டைய காலத்தில் இலைகளே உணவு பரிமாற பயன்படும் பிரதான தட்டுகள் ஆகும். மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்திலிருந்தே, இலைகளில் சாப்பிடுவது பல காரணங்களால் வழமையாக இருந்து உள்ளது. பல பண்பாடுகளில் இன்றும் இலைகளில் உணவைச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. தமிழர்கள் முக்கியமாக வாழை இலைகளைப் பயன்படுத்தினார்கள், அதற்குப் பண்டைய இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் உள்ளன. அவ்வகையில், வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை இரண்டாம்...