மகாவம்சத்தில் புதைந்துள்ள ….[பகுதி 25]

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் 'கோட்டை' யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.]  அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களை தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, எனவே சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்”  கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4  மணிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10, அவர்களின்  கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphabets were used]

 

எல்லா இலங்கை காவியமும் [நாளாகமமும் / chronicles], இலங்கையை புத்தர் தன் கொள்கைகளை பரப்ப தயாராக்கினார் என்றும் இலங்கைக்கு மூன்று தரம் அதற்காக வருகை தந்தார் என்றும் இன்று வரை கூறினாலும், புத்தர் இறக்கும் தருவாயில், புத்த மதத்தினர் கட்டாயம் வருகை தந்து வணங்க வேண்டிய நாலு இடங்களாக லும்பினி [புத்தர் பிறந்த இடம்], புத்தகயை அல்லது புத்த கயா [புத்தர் அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம்], சாரநாத் அல்லது இசிபதனம் [இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்], குசிநகர் அல்லது குஷி நகர் [புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்] [The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.] என அடையாளம் காட்டி உள்ளார். ஆனால் புத்தர்  தான் பிரத்தியேகமாக தேர்ந்து எடுத்து, மூன்று தரம் வந்து, போதனை செய்து, கால் பதித்த இலங்கையை அடையாளப் படுத்தவில்லை ? ஏன் யாருக்காவது புரிகிறதா ??



மேலும் அசோகா காலத்திலும். அசோகன் இன்னும் நான்கு இடங்களை புனித இடங்களாக அடையாளப் படுத்தினான். அவை சவத்தா [சிராவஸ்தி / கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்], சங்கிசா அல்லது சங்காசியா [கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா], ராஜகிரகம் [மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது]  மற்றும் வைசாலி [கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார்.]  [Savatthi, Sankasia, Rajagaha and Vesali.] ஆகும். இங்கும் அசோகன் இலங்கையை புனித புத்த பூமி என்று கருதவில்லை. இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது ? புத்தருக்கோ அல்லது அசோகனுக்கோ இலங்கை ஒரு பெரும் பொருட்டாக இருக்கவில்லை அல்லது இலங்கையை பற்றி எந்த அறிவும் இல்லை என்பதே உண்மையாகும்! இது மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படையாகவே உலகத்திற்கு காட்டுகிறது. இதில் நான் ஒன்றும் சொல்லவில்லை. உண்மை என்றும் வெல்லும்!!    

ஆகவே அந்த அடிப்படையில் நாம் ஆராயும் பொழுது, புத்தர் இலங்கைத் தீவுக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும் என்பது புலன்படுகிறது. புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் சென்றார் என்பது பாளி நியமன படைப்புகள் [canonical works] ஒன்றிலும் அல்லது வரலாற்று சான்றுகளிலும் காணப் படவில்லை. மற்றது மாயா ஜால வித்தைகள் மூலம் காற்றினூடாக வானத்தில் பயணித்தார் என மகாவம்சம் கூறுவதையும் கட்டாயம் ஏற்க முடியாது, ஏன் என்றால்; புத்தர் மந்திர தந்திர ஜாலங்கள் போன்றவற்றிற்கு எதிரானவரும் ஆவார். மேலும் புத்தர் நிர்வாணம் [enlightenment] அடைந்த நாளில் இருந்து, அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குசிநகரில் [Kusinagar or Kusinara] தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடையும் வரை, புத்தர், வெறும் காலுடன் புத்தகயாவில் [Buddha Gaya] இருந்து குசிநகர் வரை நடந்து சென்றார் என தெரிய வருகிறது. பெலுவ [Beluva] என்ற ஒரு குக்கிராமத்தில், அவர் தனது சீடன் ஆனந்தாவை பார்த்து, "ஆனந்தா நான் இப்ப வயதாகி விட்டேன், உடலும் தளர்ந்து விட்டது, வாழ்க்கை பாதையை கடந்து விட்டேன், நான் வாழ்க்கை காலமான எண்பது வயதைக் கடந்துவிட்டேன் [“Ananda, I am now old, worn out, one who has traversed life’s path, I have reached the term of life which is eighty.”] என்கிறார். எனவே புத்தர் காற்றில் பறந்து வந்தார் என்று மகாவம்சம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. மற்றும் அது புத்தரின் நம்பிக்கைக்கும் போதனைக்கும் எதிரானதும் ஆகும்.

 

:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 26 தொடரும்

 👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 26):

 👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

 

No comments:

Post a Comment