"அமைதியாய்
இருந்து அவன் படித்தான்
அடக்கம் கொண்டு தனிமை கண்டான்
அறிவு பகிர்வென துணையாய் வந்தாள்
அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !"
"ஆசிரியர் போல
அவனுக்கு இருந்தாள்
ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான்
ஆகாரம் தீத்துவது போல அவளோ
ஆதரவாய் காதலும் கொடுத்தாள் !"
"இன்பம் என்றால்
என்ன என்று
இலக்கியம் காட்டிய தனி வழியில்
இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து
இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !"
"ஈசன் இவளே இனி
என்று
ஈடு இல்லா இச்சை கொண்டு
ஈயம் உருகியது போல அவனும்
ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !"
"உடலை உடைத்து
எங்கோ போனாள்
உருவம் கண்ணில் மறைந்து போனது
உள்ளம் ஒடிந்து காரணம் தேடுகிறான்
உயிரை பிடித்து இன்னும் வாழ்கிறான்!"
"ஊமையாக வாழ்வு
எதோ நகருது
ஊக்கம் குறைந்து சோர்வு தொற்றுது
ஊர்கள் எல்லாம் இருட்டாய் தெரியுது
ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment