நகைச்சுவை
01:
இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?
போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.
02:
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ ‘’இங்கே தமிழாசிரியர் யாரு’’ ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
03:
ரமனன் : சார்! மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை
போலீஸ் : கவலைப்படாதீங்க! எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.
04:
போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
05:
குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..
06:
ஒருவன் : என் மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன் : உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
07:
சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம், அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம், தக்காளி சதாம், லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.[ சாதம்]
08:
ரெண்டு மாமியார் பேசிக்கிறாங்க :
சிவகாமி : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்.
பகவதி : அப்ப பர்ம்னண்ட் வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
09.
மதன் : அவரு காது டாக்டர் தானே , நீங்க எதுக்கு உங்க கண் பிரச்சனைய அவருக்கிட்ட சொல்லுறிங்க ?
அருண் : என்னோட கண்ணாடி காதுல சரியா நிக்க மாட்டுக்கே அதுதான்!
10:
வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே வி்ழுது, ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார்.
11:
டாக்டர் : - தம்பி.! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது. ஏதோ குணப்படுத்தியாச்சு. இந்தாங்க “பில்”
நோயாளி : - அப்ப இந்தப் பில்லை எங்க அப்பாவுக்கு, அப்படி இல்லன்னா எங்க தாத்தாவுக்கு அனுப்புங்க.
12:
தொண்டர் : எங்க தலைவர்கிட்டே பத்தாயிரம் ஜோடி செருப்புகள் இருக்கிறது ஆனா, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்கினது இல்லே மேடையில் தலைவர் பேசறப்போ வந்து விழந்த செருப்புகளைத்தான் சேகரிச்சு வெச்சிருக்கார்
13:
தலைவர் : எதிர்க்கட்சிக்காரர், குழந்தைகளுக்கு இலவசத் துணியை மட்டும் கொடுத்துவிட்டு உங்களிடம் ஓட்டுக் கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் எத்தனையோ பெண்களுக்கு இலவசமாகக் குழந்தைகளையே கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
14:
தலைவர் : ஊழல் பெரிதா, மதவாதம் பெரிதா என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை .. .. பதவியே எல்லாவற்றையும் விடப் பெரிது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் .. ..
15:
தலைவர் : கடந்த ஆட்சியிலே இலவசத் திருமணங்கள் மட்டும் செய்துவைத்தார்கள். ஆனால், எதிலும் புதுமை செய்யும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச விவாகரத்துகளையும் நடத்திக்காட்டுவோம்
16:
டீச்சர் : ஏன்டா லேட்டு??
ஆனந்த் : பள்ளிகூட போர்டை படித்ததால் தான் லேட்டாயிருச்சு டீச்சர்.
டீச்சர் : என்னது பள்ளிகூட போர்டை படித்ததால் லேட்டா??
ஆனந்த் : பள்ளிபகுதி மெதுவாக செல்லவும் என்று போர்டு வைத்திருக்கிறீர்களே அதனால் மெதுவாக வந்தேன்..
17:
தலைவர் : இது எந்த இடம்? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?
தில்லு : கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச தொகுதி.
18:
சே : நம்ம கட்சி தலைவர் ஹரிஹரன் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."
தில்லு : "எப்படி...?"
சே : "மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"
19:
அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு சொன்னிங்க.
20:
பிரமுகர் : எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட கிடையாது..
தொ.கா. நிருபர் : அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை சாதிக்க முடிஞ்சது..?
பிரமுகர் : பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது..!
தொகுப்பு:செ.மனுவேந்தன் tamil comedy, jokes
No comments:
Post a Comment