அறிவியல்=விஞ்ஞானம்
360 டிகிரி உணரி
தானோட்டி கார்கள் அவற்றின் சுற்றுப்புறத்தை
அறிந்துகொள்ள ,லிடார்(lidar) எனும் உணரிகள்
உதவுகின்றன. லேசர் கதிர்களை செலுத்தி ,அது போகும் வழியில் உள்ள அசையும் ,அசையாப்
பொருட்களை உணர்ந்து மோதலைத் தவிர்க்கின்றன.
இதுவரை இரண்டு பரிமாணத்தில் மட்டுமே பார்க்கத்
தெரிந்த லிடார்களுக்கு ,போஹாங் அறிவியல் தொழிநுட்ப
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ,தற்போது புதிய திறன்களாக 360
டிகிரி சுற்றுப் புறத்தையும் பார்க்கும் திறனைக் கொடுத்துள்ளனர்.
குறுக்கெழுத்துப் பயன்கள்
வயது ஏற ஏற நினைவாற்றலும் ,மூளையின்
செயல் திறனும் குறையத்தொடங்குகிறது. இது போன்ற குறைபாடுகளைத் தடுப்பதுக்கென்றே சில
வீடியோ கேம்ஸ் வந்துள்ளன. அவை வயதானோருக்கு மூளைக்கு சுறுசுறுப்பினை தரவும்
செய்கின்றன. ஆனால் அதைவிட நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களை
நிரப்புவது மூளைத்திறன் குறைவதைத் தடுத்து நிறுத்துவதில் அதிக பலன் தருகிறது.
கொலம்பியா மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களில்
ஆராய்ச்சியாளர் 70 வயதானோர் மத்தியில் ஓராண்டு நடாத்திய ஆய்வின்
முடிவு இது.
செயற்கை வைத்தியம்
தசைகளை சிதைக்கும் தன்மை கொண்டது 'லூ
கேரிக் 'நோய். இதற்கான புதிய மருந்தினை 'வெர்ஜ்
ஜீனோ மிக்ஸ்' புதுமையான முறையில் கண்டுபிடித்துள்ளது.
நான்கு ஆண்டுகள் மனிதரில் நடாத்திய சோதனையில்
வெற்றியும் கண்டுள்ளனர் வெர்ஜ் ஜீனோ மிக்ஸ்' நிறுவனத்தினர்.
கூகிளின் காட்டுத்தீ வரைபடம்
செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தினை
சமூகநலனுக்கு பயன்படுத்தும் திடடத்தின் ஒரு பகுதியாக கூகிள் ,மெக்சிகோ,கனடா,அமெரிக்கா
அவுஸ்திரேலியா நாடுகளின் வனப்பகுதிகளில் காட்டுத்தீ எச்சரிக்கை வரைபடங்களை
வெளியிடத்தொடங்கியுள்ளது.
காட்டுத் தீயை அடையாளம் கண்டு அது எந்த அளவில்,எந்த
திசையில் ,அதன் தீவிரம் ,காற்றின்
வேகம் போன்ற கணிப்புகளை கூகிள் நிமிடத்துக்கு நிமிடம் வழங்குவதன் மூலம்
தீயணைப்புப் படையினர் அவற்றினை
கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒளிவேக சாதனை
ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்படும் ஒளி இழை வடம்
மூலம் தகவல் அனுப்புவதில் புதிய சாதனையை ஜப்பானிலுள்ள நெட்வெர்க் ஆய்வு
நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் நிகழ்த்தியுள்ளனர். வழக்கமான ஒளி இழை வடத்தின் மூலம் ,நொடிக்கு
1.53
பெட்டா பிட்ஸ் அளவுக்கு வேகமாகவும்,அடர்த்தியாகவும் தகவல்களை பரிமாறி
அவர்கள் சாதித்துள்ளனர். தற்போது இணையத்தில் புழங்கும் அத்தனை தகவல்களையும், ஒரு
நொடியில் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு அனுப்புவதற்கு இணையான சாதனை இது என
வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.
பிரதியாக்கம்:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment