"பூமியில் வாழ உயிர் கொடுத்து
பூரித்து நின்றதே எங்கள் வையகம்
பூரியாராக உலகை பிளந்து சுரண்டியதால்
பூதாகரமாக வெடித்ததே சூழல்
பிரச்சனை!"
"பூச்சிக் கொல்லிகள் தேனீயை கொல்லுது
நீல வானம் தெளிவை இழக்குது
பளிங்கான நீரும் கலப்பற்ற காற்றும்
பழுப்பாய் அழுக்காய் உரு
குலையுது!"
"மேலே உயர்ந்த மரங்கள் எல்லாம்
கீழே வெட்டி கட்டிடம் உயருது
வெள்ளை கடற்கரை மணல்கள் இன்று
குப்பை கூளமாக பரந்து
கிடக்குது!"
"இயற்கை தந்ததை கெடுத்தது போதும்
இச்சை கொண்டு பறித்தது காணும்
இனிமேலும் நிலம் வறண்டு கருகாமல்
இதயம் மகிழவே சுற்றுச்சூழல்
காப்போம்!"
:-கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
0 comments:
Post a Comment