மாறிடும் உலகினில் விஞ்ஞானத்தின் புதுமைகள்

 

அறிவியல் விஞ்ஞானம்

தானோட்டி லாரிகள் தயார்!

ஓட்டுனர் இல்லை, ஓட்டுனர் அறையும் இல்லை. இதோ, அமெரிக்காவில் தானோட்டி லாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த எய்ன்ரைட் நிறுவனம் 2017, டி-பாட் டிரக் என்ற லாரியை ஓட்டுனர் இன்றி வெற்றிகரமாக சோதித்தது.

 

அதையடுத்து நடந்த தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின், டி-பாட் லாரிகளை அண்மையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய விண்ணப்பித்தது எய்ன்ரைட். ஏற்கனவே, அமெரிக்காவின் டெஸ்லா, 'செமி' என்ற லாரியை சோதித்து வருகிறது.

 

டி-பாட் லாரியில், 'லிடார்' முதல் கேமராக்கள் வரை பல நவீன கருவிகள் உள்ளன. என்றாலும், இந்த வண்டியை, தொலைவிலிருந்து மனித ஓட்டுனர் கண்காணிப்பார் என எய்ன்ரைட் தெரிவித்துள்ளது. அமெரிக்க போக்குவரத்து துறை அனுமதி கிடைத்ததற்கு காரணம் இதுதான். எனவே, தொழில்நுட்பப் புரட்சித் தலைவர் எலான் மஸ்க் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம். மஸ்கின்லாரி முழுமையான தானோட்டி தொழில்நுட்பத்தால் இயங்கும்.

 

வலி நீக்கும் பட்டை


வலி ஏற்படுவதை தடுக்க, ஒரு சிறிய பட்டையை, அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துஉள்ளனர்.

 

எலாஸ்டோமர்களால் ஆன இப்பட்டை, வலி உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பைச் சுற்றி வைக்கப்படும். உடலுக்கு வெளியே இப்பட்டையுடன் இணைந்துள்ள பம்ப், ஒரு திரவத்தையும், வாயுவையும் செலுத்தும்.இதனால் குளிர்ச்சி உருவாக, நரம்பு மறத்து, வலி நீங்கும். இப்பட்டை தற்காலிக வலிகளை போக்க உதவும் என்கின்றனர், நார்த் வெஸ்டர்ன் விஞ்ஞானிகள்.

 

காற்று மாசை உறி்ஞ்சும் பாறாங்கல் பொடி!

விவசாய நிலங்களை, கார்பன் டையாக்சைடினை உறிஞ்சும் களங்களாக மாற்றலாம்! இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, பாறைகளை பொடியாக்கி, விளை நிலங்களின் மீது துாவுவது, நல்ல தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.

 

காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடு தோய்ந்த மழை நீர், பாறைப் பொடி கலந்த மண் மீது விழும்போது, வேதி வினை நிகழும். இதனால் மண் துகள்கள் நாள்படக் கரைந்து பைகார்பனேட்டாக மாறும். பைகார்பனேட் கலந்த மண் மிக வேகமாக காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடை உறிஞ்சிக்கொள்ளும். மேலும், இது விளை நில மண்ணில் சத்துக்களை அதிகரிக்கும்.

 

விளைநிலங்களிலிருந்து, மழை நீர் கிளம்பி, நதியில் சேர்ந்து, இறுதியில் கடலில் கலக்கும்போது, அத்துடன் ஏராளமான கார்பன்டையாக்சைடும் செல்லும். இது கடலில் அதிகரித்து வரும் அமிலத் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.பாறைகளை பொடியாக்கி விளை நிலத்தில் உரம் போலப் போடுவதை, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடைபிடித்தாலே பல்லாயிரம் டன் கார்பன்டையாக்சைடினை காற்றிலிருந்து அகற்ற முடியும் என ஷெப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஒலியால் இயங்கும் சில்லு!

முதலில் எலக்ட்ரானால் இயங்கும் கணினி சில்லுகள் வந்தன. அடுத்து, ஒளியால் இயங்கும் அதிவேக போட்டோனிக் சில்லுகள், ஆய்வுக்கூடத்தைவிட்டு வெளியேறத் தயாராகி வருகின்றன.

 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒலியை வைத்து சில்லுகளை தயாரிக்க முடியும் என்பதை சோதனை அளவில் செய்து காட்டியுள்ளனர். அவர்களது கருத்துப்படி, ஒலியால் இயங்கும் சில்லில், தகவல்களை பதியவும், பரிமாறவும், அதிவேகமாக அலசவும் முடியும்.

 

ஒலிச் சில்லில், 'லித்தியம் நியோபேட்' என்ற வேதிப் பொருள் வாயிலாக ஒலியைக் கட்டுப்படுத்தும் அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். லித்தியம் நியோபேட் மீது மின்சாரம் பாயும்போது, அது நெகிழ்வுத் தன்மை அடைந்து, ஒலி அலையை உண்டாக்குகிறது. மின்சாரத்தின் அளவை மாற்றுவதன் மூலம், லித்தியம் நியோபேட் உருவாக்கும் ஒலி அலையை மாற்ற முடியும்.

 

இந்த ஒலி அலை மூலம் தகவல்கள் ஒலியின் வேகத்தில் கடத்த முடியும். ஒலி அலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பயணிக்கக்கூடியவை. ஒலி அலைகளை நியோபேட் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். எனவே, ஒலித் சில்லுகளை முழுவீச்சில் தயாரிக்க, ஹார்வர்டு விஞ்ஞானிகள் தயார்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

'மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி14)

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 

விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம் [clan] வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் இயக்கர், நாகர், தேவர் மற்றும் அரக்கர் [Yaksha (Yakku), Naga, Deva, and Raksha (Rakus)] ஆகும். இது அவர்களின் தொழிலை குறித்து காட்ட ஒரு உருவகமாகக் [metaphorically] கூறப்படுகிறது எனலாம்? உதாரணமாக, இயக்கர்கள் இரும்பை உருக்கி வார்பவர்களாகவும் [mould iron], நாகர்கள் வர்த்தகர்களாகவும் [traders], தேவ[ர்] மக்கள் ஆட்சியாளர்களாகவும் [rulers], அரக்கர்கள் விவசாயிகளாகவும் [farmers] நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய  அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள், அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம். 

மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் 'வேடர்' ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட  இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன். இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள், இது ஒன்றே இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது. அது மட்டும் அல்ல விஜயனின் தாத்தாவே ஒரு மிருகம் [சிங்கம்] எனவும்  அவனின் தாயும் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள் எனவும் மகாவம்சம் கூறுகிறது.

வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட,  3 1/2 அங்குலம் நீளமுள்ளதும் ஓர் அங்குலம் அகலமுள்ளதுமான சிறிய தங்கத் தகட்டில் நாலு வரிகளைக்கொண்ட  சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கி. பி. 126 - 170 ஆம் ஆண்டுவரை அனுராதபுரத்தில் ஆட்சி புரிந்த வசப மாமன்னனுடைய அமைச்சரொருவர் நகதிவத்தை (நாகதீபத்தை) ஆட்சி செய்யும் பொழுது [யாழ்ப்பாணக் குடாநாட்டினை] அக்குடாநாட்டின் வட கோடியில் அமைந்த பதகர அதனவில் (இன்றைய வல்லிபுரம் என்ற ஊரில்) பியங்குகதிஸ்ஸ என்பவரால்  இந்த விகாரை கட்டப்பட்டது என குறிக்கப்பட்டுள்ளது. "பதகரஅதன" அல்லது "பத்தகர-ஆயதன"  என்பதின் நேரடி பொருள், "வருமானம் கிடைக்க வாய்ப்பான இடம்" ஆகும் [An inscription on gold plate found at Vallipuram, near Point Pedro, is dated in the reign of Vasabha (67-111) and records that Piyaguka Tisa built a vihara at Badakara (presumably, present Vallipuram), while the Minister, Isigiraya, was governor of Nakadiva (Nagadipa). Piyaguka, which is identical with Piyahgudipa or Puvangudiva. The gold plate inscription is written in Brahmi script and it was discovered in 1936] இது பிராமி எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. “லலிதவிஸ்தர" என்னும் வடமொழி நூலில் "பிராமி" என்பதன் பொருள் "எழுத்து" எனக் கூறப்பட்டுள்ளது. வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் கண்டு பிடிக்கப்பட்டதற்குப் பின்னர் சில சரித்திர உண்மைகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் குடாநாடு நாகதீபம் என்றழைக்கப்பட்டதும் "பியகுகதிஸ்ஸ" என்னும் சொற்றொடரிலுள்ள "பியகுக" என்னும் இடம் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பியங்குதீபமாக இருக்கலாம் என்பதும் ஆகும். அது மட்டும் அல்ல, ‘Journal of the CEYLON BRANCH OF THE ROYAL ASIATIC SOCIETY HISTORICAL TOPOGRAPHY OF ANCIENT AND MEDIEVAL CEYLON’ by C. W. NICHOLAS என்ற நூலில், CHAPTER X , THE JAFFNA DISTRICT என்ற பகுதியில், பியங்குதீபத்தை இன்றைய புங்குடுதீவு? என கருதலாம் என்கிறது [Piyahgudipa where 12,000 monks are said to have resided, is modern Pungudutivu?]

 


வரலாற்றுப் பேராசிரியரான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் [Prof. Pathmanathan, who was also the Chancellor of Jaffna University] அவர்கள் சிங்கள மொழி, பிராகிருத மொழியில் இருந்து தோன்றியது எனவும், கி பி 300 க்கும் கி பி 700 க்கும் இடையில் இந்த மாற்றம் படிப்படியாக நடைபெற்று, ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதன் பின்னர் சிங்கள மொழியின் பண்புகள் நன்கு நிறுவப்பட்டன என்கிறார். [In the 7th century the process of transition was completed and thereafter characteristics of the Sinhala language were well-established]. மேலும் இலங்கையில் ஏறத்தாழ 2000இற்கு மேலான பிராமியசாசனங்கள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் பிராகிருதச் சொற்கள், மற்றும், உதாரணமாக, ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும்  பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.

இலங்கையின் பூர்வீகக் குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் செப்டெம்பர் 2015  இல் தெரிவித்தார் பத்மநாதன்.


:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

 

படம் 01 - வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்

படம் 04 - “மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

 

பகுதி: 15 தொடரும்அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள….(பகுதி 15):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?

 


விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

 

பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

 

பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம்.

 

உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம் 13 விட்டமின்கள் தேவை. ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டுமா?

 

தினமும் நீங்கள் விட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன: ஒன்று, கொழுப்பில் கரைகின்றவை மற்றும் நீரில் கரைகின்றவை.

 

1. கொழுப்பில் கரைகின்ற விட்டமின்கள் (விட்டமின்கள் , டி, மற்றும் கே) நம் உடலால் சேமிக்கப்படுபவை. அதனால், இந்த விட்டமின்களை மாத்திரை உட்கொள்ளாமலே பேணிக் காத்துக்கொள்ள முடியும். இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக நீங்கள் உட்கொண்டு விடலாம். இதனால், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.

 

2. நீரில் கரைகின்ற விட்டமின்கள் (ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின் சி மற்றும் பி) உங்கள் உடலால் சேமிக்க முடியாதவை. இதனை, நீங்கள் சீராக உட்கொள்ளவேண்டும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அவற்றை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றுவீர்கள். ஆனால், விட்டமின் பி12- கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.

 

விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

 

மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

 

பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

 

பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம்.

 

உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம் 13 விட்டமின்கள் தேவை. ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டுமா?

 

தினமும் நீங்கள் விட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன: ஒன்று, கொழுப்பில் கரைகின்றவை மற்றும் நீரில் கரைகின்றவை.

 

1. கொழுப்பில் கரைகின்ற விட்டமின்கள் (விட்டமின்கள் , டி, மற்றும் கே) நம் உடலால் சேமிக்கப்படுபவை. அதனால், இந்த விட்டமின்களை மாத்திரை உட்கொள்ளாமலே பேணிக் காத்துக்கொள்ள முடியும். இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக நீங்கள் உட்கொண்டு விடலாம். இதனால், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.

 

2. நீரில் கரைகின்ற விட்டமின்கள் (ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின் சி மற்றும் பி) உங்கள் உடலால் சேமிக்க முடியாதவை. இதனை, நீங்கள் சீராக உட்கொள்ளவேண்டும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அவற்றை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றுவீர்கள். ஆனால், விட்டமின் பி12- கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.

 

மல்டி-விட்டமின் மாத்திரைகளில் சில தாதுச் சத்துகளையும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் (Zinc) போன்றவையும் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலம் இந்த தாதுச்சத்துகள் கிடைக்கும். அதனால், இந்தச் சத்துகள் அதிகமாக தேவைப்படும் நிலையில் நீங்கள் இல்லாத பட்சத்தில், உணவே  போதுமானது.

 

கால்சியம் - வலுவான எலும்புக்கு உங்களுக்கு ஒரு நாளைக்கு கால்சியம் 700 மில்லி கிராம் (எம்.ஜி) தேவைப்படும்.

 

துத்தநாகம் - துத்தநாகம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்துக்கும் தேவைப்படும். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 7 எம்.ஜியும், ஆண்களுக்கு 9.5 எம்.ஜியும் தேவை.

 

இரும்புச்சத்து - உணவு மூலம் கிடைத்த ஆற்றலை உடலுக்கு பரப்பவும், ஆக்சிஜனை ரத்தம் முழுவதும் கொண்டு சேர்க்கவும் இரும்புச்சத்து தேவை. 19 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு ஒரு நாளைக்கு 14.8 எம்.ஜியும், ஆண்களுக்கு 8.7 எம்.ஜியும் தேவை.

 

மாத்திரை உட்கொள்வதால் யாருக்கு நன்மை?

இலையுதிர் காலத்திலும், குளிர் காலத்திலும், விட்டமின்-டி மாத்திரையை உட்கொள்ளலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. விட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவும்; இது நம் பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். விட்டமின்-டி மக்னீசியத்தையும் பாஸ்பேட்டையும் உறிஞ்ச உதவும்.

 

பசியின்மை இருப்பவர்களும் முதியோரும் ஒரு குறிப்பிட்ட மல்டி விட்டமினை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். உங்களின் மருத்துவர் உங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தலாம். முதியோரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் விட்டமின்-டி மாத்திரைகளை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். உணவிலிருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு இது உதவும்.

 

நீங்கள் உங்கள் விருப்பமாகவோ அல்லது உடல் எடை குறைக்கவோ, டயட் காரணமாக சில உணவுகளை தவிர்த்தால், அத்தகைய உணவுகளில் காணப்படும் சத்துகளைக் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம். நீங்கள் மிகவும் குறைவான கலோரி கொண்ட டயட்டில் இருந்தால், மல்டி -விட்டமின் மாத்திரைகளை பயன்படுத்த நிச்சயம் பரிசீலிக்கலாம்.

 

மாத்திரைகள் தேவைப்படும் உணவு முறைகள் மற்றும் உடல்நிலை

1. பால் பொருட்கள் சேர்க்காத டயட்டில் உள்ளவர்கள், கால்சியம் மற்றும் அதன் வலுக்கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

2. இறைச்சி முட்டை, பால் பொருட்களை உண்ணாத 'வீகன்' உணவர்களுக்கு விட்டமின் பி12 மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை ஈடுகட்ட மாத்திரைகள் அல்லது டானிக் எடுத்துக்கொள்ளலாம்.

3. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இரும்புச்சத்து எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். 35 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 4.8 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை உள்ளது. 12 சதவீத பேருக்கு மிகவும் குறைவான இரும்புச்சத்து உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரை அணுகவும்.

4. பெண்களில் கருவுற முயல்பவர்கள், முதல் 12 வாரங்களில் இருக்கும் கர்ப்பிணிகளும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். இது பிறக்கும் குழந்தைக்கு முதுகு நாண் பிறவி குறைபாடு உட்பட நரம்புக் குழாய் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

 

விட்டமின் சி மாத்திரைகள் - உயிரை காப்பதா? நேரத்தை வீண்டிப்பதா?

பல ஆண்டுகளாக குளிரை எதிர்கொள்ள மக்கள் விட்டமின்- சி உட்கொண்டு வருகின்றனர். இது எதிர் ஆக்சிகரணிகள் (antioxidant) என்பதானால், சிறந்த உணவாக பெயர் எடுத்திருக்கிறது. ஆனால், தொற்று., நோய் கடுங்குளிருக்கான அறிகுறிகள் ஆகியவற்றை தடுக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரமே உள்ளது. நம் உடல் அதிக அளவிலான வைட்டமின் சியை சேகரிக்க இயலாது. அதனால், நீங்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது, அதிக அளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

 

காய்கறிகளிலும் பழங்களிலும் விட்டமின்-சி பரவலாக உள்ளது. ஓர் ஆரஞ்சுப் பழத்தில் கிட்டத்தட்ட 70 எம்.ஜி உள்ளது. அதனால், குறைபாடு என்பது மிகவும் அரிதே.

 

எவ்வளவு விட்டமின்கள் உங்களுக்கு தேவை?

விட்டமின்களும் தாதுக்களும் தேவைப்படும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது உங்களின் வயது, செயற்பாடு அளவு, பாலினம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொறுத்தது.

 

விட்டமின்-டி தவிர நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் ஆரோக்கியமான சரியான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் பெற முடியும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.

 

ஆனால், பலரும் பரிந்துரை செய்யப்படும் அளவில் (Reference Nutrient Intakes - RNI) ஊட்டச்சத்துகளை உட்கொள்ளத் தவறுகின்றனர் என்று தேசிய திட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு காட்டுகிறது. அவர்கள் முறையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றவதை தவிர்த்து அவர்களே மல்டி-விட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.

 

நீங்கள் உரிய நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே உங்கள் உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி!

:-நன்றி -பிபிசி தமிழ்