சர்தார்ஜி ஜோக்ஸ்
-'செல்லம்மா பேசறேன்’ –
ஒருநாள்
சர்தார்ஜிக்குப் போன் வந்தது,
சர்தார்ஜி: ஹலோ!
யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
சர்தார்ஜி: நான்
மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு
சொல்லுமா?
-முதல்
தடவை விமானத்தில் பயணம்-
ஒரு சர்தாஜி
முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தார், அவர் விமானத்தில்
ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில்
அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் .
பணிப்பெண்கள்
எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
விஷயம்
விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல
வேண்டும்" என்றார் ,
அதற்கு சர்தாஜி
"டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு
செல்கிறது,அந்த இருக்கைதான்
(சர்தாஜிக்கு
ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர
அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.
-எங்க
தொட்டாலும் வலிக்குது!-
டாக்டரிடம் சென்ற
சர்தார்ஜி
சர்தார்ஜி:
டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா
வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.
டாக்டர் (சற்று
யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண்
இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.
-இரண்டு
அடுக்கு மாடி பஸ்-
இரண்டு
சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர்.
அங்கு ஊரை சுற்றி
பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று
வந்தது.
ஒரு சர்தார்ஜி
கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின்
மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
மேலே இருந்தவர்
பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.
கீழே இருந்த நபர், ஏன் பயந்து
கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு இந்த
சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை
கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.
-யார்
ரொம்ப சிக்கனம்? –
சர்தார்ஜி 1: நான்தான் மிகவும்
சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை
மிச்சப்படுத்திவிட்டேன்.
சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த
செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை
அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப
சிக்கனம்?
-நெடுந்தூரம்
ரயில் பயணம்-
நெடுந்தூரம்
ரயில் பயணம் மேற்கொண்ட சர்தாருக்கு தூக்கம் கண்னை கட்டியது. இருந்தாலும் இறங்கும்
இடத்தை தவறவிட்டு விட கூடாதென கஷ்டப்பட்டு விழித்திருந்தார்.அவரால் விழித்திருக்க
முடியவில்லை சட்டென அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி தன்னுடன் பயணம் செய்யும்
சக பயனியிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டால் இருபது ரூபாய் தருவதாகச்
சொன்னார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.
சர்தார் நிம்மதியாக
தூங்கியவுடன். பணம் வாங்கியவருக்கு தாம் சர்தாரிடம் இருபது ரூபாய் வாங்கியது
அதிகமோ என எண்ணி... அதிகப்படியான ரூபாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர்
தூங்கிக் கொண்டிருக்கும் சர்தாருக்கு முடிவெட்டி சவரம் செய்துவிட்டார்.
பின்னர் சர்தார்
சொன்ன இடம் வந்ததும் அவர் சர்தாரை எழுப்பி இறக்கிவிட்டார். நேராக வீட்டுக்கு சென்ற
சர்தார் குளித்து முடித்து விட்டு கண்ணாடியை பார்த்த சர்தார் அதிர்ச்சி அடைந்தவராக
தன் மனைவியிடம் " ங்கொய்யால! துட்ட வாங்கிகிட்டு வேற யாரையோ எறக்கி
விட்டுட்டான்"... என்றார்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment