விரைவில் சுத்தமாகும் வாயு மண்டலம்!

 அறிவியல் 


19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தொழிற்புரட்சி  காரணமாக பெரும், பெரும் தொழிற்சாலைகள் உலகெங்கும் தோன்றியதால் அளவுக்கு அதிகமான கரிவாயுப் புகைகளை காற்றுமண்டலத்தினுள் தொடர்ந்து தள்ளிக்கொண்டே வருகின்றோம். இந்த வேகத்தில் தொடர்ந்து செய்வோமேயானால் இன்னும் 50 வருடங்களுக்குள் சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சுவாயுக்கள் காரணமாக மனித இனம் படிப்படியாக அழிந்து போகும் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.

 

இந்த அச்சத்தினால், சக்தி உருவாக்கத்திற்காக கொடிய நச்சுப் புகை கக்கும் எண்ணெய், நிலக்கரி முதலிய பாரம்பரிய மூலப்பொருட்களை ஒதுக்கிவிட்டு, புகை அற்ற மாற்று வழி சக்தி உருவாக்கும் வழிமுறைகள் பலவும் பயன்பாட்டுக்கு வந்துகொண்டு இருக்கின்றன.

 

ஆனால், ஏற்கனவே மாசுபட்ட, மாசு பட்டுக் கொண்டிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் நச்சுக் கரி வாயுக்களை என்ன செய்வது?

 

கவலையே வேண்டாம்! உலகெங்கிலும் பல நாடுகள் கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS - Carbon Capture, Utilisation and Storage) என்னும் தொழில்நுட்பம் மூலம் எரிசக்தி துறையில் இருந்து நச்சு வாயு வெளியேற்றத்தை குறைக்க முயற்சிக்கின்றன.

 

இதன் மூலம் ஆலைகளில் இருந்து வெளிவரும் கரி வாயுவைப் பிரித்து எடுத்து சேமிக்கலாம். அத்தோடு வளி மண்டலத்திலிருந்தும்  நேரடியாகப் பிடித்து எடுத்தும் சேமிக்கலாம்.

 

சேமிக்கப்பட்டவைகளை,  குழாய்கள், வண்டிகள் மூலமாக ஒரு சேமிப்பு மையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு, இது மீண்டும் தரையில் செலுத்தப்பட்டு நுண்ணிய பாறை வடிவங்களாக மாற்றப்படுகின்றது.

 

இந்தக் கரிப் பாறைகள் எங்கே கழித்து சேமிக்கப்படுகின்றது தெரியுமா? எங்கு இருந்து வந்தார்களோ அங்குதான்! எண்ணெய் எடுக்கப்பட்டு வெறுமனே இருக்கும் நிலத்தடிக் குழிகள், நிலக்கரி எடுக்கப்பட்டு இருக்கும் சுரங்க வெற்றிடங்கள் முதலிய ஆழ் பூமியில் புதைத்து விடுகிறார்கள். கோடிக்கணக்கான வருடங்களின் பின் இவைகள் எண்ணெய்யாகவும், நிலக்கரியாகவும் மாறும்.

 

கரி வாயுவில் உள்ள கார்பன, ஐதரசன் வாயுவை ஒரு செயற்கை ஹைட்ரோகார்பன் எரிபொருளாக மாற்றவும் அல்லது பாலிமர்களாக மாற்றவும் பயன்படுகிறது. இது பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும் பசைகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை உருவாக்க பயன்படுத்தலாம்.

 

இந்தத் தொழில் நுட்பமானது ஏற்கனவே அமெரிக்கா , ஐரோப்பா, சீனா முதலி இடங்களில் அரச இணைவுடன் பல தொழில் துறைகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.

 

வெகு விரைவில் நாம் மாசற்ற காற்றினை சுவாசிப்போம் என்பதில் ஐயமே இல்லை எனலாம்.

- செ.சந்திரகாசன்


0 comments:

Post a Comment