மகாவம்சத்தில் புதைந்துள்ள…( பகுதி 19)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞ்சிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. 

 

அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் கி பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் மட்டுமே இன்று உள்ளன. கல்வெட்டுகளில் அசோக மன்னனின் மகன் திவாலா ['திவாரா'] மட்டுமே, அவரது தாய் ராணியுடன் பதியப் பட்டுள்ளது [Tivala [or Tivara ], the son of Ashoka and Karuvaki, is the only of Ashoka's sons to be mentioned by name in the inscriptions along with his mother, in the Queen Edict / S. N. Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 151.]. வட இந்தியா பாரம்பரியம் படி, அசோகனுக்கு குணாலா [Kunala ] என்ற மகன் இருந்து உள்ளார். மேலும் இது, திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") என்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட நூலில் குணாலா அவதானம் என்ற பகுதியில் குறிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது. என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மஹிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் (Romila Thapar) பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

 

"Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1922-24 Vol.29" இல், பக்கம் 243 இல், துட்ட காமனி பற்றி குறிப்பிடுகையில், ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’ என்று கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது. அதாவது பெரும்பாலான இலங்கை அரசர்களை போல, துட்ட காமனியும் கூடுதலாக பௌத்தனாக இருப்பதிலும் பார்க்க ஒரு இந்துவாகவே இருந்தார் என்பதை, ரிதி விகாரையை (வெள்ளிக் கோயிலை / රිදී විහාරය), அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினி, தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கின் [பிரதிஷ்டை செய்யும்] பொழுது, 500 புத்த பிக்குகளும், ஆனால்  1,500 வேதத்தில் தேர்ச்சி பெற்ற இந்து பிராமணர்களும் ஒன்று கூட அந்த நிகழ்வை நடத்தியதில் இருந்து புரிகிறது என்கிறது.      

 

சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலப்பதிகாரம். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு ஆட்சி மகாவம்சம் 35 ஆம் அத்தியாயத்தில் உள்ளது. மேலும் சிங்களவரும் தமிழரும் இரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. எனவே இவைகளைப்பற்றி ஒரு விரிவான பக்கச்சார்பு அற்ற ஆய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன்.

 

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி/யாழ்ப்பாணம்]

பகுதி: 20 தொடரும்

 👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள… (பகுதி 20):

 👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

No comments:

Post a Comment