"மெழுகுவர்த்தி"
"தன்னை வருத்தி உலகத்துக்கு வழிகாட்டும்
தன்னலம் அற்ற தலைவன் போல் ...
உன்னை உருக்கி இருள் அகற்றி
உயிருக்கு பாதுகாப்பாய் இரவில் எரிந்து ...
தியாகம் என்றால் என்ன வென்று
திடமாக காட்டும் நீதான் மெழுகுவர்த்தி!"
"கண்ணுக்கொரு_கடுதாசி_போட்டேனே!"
"கண்மணி உன்னை நினைத்து ஏங்கி
ஊண் உறக்கம் இன்றித்
தவித்து
எண்ணத்தில் மூழ்கிக் கனவில் தழுவி
வண்ண வண்ண ஓவியம் தீட்டி
கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே புள்ளே!"
"அத்த பெத்த மனசுக்குப் புடிச்சவளே
ஆத்தங் கரையில பயித்திமாக் திரிந்து
கத்தை கத்தையாகக் காதல் வரைந்து
முத்தம் பல இதழால் பதித்து
பித்தம் ஏறுதடி படிச்சியா ஓலை?"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment