"முகவரி நீயே"
"முகவரி நீயே யார்
சொன்னது?
குழந்தை வேண்டி லிங்க வழிபாடு
மணம் செய்ய தை நோன்பு
நாணம் கொண்ட பெண்ணே சொல்?"
"வரலாறு தெரியா
ஆண் கேட்கிறான்
வீர மங்கையே திருப்பி கூறு
மலைமகள் மகனே முருகன் என்றான்
ஆதி சமூகத்தின் தலைமை பெண்ணே!"
"உன்னை பெற்றவள்
ஒரு பெண்ணே
உன்னுடன் கலந்தவள் ஒரு மாதே
உன் முதல் தெய்வம் கொற்றவையே
நீ விளையாடும் குழந்தையும் பேதையே!"
"அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
சொல்லி அவளை பூட்டி வைத்தாய்
கவிதைக்கு அது ஒரு அழகு
வாழ்க்கைக்கு அது ஒரு கேடு!!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment