பொன்னியின் செல்வன் - தமிழருக்கு…


தமிழருக்கு விரோதமானதா?  




இந்திய துணைக்கண்டத்தின் தெற்கில் இருந்த தமிழ் பேசும் நிலப்பகுதியினை சேர, சோழ , பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

இங்கு பேசப்பட்ட மொழிகளில் தமிழே பழைமையானது. தொல்பொருள் மற்றும் எழுதப்பட்ட சான்றுகள், தமிழகத்திற்கும் ரோம் போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் இடையே வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகள் இருந்ததாகக் கூறுகின்றன. ஆரம்பகால சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்களுக்கு தமிழகம் ஒரு முக்கியமான வரலாற்றுப் பகுதியாக இருந்திருக்கிறது.

தமிழகம் என்ற நிலப்பரப்பு இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன; ஆனால் ஆண்டவர்கள் எல்லோரும் தமிழ் பேசி வந்தாலும், அவர்கள் தமிழ் அரசர்களா? குழப்பான விடயம்தான்.

தற்கால அரசியலில் தமிழ் நாட்டினை ஆண்டுகொண்டிருப்பவர்களின் பரம்பரைகளை ஆராய்ந்தால், தமிழ் பேசும் பிற இனத்தவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதால், அப்போதும் அப்படியாய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்.

யார்


இந்த மூவேந்தர்கள்?

பாண்டியர்;

பாண்டியர்களே தமிழ் ஆட்சியாளர்களில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டவர்கள். இவர்கள் பற்றி  முதன்முதலில் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக் கிரேக்க இலக்கியங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. மேலும், பாண்டியர் ரோமானிய பேரரசர்களுக்கு தூதர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. பாண்டிய ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியை ஆண்டனர். இவர்கள் ஆரம்பத்தில் சமண மதத்தைப் பின்பற்றினர், ஆனால் பின்னர் சைவர்கள் ஆனார்கள்.

பாண்டியர்களின் முக்கிய நகரம் மதுரை, அங்கு தமிழ் மன்னர்கள் மூன்று சங்கக் கவிதைப் பள்ளிகளை நடத்தினர். அங்கு, அறிஞர்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் இலக்கியங்களை உருவாக்கினர். பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவை ஆட்சி செய்த பிறகு, 16 ஆம் நூற்றாண்டில் உட்பூசல்கள் மற்றும் இஸ்லாமிய படை எடுப்புகள் இந்த வம்சத்தைப் பலவீனப்படுத்தின.

பாண்டியர்கள் தமிழர்களே என்று அடித்துக் கூறலாம்.!

சோழர்:

சோழ ஆட்சியாளர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை வைத்திருந்தனர், 10 ஆம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை முக்கியத்துவம் பெற்றனர். அவர்கள் காவிரிப் பள்ளத்தாக்கு, தஞ்சாவூர் மற்றும் உறையூர் நகரங்களில் இருந்தனர். 

சோழர்கள் பற்றி முதல், முதலாக  தமிழரல்லாத பதிவுகளில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழகத்தின் வடக்கே நிலப்பரப்பைக் கொண்டிருந்த மௌரிய மன்னன் அசோகனின் கல்வெட்டுகளில் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தற்சமயம் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சோழ மன்னர்கள் பற்றி கி.பி.150 கால  சங்கம் இலக்கியங்களிலும் பேசப்பட்டிருக்கின்றது.

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் போன்ற அண்டை அரசர்களுடன் மோதி, வென்று கி.பி. 1000 அளவில் இலங்கையின் சில பகுதிகள் மற்றும் மாலை தீவுகள் கொண்ட பேரரசை உருவாக்கினர் .

இறுதியில், 13ஆம் நூற்றாண்டில், சோழ வம்சம் அண்டை நாடான பாண்டிய வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது.

சோழர்களின் எழுத்துக்களில் பெருபாலும் சமஸ்கிருதம் முன்னிற்கிறது. தெலுங்கு மொழியில், தமிழிலும் பார்க்க சம்ஸ்கிருதம்தான் மேலோங்கி நிற்கிறது. இவர்கள் ஆண்டு வந்த தமிழகம் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பின் வட பகுதி  -தற்போதைய தெலுங்கு தேசம்- பல்லவர்களாலும் ஆளப்பட்டிருக்கின்றது.

ஆகவே, பல்லவர்கள் அல்லது சோழர்கள் (கி.மு. 3) தெலுங்கு பேசுபவர்களாய் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சோழர்கள், தமிழர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. தெலுங்கர்கள்தான் என்பதற்கும் முடிவான நியாயம் ஒன்றும் எடுத்துக் காட்டவும் முடியாது. 

சேரர்:

சேரர் தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையை ஆட்சி செய்தனர், இது இப்பொழுது மலையாளம் பேசும் நிலப்பரப்பு ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டில் உயரத்தை அடைந்தனர். முதல் ஆட்சியாளர்கள் பற்றி 1 ஆம் நூற்றாண்டின் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மலையாள மொழியே 9ஆம் நூற்றாண்டில்தான் உருவானபடியால், அம்மொழி தமிழோடு மிகவும் ஒத்துப் போகின்றபடியாலும் பண்டைய சேரரும் தமிழ் பேசியவர்கள்தான் என்று முடிவுக்கு வரலாம்.

****
புகழ் பெற்ற பேரரசாக விளங்கிய சோழ வம்சத்தின் பரம்பரை நாங்கள்தான் என்று பெருமைகொள்வதற்கு நாம் தமிழர் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட, மலையாளிகளும்கூட முன்னின்று உரிமை கூறுவார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்  நற்குணமுடைய சோழ ஹீரோக்களுக்கும், வஞ்சக குணம் கொண்ட பாண்டிய வில்லன்களுக்கும் நடக்கும் போர் பற்றியது.


ஆகவே,  சோழன் தெலுங்கானாய் இருந்தால் இப்படம் தமிழனுக்கு எதிரானதா?  நம்மவனைக் கொன்றொழித்த தீபாவளி தினத்தை பட்டாசு கொழுத்திக் கொண்டாடுவதுபோல, இதையும் இளிச்ச வாய்களாக இருந்து கை தட்டி மகிழ்கிறோமா? 

விடை தெரியாது! 

அறிவுடை நல்லோர் நல்லதொரு விளக்கம்தனைத் தருவார்களா?

எண்ணம்:செ.சந்திரகாசன்


No comments:

Post a Comment