சுருக்கமான விமர்சனம்
''வரலாறு முக்கியம்''விமர்சனம் (Cinema Tamil Movie 'Varalaru mukkiyam ' Review)
படம்: சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாக்ரா எனப் பலர் நடித்திருக்க இப்படத்தினை ஆர்.வி. சௌத்ரி தயாரிக்க, ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கதை:வேலையில்லாமல் சுற்றித் திரியும் ஜீவாவுக்கு முழுநேர வேலையே பெண்களை ‘ஸ்டாக்கிங்’ செய்வது. அதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும் கார்த்தியின் தெருவில் கேரள பெண் ஒருவர் குடியேற, அவரை ‘ஸ்டாக்கிங்’ செய்து காதலிக்கத்தொடங்குகிறார். இறுதியில் அவரை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே கதை.
முடிவு:பலமுறை அரைக்கப்பட்ட மா என்றாலும் நகைச்சுவை மட்டும்
இரசிக்கலாம்.[2.5/5]
''விஜயானந்த்''விமர்சனம் (Cinema Tamil Movie 'vijayanand' Review)
படம்: ரிஷிகா ஷர்மா இயக்கத்தில் ஸ்ரீ ஆனந்த் நாக், நிஹல், பரத் பொப்பண்ண எனப்பலர் நடித்து தமிழிலும் வெளிவந்த இக் கன்னடப்படத்தினை ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிக்க, கோபி சுந்தர் சி இசையமைத்துள்ளார்.
கதை:நாயகன் விஜய் சங்கேஸ்வர் அப்பா சொல்லிக் கொடுத்த வழியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்த தொழிலை அட்வான்ஸ் மெஷின் எல்லாம் வாங்கிப் போட்டு அடுத்த கட்டத்திற்கு போக முயல்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி சர்வீஸ் தொழில் செய்ய முடிவு செய்கிறார். அதற்கு அவரது அப்பா சம்மதம் தெரிவிக்காத நிலையில் வங்கியில் கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கிக் கொண்டு தனது தொழிலை தொடங்கினார். எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் லாபமில்லாமல், தொடர்ந்து சிரமங்கள் வந்தாலும், மேலும் ரிஸ்க் எடுத்து 4 லாரிகளை வாங்கி தொழிலில் வளர்ச்சியடைந்தார். அதன் பிறகு வெவ்வேறு தொழிகளிலும் இறங்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து அதைத் தாண்டி சாம்ராஜ்யமொன்றை எப்படி உருவாக்கினார் என்பதுதான் விஜயானந்த்.
முடிவு:கன்னடவுலகின் முதல் பயோபிக் என்ற பெருமையோடு வந்துள்ள 'விஜயானந்த்' தொழில் தேடுவோருக்கு நல்ல
ஒரு படம் [3/5]
''விட்னஸ்'' விமர்சனம் (Cinema Tamil Movie 'witness' Review)
படம்: தீபக் இயக்கத்தில் ரோகினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
கதை:தூய்மைப் பணியாளரான இந்திராணி (ரோஹினி) தனது மகன் பார்த்திபனுடன் வாழ்ந்து வருகிறார். கட்டாயப்படுத்தப்பட்டு மலக்குழியில் இறக்கி விடப்பட்ட மகன் பார்த்திபன் உயிரிழப்பது தெரிய வர, உடைந்து போகிறார் இந்திராணி. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க சட்டத்தின் துணை கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் அவரது போராட்டம் இறுதியில் வென்றதா? இல்லையா? - என்பதுதான் திரைக்கதை.
முடிவு: நேர்த்தியாக எடுக்கப்பட்ட இப்படம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறது.[3.5/5]
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment