"இந்தப் புன்னகை என்ன விலை!" [குமரியின்]
"இதயம் நாடும் உன் பண்பும்
இச்சை தரும் உடல் அழகும்
இடை சிறுத்த கொடி வடிவமும்
இன்பம் கொட்டி என்னை தழுவுது!"
"இதலை வருடி மார்பில் சாய
இறுக அணைத்து முத்தம் தர
இமை மூடி இணக்கம் சொல்லும்
இந்தப் புன்னகை என்ன விலை!"
(இதலை - கொப்பூழ் / Navel)
"இந்தப் புன்னகை என்ன விலை!" [குழந்தையின்]
"இளமையும் குறும்பும் போட்டி போடும்
இனிமை தளும்பும் அழகு விழிகள்
இமை விரித்து அன்பு கொட்டி
இதயம் பறித்து மழலை பேசுது!"
"இராவணன் மீட்கும் யாழிசை போல்
இன்பம் தரும் குதலை மொழியில்
இராகம் ஒன்றை தானே இயற்றும்
இந்தப் புன்னகை என்ன விலை!"
(குதலை - குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு)
-:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
No comments:
Post a Comment