சிரிக்க ...சில நிமிடம்



01.

நோயாளி : டாக்டர், தினமும் காலங்கார்த்தாலே... வயிறு ஒரேயடியா..... கூவுது!

டாக்டர் : அப்புடியா...ராத்திரியிலே...என்னதான்... சாப்பிடறீங்க??

நோயாளி : கோழி...குழம்பு...கோழி வறுவல்... சிக்கன் லெக்  இல்லேன்னா...பட்டர் சிக்கன்...சார்...

டாக்டர் : ஓஹோ....இனிமே...நீங்க...சேவல்...கோழி வேணாம்னு...பொட்டை ... கோழிய....வாங்கி சமைக்க சொல்லுங்க...இல்லாட்டி....ஊமை..கோழியா...பாத்து வாங்கணும்...

 

02.

டைரக்டர் : நம்ம படத்துக்கான பாடல் காட்சியை ஃபாரின்லே எடுக்கப் போறேன்னு சொன்னா, ஏன்யா... சிரிக்கறே?

அசிஸ்டன்ட் டைரக்டர் : ரெண்டையுமேவா.....ன்னு...நெனச்சேன்...சார்...கதையையும் அங்கிருந்துதானே சார் சுட்டோம்....!

 

03.

காதலி : பீச்சுக்கு இவ்வளவு லேட்டாவா வர்றது?

காதலன் : என்ன விஷயம்?

காதலி : ஒரு பிச்சைக்காரன் யாரும் இல்லாத நேரத்தில் என்கிட்டே வந்து லவ் யூன்னு சொல்லிட்டுப் போறான்..!.....நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன்......!!!???

 

04.

ஒருவன் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மற்றவன் : பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.

 

05.

டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?

நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..

டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?

நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!

 

06.

ராமன் : ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

சோமன் : எப்படி?

ராமன் : என் மனைவியை நான்ஆசைப்பட்டுத் தானே... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 

07.

ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?

மாணவன் : லுங்கி கட்டினார்.

ஆசிரியர் : !!

 

08.

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.!!!

 

09.

வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?

குமார் : சார், லவ் யூ

யூ லவ் யுர் டாட்டர்

சோ, லவ் யுவர் டாட்டர். கரெக்ட்டா சார்?

 

10.

தொண்டன் : வன்முறைக்குப் பள்ளியில் இடம் தராதீர்கள்னு ஒரு பள்ளிக்கூடத்தில் போய்ப் பேசினீங்களா தலைவரே

தலைவர் : ஆமாம் என்ன ஆச்சு

தொண்டன் : எந்த வகுப்புல வன்முறைக்கு அட்மிஷன் தரக் கூடாது ?-ன்னு ஹெட்மாஸ்டர் கேட்கிறார்.

 

11.

ஒருவன் : நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?

மற்றவன் : இடைவேளை நல்லா இருந்தது...!

 

12.

ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?

மாணவன் : நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .. ..

 

13.

விடலை : நம்ம ஊருக்கும் கரண்டு வந்துட்டா நாமும் பட்டணத்துக் காரங்க போல அனுபவிக்கலாம்...

பெருசு : என்னாத்த அனுபவிக்கிறது????

விடலை : வேற எத? "பவர்கட்"டத் தான்!

 

14.

வீட்டுக்காரர் : உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா! பாரேன், தொந்தி கூட வந்தாச்சு.

வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.

 

16.

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?

தம்பி : டாக்டர் தான் 'அறை(1/2)மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

 

17.

நண்பர் 1 : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

 

18.

தேனு : சாதா தோசை ரவாதோசை .. சரி ! அதென்ன கூட்டணிதோசை-னு போர்டு வெச்சிருக்கிங்க ?

இட்லிக்கார் : அதுவா ! பழைய மாவு , புளிச்ச மாவு , மீந்துபோனது.. எல்லாத்தையும் கலந்து சுட்டதுதான் !

 

19.

ஒருவர் : வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.

டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?

ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.

 

20.

நோயாளியின் மனைவி : என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?

டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு

 தொகுப்பு:செமனுவேந்தன் 

COMEDY,JOKES,NAKACHCHUVAI,SIRIPPU

 

No comments:

Post a Comment