திரைபடப் பாடல்கள் ஒவ்வொன்றிலுமிருந்து சில வரிகள் தரப்படுள்ளன. அவ்வரிகளுக்குரிய பாடலின் முதல் வரியினைக் கண்டுபிடியுங்கள்.
-----------------A -------------------
-01-
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
-02-
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
-03-
என் கருங்கூந்தல் கலைந்தோடிமேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன்உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடுஉறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
-04-
வான்பறவைதன் சிறகை எனக்கு தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை
அழைத்துவந்தே காதலை வாழவைப்பேன்
-05-
உலகில் உள்ள நாடுகளில்
என் கண்கள் படாத இடம் இல்லை
உங்களை போல கும்பலும் கூச்சலும்
பார்வையில் இதுவரை படவில்லை
-----------------------விடைகளை கீழே கருத்துப்பெட்டியில் வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment