"என் இதயம் தேடும் என்னுயிரே!"

"அன்பே, இதயம் தேடும் என்னுயிரே

அரவணைத்து காதல் இதமாக தந்தவளே

அடர்ந்த கூந்தலின் அழகு நாயகியே 

அமாவாசை போல் இருட்டியது ஏனோ?"

 

"முனிவனாயிருந்தவனு நண்பியாவளே

முழுதாய் தந்து அன்பு விதைத்தவளே

முத்தான பல்லால் புன்னகை பூத்தவளே

முடிந்தது உறவென பறந்தது ஏனோ?"

 

"இங்கிதமாய் பேசும் இனிய குரலோனே

இன்பம் சொட்டும் அழகு வண்ணமே

இளமை துள்ளும் புள்ளி மானே

இடித்து தள்ளி போனது ஏனோ?"

 

"உவகை கொட்டிய நுண் இடையாளே

உளியால் செதுக்கிய  எழில் தேவதையே

உறவை உதிர்த்து உலகை துறந்து 

உறக்கம் மறக்க வைத்தது ஏனோ?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment