சுருக்கமான பார்வை
'காட்டேரி' விமர்சனம் [Kaatteri Cinema Tamil Movie Review]:
டிகே இயக்கத்தில் வைபவ் ரெட்டி, ஆத்மிகா, வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பஜ்வா என பலர் இணைந்து நடித்திருக்கும் திகில் - காமெடி - திரில்லர் திரைப்படம். கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, எஸ்.என். பிரசாத் இசையமைத்துள்ளார்.
புதையல் தேடி ஒரு கிராமத்தை அடைந்த நாயகன் பேய்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவர் கிராமத்தை விட்டுத் தப்பும் ஒவ்வொரு முறையும் மீண்டும் கிராமத்துக்குள் மாட்டிக்கொள்கிறார்.இறுதியில் இவர் தப்பித்தாரா? இல்லையா? இறுதியில் புதையல் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
எடுபடாத நகைச்சுவை, சலித்துபோன கதைக்களம், ஒர்கவுட் ஆகாத திகில் காட்சிகள் (2/5)
📽📽📽
'குருதி ஆட்டம்' விமர்சனம் [ Kuruthi Aattam Cinema Tamil Movie Review]:
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதர்வா ஒரு கபாடி வீரர். இவரது கபடி அணியை வெல்ல பல எதிரணிகள் முயல்கின்றன.ஊரில் பெரிய ரவுடி பெண் தாதா ராதிகா. அவரின் மகன் மற்றும் கூட்டாளிகளுடன் அடிக்கடி அதர்வாவுக்கு மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வெட்டு குத்து வழக்கில் அதர்வா கைதாகிறார்.அப்போது ராதிகாவின் மகனே அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார். இதனால் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர். இவர்களின் நட்பை பிடிக்காத ஒரு கும்பல் அதர்வாவின் நண்பனை கொன்றுவிடுகிறது. மேலும் ராதிகாவை கொல்லவும் சிலர் திட்டமிடுகின்றனர்.தன் நண்பனை இழந்த அதர்வா என்ன செய்தார்? அவர்கள் கொல்ல என்ன காரணம்? அவரது பின்னணியில் யார் என்பதே மீதி கதை
சொதப்பல், சலிப்பு, கடுப்பேற்றல் நிறைந்த படம் [2.25/5]
📽📽📽
'விக்டிம்'விமர்சனம் [ Victim Cinema Tamil Movie Review]:
வெங்கட் பிரபு, ராஜேஷ், பா. ரஞ்சித், சிம்பு தேவன் இணைந்து இயக்கிய , நான்கு வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் பிரசன்னா, அமலா பால், பிரியா பவானி ஷங்கர், நாசர் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
தம்மம்-மனிதர்கள் பகுத்தறிவற்ற விலங்குகளாக மாறும்போது, எந்த பகுத்தறிவும் இல்லாமல், மனித நிலையின் இயல்புநிலை தன்மையை கதை உணர்த்துகிறது.
மிர்ரேஞ்ச்- பணிப்பெண்ணின் மொத்த குடும்பமும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வீட்டில் குடியேறும் நாயகன்.பின் நடப்பவை வழமையான பேய்க் கதை.
கோட்டை பாக்கு வத்தலும்..மொட்டை மாடி சித்தரும்!- ஒரு சில வெற்றிலைகளை அரைப்பதால், 400 வயது மதிக்கத்தக்க ஒரு ஆன்மீக குரு தனக்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கையில் ஒரு செயலை செய்கிறார் நாயகன்.இதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
கன்ஃபெஷன்-அமலா பால் மற்றும் பிரசன்னா இரட்டை வாழ்க்கை வாழ்வதை பற்றி பேசியுள்ளார் இயக்குனர். தனித்து இருக்கும் அமலாபால், அவளை கொலை செய்ய வருகிறார் பிரசன்னா. மங்காத்தா விளையாட்டை போல இதுவும் சுவாரஸ்யம் தான்.
முதல் மற்றும் கடைசி படம் கட்டாயம் அனைவரின் பாராட்டையும் பெரும்.[2.75/5]
📽📽📽
பொய்க்கால் குதிரை விமர்சனம் [ Poikkal Kuthirai Cinema Tamil Movie Review]:
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என பலர் நடிப்பில் வெளிவந்த படம்.
விபத்தில் பிரபுதேவா தன்னுடைய காலை இழந்து விடுகிறார்.பிரபுதேவாவின் மகளுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய 70 லட்ச ரூபாய் பணம் தேவை.சிறையில் இருக்கும் பிரபுதேவாவின் தந்தை உதவ வருகிறார். ஆனால்,அதற்கு அவர் ஒரு குழந்தையை கடத்த திட்டத்தை போட்டுக் கொடுத்து இதை செய்தால் பிரபுதேவாவிற்கு பணம் தருவதாக கூறுகிறார். தன் குழந்தைக்காக பிரபுதேவா கடத்தல் தொழிலை செய்தாரா? அதனால் அவர் சந்தித்த பிரச்சனை என்ன? இறுதியில் பிரபுதேவா தன் குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
பொய்க்கால் என்பதாலோ தடுமாற்றம் அதிகம் [2.25/5]
📽📽📽
'சீதா ராமம்' விமர்சனம் [ Sita Ramam Cinema Tamil Movie Review]
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா என பலர் இணைந்து நடித்திருக்கும் காதல் திரைப்படம். வய்ஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னம் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இந்திய ராணுவவீரர் சீதா என்ற பாகிஸ்தான் பெண் எழுதிய காதல் கடிதம் கண்டு முகவரி தெரியாத அவர் மீது காதல் வயப்படுகிறார்.அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஃப்ரீன் என்ற கதாபாத்திரம் ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வார். ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் கொடுத்தாரா அஃப்ரீன். ராமுக்கு என்ன ஆனது, ராம் சீதா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் சீதா ராமம் படத்தின் கதை.
மெதுவாக நகர்ந்தாலும் ரசிக்கலாம் [3.5/5]
📽📽📽
தொகுப்பு :செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment