சிரிக்க...சில நிமிடம்

சர்தார்ஜி ஜோக்ஸ்



🚆ரயிலில் பிரயாணம்

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து களைத்து, கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார்  டிக்கெட் பரிசோதகர்.

 

🚗சிறந்த டிரைவர்..?

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் ,

சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'

சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'.

 போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

 சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க,

உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

 

🌜எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்!

தில்லியில் இரண்டு சர்தார்ஜிகள் சந்தித்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி மற்றவரிடம் கேட்டார்

" இங்கிருந்து சென்னை அதிக தூரமா?, இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா?"

" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்"

" சென்னை தான் அதிக தூரம், ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா?"

 

👉தொகுப்பு:செ மனுவேந்தன்

No comments:

Post a Comment