- ஓர் அலசல்
சான்
டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு
ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப
கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை கண்டறிய முடியும். செல்போனின்
அருகாமை அகச்சிவப்பு கேமராவை உபயோகித்து இந்த செயலி ஒருவரின் கண்ணில் உள்ள
கண்மணியின் அளவில் ஒரு துணை மில்லிமீட்டர் அளவுக்கு ஏற்படும் மாற்றத்தை கண்டறிய
முடியும்.
இந்த ஆய்வை ஒரு நபரின் புலனுணர்வு நிலையை மதிப்பீடு செய்ய உபயோகிக்க முடியும்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, அனைத்து வகையான நோய்களையும்,நிலையையும் கண்டறியமுடியும் என்ற பொருளில் கண்கள் அதிக
அளவில் உபயோகமாக இருக்க முடியும். வெளிப்படையாக இருக்கிறது என்பதால், அவைகளை உடலின் இதர பாகங்களை விடவும் குறைவான சோதனை
முறைகளுக்கு உட்படுத்த வேண்டிய தேவையே இருக்கும்.
ஆனால், தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், வெறுமனே உங்கள் கண்களை பார்த்து மட்டுமே கூட குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான உடல் நலக்கோளாறுகளை கண்டறிவது சாத்தியமாகும். இவையெல்லாம் சில
எச்சரிக்கை அறிகுறிகளாகும்
கண்மணியின்
அளவு
வெளிச்சமான சூழல்களில்
கண்ணின் மணிகள் உடனடியாக லேசாக, சிறியதாக
இருக்கும். குறைவான வெளிச்சம் இருக்கும் சூழல்களில் கண்ணின் மணிகள் பெரியதாக
இருக்கும்.
கண்மணிகளின் அளவில்
மெதுவான அல்லது தாமதமான வெளிப்பாடு அல்சைமர் நோய் போன்றவற்றின் தீவிரத்தன்மை
உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகளை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். அதே போல போதை
மருந்து உபயோகத்தின் ஆதாரமாக மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகளை
சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கும்.
கொக்கைன் மற்றும்
ஆம்பெடமைன் போன்ற ஊக்கமருந்துகளை உபயோகிப்பவர்களின் கண்மணிகள், பொதுவாக விரிவடைந்து காணப்படும். ஹெராயின்
உபயோகிப்பவர்களின் கண்கள் மிகவும் சிறிய கண்மணிகளைக் கொண்டதாக இருக்கும்.
சிவப்பு
அல்லது மஞ்சள் நிற கண்கள்
- வெள்ளைப்பகுதியில்(கண்களின் வெள்ளைப்பகுதியில்) நிறம்
மாறியிருந்தால் ஏதோ தவறான கோளாறு இருக்கிறது என்று பரிந்துரைக்க முடியும்.
- சிவப்பான, ரத்தம்
தோய்ந்தது போல கண்கள் காணப்பட்டால் அதிக அளவு மது உபயோகம் அல்லது போதை
மருந்து உபயோகித்ததற்கு அறிகுறியாகும்.
- பெரும்பாலான தருணங்களில் சில நாட்கள் கடந்த பின்னர்
கண்களில் தொற்று ஏற்படுவதற்கும் அல்லது எரிச்சல் ஏற்படுவதற்கும் காரணமாக
இருக்கும்.
- கண்ணின் நிற மாற்றம் தொடர்ச்சியாக இருந்தால், மேலும் தீவிர தொற்றுக்கான அறிகுறி, கட்டிகள் அல்லது கான்டாக் லென்சின்
எதிரொலியாக அல்லது தீர்வின் எதிர்வினைகளைக் குறிப்பதாக இருக்கலாம்.
- அதீத நிகழ்வுகளில் சிவப்பான கண்கள், கண்பார்வை குருடாவதற்கு வழிவகுக்கும்
குளுக்கோமா அறிகுறியை குறிப்பதாக இருக்கலாம்.
- விழி வெண் கோளத்தைச் சுற்றி உள்ள sclera எனும் தோல் பகுதி
மஞ்சள் நிறமாக மாறினால், இது பொதுவான
வெளிப்படையான மஞ்சள் காமாலை மற்றும் நோய்வாய்பட்ட கல்லீரல் அறிகுறியை
குறிப்பதாக இருக்கும்.
மஞ்சள் காமாலையின்
அடிப்படையான காரணங்கள் பரவலாக வேறுபடுகின்றன. கல்லீரலில் (ஹெபடைடிஸ்) கட்டி, மரபணு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியில் தொற்று, மற்றும் சில மருந்துகள், வைரஸ்கள் அல்லது டியூமர் எனப்படும் கட்டிகள்
உள்ளிட்ட காரணங்களை கொண்டிருக்கின்றன.
சிகப்பு
கறை
கண்ணின் வெள்ளை பகுதியில்
சிவப்பான ரத்தம் போன்ற புள்ளி பார்ப்பதற்கு எப்போதும் பயங்கரமான தோற்றத்தை தரும்.
கண்பகுதிக்குள் உள்ள சிறிய, ரத்த நாளம்
வெடித்ததன் விளைவாக இது ஏற்பட்டிருக்கும்.
பெரும்பாலான சமயங்களில்
வெளியே தெரிந்த காரணங்களால் நேரிடாது. சில நாட்களில் இந்த சிவப்பு புள்ளி மறைந்து
விடும்.
எனினும், இது உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், அதீத ரத்தப் போக்கு ஏற்படக் கூடிய ரத்தம்
உறைதல் கோளாறுகள் போன்றவற்றுக்கான அறிகுறிகளை குறிப்பதாகவும் இருக்கலாம்.
தவிர, ரத்தத்தை மெலிய வைக்கும் ஆஸ்பரின் போன்ற
மருந்துகள் காரணமாக இருக்கலாம். பிரச்னை அடிக்கடி இருந்தால், இந்த அறிகுறிகளை கொண்டவர்கள், மருத்துவர்களிடம் தங்களுக்கு தரப்படும்
மருந்துகளின் அளவை பரிசீலனை செய்யக் கோரலாம்.
விழியின்
வெண்படலத்தை சுற்றி வளையம்
விழியின் வெண்படலத்தை
சுற்றி வெள்ளையான அல்லது சாம்பல் நிற வளையம் காணப்படுவது பெரும்பாலும் உயர்
கொழுப்பு மற்றும் இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.
இது மது பழக்கத்தையும்
சுட்டிக்காட்டுகிறது. சில நேரங்களில் முதியவர்களின் கண்களில் இது போன்று
காணப்படும். இது ஆர்கஸ் செனிலிஸ் என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது.
கொழுப்புக்கட்டி
சில நேரங்களில் மிகவும்
அபாயகரமான அம்சங்கள் கண்களில் தோன்றக்கூடும். அவை பெரும்பாலும் உண்மையில்
தீங்கற்றதாக, எளிதாக சிகிச்சை
அளிக்கக் கூடியதாக இருக்கும்.
பிங்குகுலா என்பது, கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் மஞ்சள்
நிறமான கொழுப்பு கட்டியாகும். இது புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட சிறிய
கட்டியாகும். கண்களில் சொட்டு மருந்து விடுதல் அல்லது சிறிய எளிதான ஆபரேஷன் மூலம்
இதனை சரி செய்ய முடியும்.
முன்தோல் குறுக்கம் (pterygium) எனப்படுவது கண்ணின் வெள்ளைப் பகுதியில்
தோன்றும் இளம் சிவப்பு வளர்ச்சியாகும். விழியின் வெண்படலத்தில்(கண்ணின்
நிறப்பகுதி) வளரத்தொடங்காத வரை இது பார்வைக்கு தீங்கிளைக்காது.
எதிர்பாராத விதமாக
பிங்குகுலாவைப் போல pterygium மிகவும் மெதுவாக
வளரும். எளிதாக அதனை அகற்ற முடியும். எனினும், இது விழி வெண்படலத்தைத் தொடுவதற்கு நீண்ட
நாட்களுக்கு முன்பே அவசியம் அகற்றப்பட வேண்டும்.
இதனை வளர அனுமதித்து
விட்டால், pterygium என்பது வெண்
விழிப்படலத்தில் மேடமூட்டமான படமாக மாறிவிடும். இது பார்வையில் தடையை
ஏற்படுத்தும்.
பிங்குகுலா, pterygium இரண்டும் நேரிடுவதற்கு, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா
ஒளிக்கதிர்களின் நாள்பட்ட வெளிப்பாடுகள் முக்கியமான பாதிப்பு காரணிகளில் ஒன்றாக
இருக்கலாம்.
கண்கள்
வீக்கம்
கூக்ளி கண்கள் என்று
அழைக்கப்படும் சுழன்று கொண்டிருக்கும் கண்கள் என்பவை சாதாரண முக அம்சத்தின் ஒரு
பகுதியாக இருக்கலாம்.
ஆனால், முன்னர் வீக்கம் இல்லாமல் இருந்த கண்கள், முன்னோக்கி வீங்கத்தொடங்கும். இது பெரும்பாலும்
பொதுவாக தைராய்டு சுரப்பி பிரச்னையால் இருக்கலாம். இதற்கு உடனே மருத்துவ கவனிப்புத்
தேவை.
ஒற்றை கண் வீக்கம் என்பது, காயம், தொற்று அல்லது
மிகவும் அரிதாக, கண்ணுக்குப்
பின்னால் ஒரு கட்டி ஏற்பட காரணமாக இருக்கலாம்.
புடைப்பான
அல்லது வெட்டி இழுக்கும் கண் இமைகள்
இது தவிர, வெட்டி இழுக்கும் கண் இமைகள் பல நோய்களுக்கான
அறிகுறிகளை குறிப்பதாக இருக்கும். இவைகள் முக்கியமாக கண்இமைகளில் உள்ள
சுரப்பிகளின் சிறிய பிரச்னைகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.
கண்இமை வீக்கம் ஒரு
பொதுவான நிலையாக இருக்கிறது. மேல் பகுதியில் ஒரு சிவப்பான கட்டியாக மற்றும் கண்
இமையின் கீழ் (பொதுவாக மிகவும் குறைவாக)பகுதியில் இது தோன்றும். எண்ணைய் சுரபி
தடுக்கப்படுவதால் இது நேரிடுகிறது.
இந்த இமை வீக்கமானது
தானாகவே அல்லது வெப்ப அழுத்தங்களால் சரியாகிவிடும். இது பெரிதாகும் பட்சத்தில், எளிதான ஒருமுறையின் மூலம் அகற்றப்பட வேண்டும்.
கண் இமை வெட்டி இழுப்பது போன்ற குறைபாடானது (கண் மயோக்கிமியா) எரிச்சல், வெப்பமான ஒளிக்கீற்று போன்றவற்றால் ஏற்படலாம், பார்வைக்கு சிறியதாக தோன்றினாலும், மேலும் மோசமாக உணரப்படலாம்.
பெரும்பாலான நிகழ்வுகளில்
தீங்கு அளிக்கக்கூடியதாக இருக்காது. அழுத்தம் காரணமாகவோ, சரிவிகித ஊட்டசத்து இல்லாததன் காரணமாகவோ அல்லது
அதிக அளவு காஃபி போன்ற பானங்கள் அருந்துவதாலோ ஏற்படலாம்.
இந்தக் கட்டுரை ஒரு
வழிகாட்டி மட்டுமே. உங்கள் உடல்நலம் குறித்து சந்தேகம் இருந்தால், ஒரு நிபுணரை அணுகவும்.
:BBC TAMIL :-பார்பரா பியர்சியோனெக்-[ பார்பரா
பியர்சியோனெக், ஆங்கிலியா
ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் (பிரிட்டன்) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான
பேராசிரியர் மற்றும் துணை முதல்வர் ஆவார்.]
No comments:
Post a Comment