இவ்வாரம் வெளியான திரைப்படங்கள்

                                              சுருக்கமான பார்வை  


''காரி'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'kaari' Review)

குழு: இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார், அம்மு அபிராமி, சம்யுக்தா கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  இப்படத்தினை லக்ஷ்மன் குமார் தயாரிக்க, டி இமான் இசையமைத்துள்ளார்.

கதை: கோவில் நிர்வாகத்தினை கையில் எடுப்பது தொடர்பில்  இரு ஊர்கள்  இரண்டு பட்டு நிற்க , ஜல்லிக்கட்டு அடக்குபவருக்கே கோவில் நிர்வாகம் என்ற முடிவில் அது யாரின் கைகளுக்கு சென்றது என்பதே கதை.

முடிவு:ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து சமூக பொறுப்புடன் கதை சொல்லி இருப்பதை பாராட்டலாம்.[3/5]

  🎞🎞🎞🎞🎞🎞🎞🎞

''பவுடர்''விமர்சனம்  (Cinema Tamil Movie 'powder' Review)

குழு:  விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். ஜெயஸ்ரீ விஜய் தயாரிக்க,  லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார்.

கதை: பவுடர் பூசிக்கொண்டு தன் முகத்தை மறைக்கும் மனிதர்களின் ஒரிஜினல் முகத்தை 6 கதைகளில் காட்டியுள்ளனர்.

முடிவு:தோல்வியான  பரட்டையின்  மறுவடிவம் [2/5]

  🎞🎞🎞🎞🎞🎞🎞🎞

''ஏஜென்ட் கண்ணாயிரம்''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Agent  kannayiram' Review)

குழு: மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 கதை: [இது கன்னடத்தில் மாபெரும் வெற்றிப் படமான  'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச அதெரிய' படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.]

தாலி இல்லாத தாயின் நிலையில் பல அவமானங்களை சந்திக்கும் சந்தானத்தின் துப்பறியும் திறமைக்கு சவால்விடும் வகையில் கொலை கேஸ் ஒன்று அவர் கைக்கு வருகிறது. எதிரியின் வலையில் சிக்கும் சந்தானம், அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லை அதிலேயே மாட்டிக்கொண்டாரா? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை..

முடிவு: வழமைபோல் சந்தானத்தின் படங்கள் வரிசையில் இதுவும் பொறுமைக்கு சோதனை  [2/5]

 🎞🎞🎞🎞🎞🎞🎞🎞

''பட்டத்து அரசன்''விமர்சனம்  (Cinema Tamil Movie pattathu arasan ' Review)

குழு:சர்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார் என பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்.  தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரோடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில்  சுபாஷ்கரன் தயாரிக்க,  ஜிப்ரான் இசையமைக்கிறார்.

கதை: கபடி விளையாட்டிலும் அதைப் பயிற்று விப்பதிலும் ஜாம்பவானாக பேரும் புகழோடும் விளங்குகிறார் வெத்தலை விவசாயியான 'பொத்தாரி' ராஜ்கிரண். அவருக்கும் அவரின் கூட்டுக் குடும்பத்திற்கு ஏற்படும் ஒரு அவப்பெயரால், அக்குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படுகிறது. பொத்தாரியின் பேரன் சின்னதுரை அதர்வா, எப்படி அந்த அவப்பெயரை துடைத்து, அம்மரணத்திற்கு பின்னால் உள்ள சதியை வெளியே கொண்டுவந்தான் என்பதை குடும்ப பாசத்தையும் ஆக்‌ஷனையும் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது படம்.

முடிவு: புதுமையே இல்லாத காட்சிகளால் ஒரு அயர்ச்சியான படம். [2.5/5]

 

தொகுப்பு :செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment