சிரிக்க...சில நிமிடம்

 





01.

அப்பா : ஏண்டா நான் பாங்குக்கு போகசொன்னேன், கையி கிளவ்ஸ் மாட்டிகிட்டு இருக்கியே, என்ன விஷயம்?

பையன் : நீங்க தானே கரன்ட் அக்கவுண்ட்ல பணம் எடுக்க சொன்னீங்க

 

02.

ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு, மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ, அவன் ஒரு முட்டாள். புரியுதா?

மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...

ஆசிரியர் : …??

 

03.

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

 

04.

நண்பர்-1 :நான்  'செக்காலை' வைச்சு தொழில் பண்ணினது தப்பாப் போச்சு!

நண்பர்-2 : ஏன், என்னாச்சு?

நண்பர்-1 : என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சால் , எந்த நேரமும்  அந்தப் பொண்ணையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.

 

05.

நபர் 1 : நான் கோவிலுக்குள்ள போனா மட்டும் அதிகமாபொய்' பேசுவேன்...

நபர் 2 : ஏன் அப்படி..?

நபர் 1 : சன்னிதானத்துல நிக்கும் போதுமெய்' மறந்துடுவேன்... அதான் !!! ..

 

06.

சேல்ஸ் மேனேஜர் : உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

இன்டெர்வியுக்கு சென்றவர் : ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

 

07.

நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி : ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

 

08.

நபர் 1 : அது என்ன கோல்ட் சாம்பார்?

நபர் 2 : அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....

 

09.

நபர் 1 : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?

நபர் 2 : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

 

10.

பெண் : டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.

டாக்டர் : நீங்க ஏன் அவரைப் பார்க்கறீங்க?

 

11.

அப்பா : எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன் : ஒன்னே ஒண்ணுதான்!

அப்பா : ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன் : மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

 

12.

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

 

13.

டாக்டர் : இனிமே....நீங்க குடியை ..சுத்தமா...நிறுத்தனும்....

நோயாளி : ஏன் ...டாக்டர், ரொம்பக்குடிச்சா, கிட்னி கெட்டுப் போயிடுமா?

டாக்டர் : ஆமாஎங்களுக்கும்  நல்ல ரேட் கிடைக்காது…!வாங்குறவனும்...நல்ல கிட்னியா குடுங்கன்னு...பாடாய் படுத்தி வெக்கிறானுங்க..

 

14.

மாணவன் மாயா : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."

மாணவன் போயா : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."

மாணவன் மாயா : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"

 

15.

நோயாளி : டாக்டர், தினமும் காலங்கார்த்தாலே... வயிறு ஒரேயடியா..... கூவுது!

டாக்டர் : அப்புடியா...ராத்திரியிலே...என்னதான்... சாப்பிடறீங்க??

நோயாளி : கோழி...குழம்பு...கோழி வறுவல்... சிக்கன் 65 இல்லேன்னா...பட்டர் சிக்கன்...சார்...

டாக்டர் : ஓஹோ....இனிமே...நீங்க...சேவல்...கோழி வேணாம்னு...பொட்டை ... கோழிய....வாங்கி சமைக்க சொல்லுங்க...இல்லாட்டி....ஊமை..கோழியா...பாத்து வாங்கணும்...

 

16.

டைரக்டர் : நம்ம படத்துக்கான பாடல் காட்சியை ஃபாரின்லே எடுக்கப் போறேன்னு சொன்னா, ஏன்யா... சிரிக்கறே?

அசிஸ்டன்ட் டைரக்டர் : ரெண்டையுமேவா.....ன்னு...நெனச்சேன்...சார்...கதையையும் அங்கிருந்துதானே சார் சுட்டோம்....!

 

17.

அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!

 

18.

நோயாளி : டாக்டர், அடிக்கடி கனவுல ஒரு நடிகை வர்றாங்க!

டாக்டர் : நல்ல விஷயத்தை ஏன் வருத்தமா சொல்றீங்க?

நோயாளி : கூடவே ஒரு சாமியாரும் வர்றாரே டாக்டர்!

டாக்டர் : சரி..இப்போ நான் என்ன பண்றது...தூக்க மாத்திரை எழுதி தரவா...?

நோயாளி : வேணாம்...சார்...அந்த..சாமியாரை... மட்டும்...வரவிடாம..பண்ணனும்...சார்...

 

19.

டாக்டர் : உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு

சர்தார் : என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!

 

20.

பிச்சைக்காரன் : - டாக்டரையா..! டாக்டரையா..! நம்ப வாடிக்கை வீட்டிலெயெல்லாம் தீபாவளி ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு வயித்தை என்னமோ செய்யுதே...!

டாக்டர் : - என்ன வேணும்

பிச்சைக்காரன் : - ஏதாச்சும் மாத்திரை தர்மம் பண்ணுங்க டாக்டர்...!

தொகுப்பு:செ .மனுவேந்தன்

 

No comments:

Post a Comment