சர்தாஜி
ஜோக்ஸ்
அடுத்த நாளுக்காக
சர்தார் ஒருவர்
பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
காத்துக்கொண்டிருந்த பஸ் நிலையத்தில் பஸ் நில்லாது
தள்ளி அடுத்த நிலையத்தில் நின்றதைக் கண்டு சர்தார் பஸ்ஸை பிடித்து விடலாம் என்று ஓடினார்.
கிட்ட போகும் போது பஸ் கிளம்பியது.மறுபடி அடுத்த
நிலையத்தில் பஸ்ஸை பிடித்துவிடலாம் என்று ஓடினார் அப்பவும் கிட்ட போகும் போது பஸ்
மறுபடி கிளம்பியது.
இப்படியே ஓடி ஓடி வீடு வந்து சேர்ந்து விட்டார் சர்தார். வந்தவர் வீட்டில் மனைவியிடம் எல்லா கதைகளையும் சொல்லி அவற்றுக்கு பின்னால் ஓடி வந்ததால் இன்றைக்கு ரூபா 2.50 மிச்சம் என்று பெருமையடித்தார்.
இதைக் கேட்ட அவரின் மனைவி
கோபத்துடன், என்னையா நீ
பிழைக்கத் தெரியாத மனிசனாய் இருக்காய். பஸ்ஸுக்கு
பின்னால் ஓடிவந்ததுக்கு பதிலா ஒரு டாக்சி பின்னால் ஓடி வந்து இருந்தால் 200 ரூபாய் அல்லா மிச்சமாய் இருக்கும் என்று கடுப்பானார்.
சர்தார் கடுமையா
யோசிக்கத் தொடங்கினார்... ..அடுத்த நாளுக்காக
...👉👉👉
பின்லேடனை புடிச்சிருக்கு
பின்லேடனை பிடிச்சா ஐந்து லட்சம் பரிசு என்று போலீஸ் அறிவித்தவுடன்
சர்தார்ஜி நேராக போலீசாரிடம் போய் எனக்கு 5 லட்சம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்.
ஏன் என்று போலீஸ் அதிகாரி கேட்டிட சர்தாஜி சொன்ன
பதிலில், அதிகாரி தலை
சுற்றி விழுந்து விட்டார்.
அது என்னவெனில், சர்தாஜி சொன்னாராம் 'பின்னலேடனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'
...👉👉👉
வைக்கும்போது வெடிச்சா
சர்தார்ஜி இருவர் பஞ்சாப்
தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்.அவர்களின்
முதல் பணி ஒரு காரில் குண்டு வைக்கிறது.
சர்தார்1:நாம் அவை குண்டு வைக்கும் போது வெடித்து
விட்டால் என்ன பண்ணுறது.
சர்தார்2: கவலப்படாத இன்னொன்று வெச்சிருக்கேன்😁.
...👉👉👉
ஆல் இந்தியா ரேடியோ
சர்தார்ஜி கடைக்காரரிடம் சென்று சென்று 'உங்களிடம் வாங்கிய ரேடியோ
யப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய்
சொல்லி என்னிடம் அதை விற்று விட்டீர்கள்.
கடைக்காரர்: இல்லை சோனி ரேடியோ. யப்பான் தயாரிப்புதான்
சர்தார்: என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். ஓன் பண்ணின உடனே ஆல் இந்திய ரேடியோ என்றுதானே சொல்லுது😁.
...👉👉👉
கொஞ்சம்கூட விவரம் இல்லை
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார்.
அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் உள்ள ஜலந்தர்நகர் கிளம்பினர். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து
விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார்.
ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி
வந்தார். அம்மா கேட்டார் 'என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தாஜி: இந்த மாருதிக் கார் கொம்பனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்குமட்டும் 4 கியர் வைத்திருக்கிறார்கள், அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ரிவேர்ஸ் கியர்தான் வைத்திருக்கிறார்கள் அதுலே ஓட்டினா, எப்படி சீக்கிரம் வரமுடியும்😁?
...👉👉👉
வெள்ளை என்னோடது
அஞ்சாசிங் ஒரு
குதிரை வாங்கிட்டு வந்தாராம். அவரது தம்பி குஞ்சாசிங்கும் ஒரு குதிரையை வாங்கிட்டு
வந்தாராம்.
அடையாளம்
வைச்சிருக்கிறத்திற்காக அஞ்சாசிங் குதிரையின் வலது காதினை வெட்டிவிட்டாராம்.
இதை கவனித்த
பக்கத்து வீட்டுக்காரன் கஞ்சாசிங்கின் குதிரையின் வலதுகாதினையும்
அறுத்துவிட்டானாம்.
அசராத அஞ்சாசிங்
தன் குதிரையின் இடது காதினை வெட்டிவிட்டானாம்.
அன்றிரவு
பக்கத்துவீட்டுக்காரன் கஞ்சாசிங்கின் குதிரையின் இடது காதினையும்
வெட்டிவிட்டானாம்.
இப்படியே வால் ,கால் என்று எல்லாம் வெட்டப்பட்டு குற்றுயிராய் இருந்த குதிரைகளைப் பார்த்த அசராத அஞ்சாசிங், தன் தம்பி கஞ்சாசிங்கிடம் சொன்னானாம்
''கவலைப்படாதே சகோதரா ....கருப்பு கலர் குதிரை உன்னுடையது, வெள்ளை என்னுடையது😁.
பிரதியாக்கம்:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment