கி.பி. மூன்றாம்
நூற்றாண்டின் இறுதியளவில், பெருமளவு பிரம்மி எழுத்துக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
இந்த எழுத்துக்களை ஒரு வேளை புரொட்டோ [தொல்] - சிங்கள எழுத்துக்கள் எனக் கூறலாம்?. மேலும் அனுராதபுர காலம்
[கிமு 377–கிபி 1017] முடிவடையும் சமயத்தில் -
பாளி மற்றும் சமஸ்கிருத சொற்களுக்குச் சமமாக சிங்கள மொழியிலும் அதிக உயிர் மெய்
எழுத்துக்கள் தோன்றின. என்றாலும் இவற்றின் பழைய பிரதிகள் எதுவும் இதுவரை
கிடைக்கவில்லை, தற்போது பாதுகாக்கப்படும் புராதன சிங்கள
கையெழுத்துப் பிரதி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். பொலன்னறுவைக் காலத்தில்
[கிபி 1017 - கிபி 1236]
ந, ம, வ, ல, க, ஐ, ட, ம, ர போன்ற எழுத்துக்கள் தோன்றவில்லை என்பதும் குறிப்பிடத்
தக்கது. அதன் பின்பே அவை தோன்றின. 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், அதாவது, கோட்டை தலைநகரமாக இருந்த காலத்தில் தான், சிங்கள மொழி ஒரு ஸ்திர நிலை
ஒன்றை அடைந்தது எனலாம். அத்துடன் சிங்களமொழி பெரும்பாலும் தமிழ் மொழியுடன் ஒத்து
இருக்கிறது. இந்த ஒப்புமையை இரண்டு மொழிகளிலும் வழங்கப்படுகின்ற பெயர்ப்பகுதிகள் - வினைப்பகுதிகள் - இடைநிலைகள்
- உரிச்சொற்கள் முதலிய பிரதான மொழிக்கூறுகளிலும் வசனங்கள் அமைந்து உள்ள முறையிலும்
ஆய்ந்து அறியலாம். மேலும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையிலான உறவு என்பது நீண்டு
படர்ந்து இருப்பதை காணலாம். இதில் தமிழ் மொழி, விஜயன் இலங்கைக்கு வரும்
முன்பே சிறப்புற்று விளங்கியது குறிப்பிடத் தக்கது. இன்று மதுரைக்கு அருகில் உள்ள
தொல்லியல் பகுதியான கீழடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள
கொடுமணல் போன்ற அகழாய்வுகள் தமிழின் சிறப்பை இன்னும் பின்னோக்கி நகர்த்துகிறது, அது மட்டும் அல்ல, சிந்துவெளி நாகரிகத்துடன்
இதன் தொடர்பையும் எடுத்து காட்டுகிறது. ஆகவே கட்டாயம் சிங்களம் தமிழ் மொழியில்
இருந்து மேலே கூறிய பலவற்றை பெற்றது உறுதியாகிறது. அத்துடன் சிங்களம் அவற்றைப்
பெற்று வளர்ச்சி பெற்று இருக்கும் என்றால் தமிழின் தாக்கம் இலங்கையில் பண்டைய
காலத்தில் எவ்வளவு தூரம் இருந்து இருக்கும் என்பதும் நாம் சொல்லத்தேவை இலை. அதை
சிங்கள மொழியே சொல்லும்
வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை]
மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே
இருந்து கி பி 300 ஆண்டு வரை
இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு
காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக்
கலந்து, மலையாளம் என்ற
தனி மொழி பிறந்தது. இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும்
குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை
பத்தினி தெய்வ வழிபாடு [கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம்
அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு, தெற்கு
சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம்
செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in
the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system].
மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி
பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist
traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு
வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும்
அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில்
இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு
என்கிறார் [two
trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara
(the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி
தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala
songs related to the Pattini cult were originally in Tamil].
மகாவம்சம் / முதல் அத்தியாயம் / புத்தர் வருகை [THE MAHAVAMSA / CHAPTER I / THE VISIT OF THE TATHAGATA] இல், "தர்மத்தைப்
போதிப்பதற்காகத் தாமே அங்குப் புறப்பட்டார். தமது மார்க்கம் பிற்காலத்தில்
புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது.
அப்போது இலங்கையில் இயக்கர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களை அங்கிருந்து முதலில்
விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்..... அப்போது தீவிலுள்ள எல்லா இயக்கர்களும் அந்த
இடத்தில் கூடியிருந்தனர். இந்த இயக்கர்களின் பேரவைக் கூட்டத்துக்கு பகவன் புத்தர்
சென்றார். அங்கு கூட்டத்தின் நடுவில், அவர்களுடைய தலைக்கு மேலாக, பிற்காலத்தில் மஹியங்கனை
தூபம் அமைந்த இடத்தில், அவர் வானத்திலே நின்றார். வான வெளியில் இருந்து மழையையும், புயலையும் இருளையும்
உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினர். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட
இயக்கர்கள் தங்களுடைய பயத்தைப் போக்குமாறு வேண்டினர். மிரண்டு போன இயக்கர்களைப்
பார்த்து பகவன் புத்தர், 'இயக்கர்களே ! உங்களுடைய இந்த பயத்தையும் துயரத்தையும்
போக்குகிறேன். இங்கே நான் உட்காருவதற்கு ஒர் இடம் கொடுங்கள் ' என்று கூறினர்" [ at the full moon of Phussa,
himself set forth for the isle of Lanka, to win Lanka for the faith. For
Lanka was known to the Conqueror as a place where his doctrine should
(thereafter) shine in glory; and (he knew that) from Lanka, filled with the
yakkhas, the yakkhas must (first) be
driven forth.... there was a great
gathering of (all) the yakkhas dwelling in the island. To this great gathering
of that yakkhas went the Blessed One, and there, in the midst of that assembly,
hovering in the air over their heads, at the place of the (future) Mahiyangana-thupa,
he struck terror to their hearts by rain, storm, darkness and so forth.
The yakkhas, overwhelmed by fear,
besought the fearless Vanquisher to release them from terrors, and the
Vanquisher, destroyer of fear, spoke thus to the terrified yakkhas: 'I will banish this your fear and your distress, O
yakkhas, give ye here to me with one accord a place where may sit down]. தான் அமர, தன் கொள்கையைப் பரப்ப, இலங்கையில் வாழ்ந்த
இயக்கர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெருட்டி, பயமுறுத்தி கலைத்தார்
என்று இங்கு பெருமையாக வர்ணிக்கப்படுகிறது.
-:கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
பகுதி: 11 தொடரும்…அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக
ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:
0 comments:
Post a Comment